புத்தகம் இல்லாத அறை, உயிரில்லாத உடலுக்கு ஒப்பானது

புத்தகம் இல்லாத அறை, உயிரில்லாத உடலுக்கு ஒப்பானது

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!
– ஜூலியஸ் சீசர்

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே

என் வாழ்வை மாற்றியது முன்னேற்றியது எது என்று நீங்கள் கேட்டால் நான் மரணித்தால் எழுந்து சொல்வேன் புத்தகம் என்று

புது + அகம் = புத்தகம்

உங்கள் உள் உருவாகும் புது அகம் தான் புத்தகமே புறத்தில் மாற்றம் வேண்டும் என்றால் முதலில் அகத்தில் மாற்றம் வேண்டும் அக மாற்றத்திற்கு மிக எளிய வழிமுறை புத்தகம் தான்

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
– சிக்மண்ட் ஃப்ராய்ட்

என்னை மெருகு ஏற்றுவது புத்தகம் தான் ஆதலால் தான் தொடர்ந்து புத்தகம் படிக்க வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் பதிவு செய்கிறேன்

மனிதர்களை நல்வழிப்படுத்த புத்தகம் சிறந்த வழிகாட்டியாகவும், நண்பனாகவும் திகழ்கிறது. அதனால் தான் ‘ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’ என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில்.

நான் எந்த புத்தகத்தை படித்தாலும் அந்த புத்தகத்தின் நபரை என் அருகில் காணும் சூழுல் எனக்கு ஏற்படும் சுவாமி விவேகானந்தர் பற்றிய புத்தகத்தை ராமகிருஷ்ணா மிஸ்ஸானில் வாங்கி படிக்க ஆரம்பிக்கும் பொழுது என் அருகே என் மானசீக குரு

சுவாமி விவேகானந்தர் புன்னகையுடன் அமர்ந்து இருப்பார் நான் பய பக்தியுடன் படிப்பேன்

பேச்சில் இருந்துதான் புத்தகங்கள் உருவாகின்றன. ஆனால், புத்தகங்கள்தான் பேச்சை வாழ வைக்கின்றன.

விதைக்குள் ஒளிந்திருக்கும் விருட்சகம் போல, ஒவ்வொரு புத்தகமும் பல்வேறு எண்ணங்களையும், உணர்வுகளையும், கற்பனைகளையும் கனவுகளையும் அச்சு வடிவில் தன்னகத்தே ஒளித்தே வைத்துள்ளது.

இந்த புத்தகத்தை வாங்க விரும்பினால்:https://www.drstaranandram.com/product/maya-visai-book/

டார்வின் பரிணாம வளர்ச்சி, காரல்மார்க்ஸ் கம்யூனிஸ்டு அறிக்கை, மூலதனம், சிக்மன் பிராய்டு கனவுகளின் விளக்கம் - இவை படித்தவர்களை அதிகமாகப் பாதித்துள்ளது போல - படிக்காதவர்களையும் பாதித்திருக்கிறது.
புத்தகப் படிப்பு என்பது மனக் கசடுகளை அகற்றி மனத்தை நெகிழ வைக்கிறது. உண்மையை உணரவும், பேசவும், எழுதவும் தைரியம் அளிக்கிறது.

பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ…
– மாசேதுங்

மகாத்மா காந்தி மேற்கொண்ட அகிம்சை, சத்தியாகிரகம், ஒத்துழையாமை- எல்லாம் அவர் புத்தகப் படிப்பு வழியாகப் பெற்றவைதான். மூன்று புத்தகங்களை அவரே குறிப்பிடுகிறார்.
ஆங்கிலேயரான ஜான்ரஸ்கின் எழுதி கடையனுக்கும் கடைத்தேற்றம் , இரண்டாவது, ஹென்றி டேவிட் தோரோ &
மூன்றாவது, ரஷிய ஞானி லியோ டால்ஸ்டாய், ரஷிய மொழியில் எழுதிய 'இறைவன் சாம்ராஜ்யம் உங்களுக்குள்ளே இருக்கிறது'.

இன்று பெரும்பாலானோர் தூக்கமின்மையால், மன அழுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவற்றிற்கு அரிய மருந்து புத்தகங்கள் தான் என்றால் மிகையில்லை. ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது, நிச்சயம் அதில் மூழ்கிப் போகாமல் வாசகனால் இருக்க முடியாது. எனவே மனதை ஒருமுகப்படுத்த புத்தக வாசிப்பை விட அருமருந்து வேறொன்றுமில்லை எனலாம். புத்தகம், தனிமை துயர் தீர்க்கும் மாமருந்து

‘போதும் என்று நொந்துபோய் புதுவாழ்க்கையைத் தேடுகிறீர்களா, ஒரு புதிய புத்தகத்தை வாசிக்கத் தொடங்கு’ என்கிறார் இங்கர்சால்.

புத்தர், சாக்ரடீஸ், ஏசு எல்லாம் புத்தகங்கள் எழுதவில்லை. பேசிக் கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் பேச்சு பின்னால் எழுதப்பட்டு புத்தகங்களாயின. அவை காலம் காலமாகப் படிக்கப்படுகின்றன. அப்படித்தான் ஜே. கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ போன்றோரும்.
படிப்பு என்பது பயிற்சி இல்லை. அது சத்தமாகப் படித்தாலும் சரி, மெளனமாகப் படித்தாலும் சரி மனிதர்களின் மனத்திற்குள் ஆழப் பதிந்து விடுகிறது. சில நேரங்களில் தவறுகள் செய்வதை, குற்றம் இழைப்பதைப் படித்த நூல் தடுத்து விடுகிறது. கருத்துகள் ஒருவனின் ஆழ்மனத்திற்குள் நுழைந்து அவனை புதிய மனிதனாக மாற்றிவிடுகிறது. அதுதான் புத்தகம் என்பதின் மகத்துவம்.

இந்த புத்தகத்தை வாங்க விரும்பினால்: https://www.drstaranandram.com/product/மந்திரம்-star-anand-ram/

தேவர்க் குறளும் திருநான் மறைமுடியும்:

       மூவர் தமிழும் முனி மொழியும்

       கோவைத் தமிழும் திருவாசகம் சொல்லும்

       ஒரு வாசகம் என்றுணர்

 ஒரு மனிதன் தன் வாழ்வில் அவசியம் கொண்டிருக்க வேண்டியது கல்வி. கல்வியினைச் சிறப்பித்து பல அறிஞர்கள் பாடியுள்ளனர். மேலும், நம்முடைய இந்து மதத்தில் கல்விக் கடவுள் வாணியை மும்மூர்த்திகளில் முதலாமவராக நம் ஞானிகள் குறிப்பிடுகின்றனர். “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே”என்பது ஔவை வாக்கு. ஆக, நாம் பொருள் படைத்திருக்காவிடிலும் கல்விச் செல்வம் பெற்றிருக்க வேண்டும் என்று புலப்படுகிறது. 

கிரேக்க அறிஞர் “பிளட்டோ”, “கற்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே மேல். ஏனென்றால், கல்லாமைதான் தீவினையின் மூலவேர்

புத்தகம் என்பது காரிருளில் செல்பவர்களுக்கு பேரொளியாகவும், வழி தவறியவர்களுக்கு ஓர் வழிகாட்டியாகவும் திகழ்கின்றன. உலகின் பெரிய மாமேதைகள் அனைவருமே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தின் மூலம் உருவானவர்களே. இன்றைய நாளில் புத்தகம் வாசிப்பு என்பது மிகவும் குறைந்து உள்ளது.

இன்றைய குழந்தைகள் அனைவருக்கும் புத்தகம் வாசிப்பது குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் தெரியபப்படுத்தி புத்தகங்கள் பயில தூண்டுதல் வேண்டும். ஒருவர் பயிலும் சிறந்த புத்தகமே அவரின் சிறந்த நண்பர்களாக திகழ்கின்றன.

நமது ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்கி அறிவை மேம்படுத்த செய்வதில் புத்தகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. புத்தகங்கள் என்றால் தேவையற்ற புத்தகங்களை வாசிப்பது அல்ல. அறிவியல் நூல்கள், மாமேதைகளின் சரித்திர நூல்கள், சமய நூல்கள் போன்ற அறிவு பசிக்கு தீனி போடும் நூல்களை பயில்தல் வேண்டும்.

வாசிப்பு பழக்கத்தை உண்டாக்கி கொள்வதன் மூலமே இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்களாய் பரிணமிக்க முடியும். புத்தகங்கள் குறைவாக கிடைத்த காலங்களில் பல அறிஞர்கள் உருவாகினாலும் அவர்கள் வாசிப்பதற்கு போதிய நூல்கள் இல்லை. இன்று புத்தகங்கள் நிறைய இருப்பினும் வாசிப்பதற்கு யாரும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மனிதனை அறிவுள்ளவனாய், பூரணத்துவம் பெற்றவனாய் மாற்றுவதில் புத்தகங்கள் மட்டுமே நற்பலனை தருகின்றன.

இந்த புத்தகத்தை வாங்க விரும்பினால்: https://www.drstaranandram.com/product/கனவு-வீடு/

புத்தக வாசிப்பின் பயன்கள் :

புத்தகங்கள் வாசிப்பதன் வாயிலாக ஒருவரின் சிந்தனை திறன் மேலோங்கும், சொல் வளமும், கற்பனை வளமும் பெருகும். எது குறித்தும் எவரிடமும் தயக்கமின்றி பேசமுடியும். தனிமையில் சிக்குண்டு தவிப்பதை தவிர்த்து விடும். மன அழுத்தத்தை குறைக்கிறது. உலகின் பல மொழிகளிலும் எண்ணற்ற புத்தகங்கள் உள்ளன. அவை அவரவர் உள்ளூர் மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் தரப்படுகின்றன. உலகின் பல கலாசார மற்றும் அறிவியல் தகவல்களை அறியவும், இலக்கிய சிந்தனையை விரிவுபடுத்தி கொள்ளவும் புத்தகங்களே பங்களிப்பு செய்கின்றன.

துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவைவிட வீரியமான ஆயுதம் புத்தகம்’ என்கிறார் மார்ட்டின் லூதர்கிங்.

துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவைவிட வீரியமான ஆயுதம் புத்தகம்’ என்கிறார் மார்ட்டின் லூதர்கிங்.

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான்’ என்றாராம் மார்டின் லூதர்சிங்.
‘உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்…!’ என்பது டெஸ்கார்ட்ஸ்-ன் அறிவுரை.

இந்த புத்தகத்தை வாங்க விரும்பினால்: https://www.drstaranandram.com/product/kongu-7-shiva-sthalangal-book/

புத்தக வாசிப்பு என்பது ஓடும் நதியைப்போன்றது. ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும். ஒரு முறை வாசிப்பின் ருசி கண்டவர்கள் நிச்சயம் அதில் இருந்து வெளிவர விரும்ப மாட்டார்கள்.

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
-ஆபிரகாம் லிங்கன்

உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..
– டெஸ்கார்டஸ்

போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…
– இங்கர்சால்

சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
– பிரான்சிஸ் பேக்கன்

புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
– லெனின்

உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
– ஆஸ்கார் வைல்ட்

ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தைத் தொடங்கி வைக்கிறான்…

வாசகன் அதனை முடித்து வைக்கிறான்.

புத்தகம் இல்லாத அறை, உயிரில்லாத உடலுக்கு ஒப்பானது’ என்கிறார் சிசரோ.

இந்த புத்தகத்தை வாங்க விரும்பினால்:https://www.drstaranandram.com/product/108-செல்வ-பரிகாரங்களும்-பலன/
Back to blog