Sale!

கொங்கு ஏழு சிவஸ்தலங்கள் | Kongu 7 Shiva Temple book

140.00

Category:

கொங்கு ஏழு சிவஸ்தலங்கள்

தமிழில் தலைசிறந்த சங்கப் புலவர்களில் ஒருவராக அறியப்படும் இறையனார் ஆதிசித்தன் சிவனே

” கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி… ”

என ஆரம்பிக்கும் குறுந்தொகைப் பாடலை எழுதி பாண்டிய மன்னனின் ஐயம் போக்க தருமி மூலமாக தூது அனுப்பினார் இறையனார். சிவன் கொங்கு என்னும் சொல் பூவில் மகரந்தத்தை பொருள் அளித்தாலும் மகரந்தத்தை கொங்குநாட்டின் திரும்பும் திசை எல்லாம் சிவ மணம் கமழ்கிறது இறையனார் சிவனின் இறை மனம் அழைக்கிறது.

குறிப்பாக கொங்கு நாட்டில் அமையப் பெற்ற ஏழு சிவ ஸ்தலங்கள் ரகசியங்களும் அற்புதங்களும் ஆகியவை இப் பகுதியில் பல கோயில்கள் அமையப் பெற்றாலும் தேவாரம் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் சூட்சுமங்கள் நிறைந்த காலம் கடந்த பக்தி சிறக்க திகழ்கிறது

கொங்கு நாட்டில் அமையப்பெற்றது ஏழு சிவஸ்தலங்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் ஈரோடு ஆதினம் திரு பாலாஜி சக்தி அவர்கள் இந்த தளங்கள் குறித்து நான் முதலில் கேள்வி பட்டவுடன் எனக்கு வியப்பும் மகிழ்வும் உண்டாகின உடனே இந்த ரகசியத்தை பணவளக்கலை அன்பர்களுக்கு மற்றும் எல்லா அன்பர்களுக்கும் அறிந்து சிவனருள் பெற்று சிறப்புடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டேன் வருடத்தில் குறிப்பிட்ட கார்த்திகை சோமவாரம் திங்கட் கிழமை நாளில் இந்த தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டுமென நினைத்தேன் ஈரோடு ஆதினம் அவர்கள் நம் மீது மிகுந்த அக்கறைகொண்டு ஏழுவிதமான திருத்தலங்களில் வேறுவிதமான சூட்சும ரகசியங்களை நமக்கு எடுத்துரைத்தார்.

ஈரோடு ஆதீனம் அவர்கள் எனக்கு ஈரோடு வள்ளலார் புத்தக நிலையம் திருமணி கிருஷ்ணா மூலம் எனக்கு அறிமுகமானார். அவரிடம் ஆசி வாங்கிய பிறகு யாத்திரை குறித்து தகவல்களை விசாரித்தோம் அப்போது அவர் கடந்த20 வருடங்களுக்கு மேலாக கொங்கு 7 ஸ்தலங்கள் யாத்திரை சென்று கொண்டிருப்பதாகவும் இதை நாங்கள் செய்ய வேண்டும் மேலும் யாத்திரை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த சூட்சும ரகசியங்களை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்று கூறினார் இதைக் கேட்ட நானும் உடனே மகிழ்ச்சி அடைந்து ஆமோதித்தேன் உடனே எனது யூடியூப் சேனல் இன் மூலமாக யாத்திரை குறித்து ஒரு காணொளி தயார் செய்து வெளியிட்டேன் அடுத்து இதற்கான நிகழ்வு ஏற்பாடு செய்தோம் ஏழு தலங்களுக்கும் யாத்திரை செல்ல மக்களிடம் வரவேற்பு அதிகமாக இருந்தது 200க்கும் மேற்பட்ட அன்பர்கள் யாத்திரையில் பங்கு கொண்டு பக்தியுடன் வந்தனர். முறையாக திட்டமிட்டு யாத்திரைக்கு எங்களை ஆயத்தப்படுத்தும் அதிகாலைப் பொழுதில் பவானி கூடுதுறை ஆற்றில் குளித்துவிட்டு ஸ்ரீ சங்கமேஸ்வரர் வழிபாடு யாத்திரையை இனிதே துவங்கினோம் அடுத்தடுத்து அன்றைய பொழுதில் ஏழு சிவ ஸ்தலங்களில் வழிபட்டு சிவனருள் பெற்றோம்.

20 வருடங்களுக்கு மேலாக யாத்திரை சென்று அதன் சூட்சும ரகசியங்கள் எங்களுக்கு தெரிவித்த ஈரோடு ஆதினம் அவர்கள் போற்றுதலுக்குரியவர் தான் பெற்ற சிவ அனுபூதி இந்த வையகமும் பெற வேண்டும் அதன்மூலம் எல்லா வளத்தையும் பெற வேண்டும் என்று அவரின் மனம் பலரது வாழ்வில் ஆதி சித்தனின் தன்மையை உண்டாக்கி மகிழ் வாழ்வை நல்கியது.

எனது அனுபவத்தில் நான் நிறைய குருமார்களை சந்தித்து உள்ளேன் அவர்களின் சிலர் நமது அனுபவங்களை நம்மிடம் இருந்து பெற்று கொள்வார்களே தவிர மாறாக அவர்கள் நமக்கு கற்றுக்கொண்டு வழி நடத்த மாட்டார்கள் ஆனால் நான் சந்தித்து அவர்களின் அற்புதமான உன்னதமான குரு ஈரோடு ஆதினம் அவர்கள் ஆவார்.

நான் அவரிடம் எனது பயிற்சிகள் மற்றும் வகுப்புகள் குறித்தும் கலந்து ஆலோசிக்கும் போது பயிற்சியில் இதை மாற்றங்கள் இதை சேர்த்துக்கொள்ளுங சூட்சும ரகசியங்களை அளித்து இன்முகத்தோடு என்னை ஆசீர்வதிப்பார் கல்விச் செல்வம் குழந்தைச் செல்வம் மாரிச் செல்வம் மாரிச் செல்வம் போன்ற செல்வங்களை மக்களுக்கு எளிய பயிற்சிகளை அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் இதன் மூலமாக செல்வ வளத்தை அதிகரிக்க முடியும் என்று எனக்கு அறிவுறுத்தி தொடர்ந்து என்னை வழிநடத்தி வருகின்றார்.

இந்தப்புத்தகம் உருவாவதற்கு காரணமாக இருந்த ஈரோடு ஆதீனம் அவர்களுக்கு கோடி நன்றிகளை காணிக்கையாக்குகிறோம்.

குருவிற்கு நன்றி குருவிற்கு சரணம் என்று கூறி குரு பாதம் வணங்கி கொங்கு 7 ஸ்தலங்களில் அற்புத ரகசியங்களை இந்த புத்தகம் வாயிலாக உங்களுக்கு பகிர்ந்து கொள்கின்றேன்

கொங்கு ஏழு சிவஸ்தலங்கள் | Kongu 7 Shiva Temple book
140.00
Scroll to Top