Sale!

கனவு வீடு | Dream House Book

300.00

Category: Tags: ,

Description

கனவு வீடு

கனவு காணுங்கள் கனவே வாழ்வின் அத்தனை சாதனைகளுக்கும் அத்தனை வளர்ச்சிகளுக்குமான ஜன்னல் ஆகும். இந்த ஜன்னலை திறந்து வையுங்கள் தென்றலும் நறுமணமும் உங்களிடம் வந்து உங்களை நிறைத்து வாழ்க்கையை அழகாக்கும்.

ஜன்னலைத் திறந்து விட்டீர்கள்…

இப்போது கதவைத் திறந்து வையுங்கள் அங்கே கடவுள் இன்முகத்துடன் உங்களுக்காக காத்திருக்கின்றார் கனவே அத்தனைக்கும் ஆனது வீடுகட்டுவது கனவே, வீடு பெறுவதும் கணவே.

வாழ்க்கையைக் கடந்து மெய்மை உணர்ந்து வீடுபேறு வாழ்க்கையை தரிசித்து மகிழ்ச்சியுடன் வாழ அனுமதித்து அழகாக்குகிறது வீடு.

ஒவ்வொரு தமிழனின் கனவு தனக்கான சொந்த வீடு வேண்டும் என்பதுதான் அந்த வீட்டை அடைவதற்காக தனது முழு உழைப்பையும் செலுத்தி அதற்காக தனது வாழ்வை அர்ப்பணித்து வீட்டை கட்டி முடிப்பது கண்கூடு பாதியில் வரை உழைத்து சேமித்து கட்டப்பட்ட வீட்டில் பணி முடிந்து ஓய்வு காலத்தில் சொந்த வீட்டில் ஒருவன் வாழ்வதென்பது அவனது பெரும் கனவுகளில் தலையானது ஆகும் அந்த கனவு இல்லத்தில் அவன் வாழ்ந்து இறப்பது என்பது அவனது சாதனை ஆகிறது.

வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தை பண்ணிப்பார் என்ற மொழிக்கேற்ப சொந்தமாக வீட்டை வாங்குவதும் அல்லது சொந்தமாக வீட்டை கட்டுவதும் இன்று வரை பலருக்கு சொப்பனமாகவே தெரிகிறது எலி வளை யானாலும் தனி வலை வேண்டும் என நம் முன்னோர்கள் எதற்காக கூறியிருக்கின்றனர் ஒரு எலிக்கு தனி வழி இருக்கும்போது மனிதர்களாகிய நமக்கு ஒரு தனி வீடு என்பது எவ்வளவு அவசியமானது இதை சொந்தமாக அடைய பலவித செயற்பாடுகளையும் குறிப்புகளையும் செலுத்தும் மக்கள். வீடு என்பது மனம் சார்ந்தது என்பதை தெரிந்து வைத்திருப்பதில்லை.

மனதை பயன்படுத்தி மனத்தை செம்மையாக்கி நமது சொந்தப் பெயரில் நமக்கு சொந்தமான வீட்டை எப்படி வாங்குவது என நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும் இந்த அறிதலை இந்த உணர்தலை எனது வாழ்வில் ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவங்களை இப் புத்தகத்தின் வாயிலாக எழுதியுள்ளேன்.

நீங்கள் இந்தப் புத்தகத்தை படித்து முடித்த பிறகு. உங்கள் சொந்த வீட்டிற்கான முதல் செங்கலை நிச்சயம் வாங்குவீர்கள் இது எப்படி சாத்தியம்? இது சாத்தியமே என நினைத்து புத்தகத்தை தொடர்ந்து வாசியுங்கள் இந்த புத்தகத்தில் நான் கூறுவது உங்களுக்கான போதனை அல்ல என் வாழ்வில் ஏற்பட்ட பல சோதனைகளைத் தாண்டி அதை சாதனைகளாக மாற்றிய தருணங்களில் விவரங்களை பகிர்ந்துள்ளேன் உங்கள் வாழ்வில் நீங்களும் வீடு கட்டி அதன் உரிமையாளராக இது என் வீடு என பெருமை கொண்டு நிமிர எனது வாழ்த்துக்கள் இந்தப் புத்தகம் அல்ல உங்கள் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் அலாவுதீன் அற்புத விளக்கு இந்த விளக்கில் இருந்து வெளிவரும் பூதம் போல நமக்கான சாத்தியங்களும் அற்புதங்களும் இந்த புத்தகத்தில் ஏராளமாக புதைந்துள்ளன இந்த புதையலை ஒவ்வொரு பக்கமாக படித்து விடுங்கள் உங்கள் கனவு வீடு இனிதே கட்டப்பட்டு வரும் நீங்களும் நிச்சயம் பெருமையோடு நிமிர் நிமிர் வாழ்க்கை உங்களுக்கானது வாழ்த்துக்கள்.

This Price is Only applicable for Indian Regional Customers!