Tortoise Silver Ring ஆமை மோதிரம்
Tortoise Silver Ring ஆமை மோதிரம்
இந்து மதத்தில் உள்ள கடவுள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு புராணங்கள் உள்ளது. அதிலும் அசுரர்களிடம் இருந்து தேவர்களைக் காப்பதற்காக விஷ்ணு பகவான் எடுத்த அவதாரம்தான் கூர்ம அவதாரம் எனப்படும் ஆமை அவதாரம். எனவே புராணங்களின் படி எப்படி தேவர்களை விஷ்ணு ஆமை அவதாரத்தில் காப்பாற்றினாரோ? அவ்வாறு இந்த வடிவிலான மோதிரத்தை நாம் அணியும்போது நாமும் வாழ்வில் முன்னேற்றம் அடையவும், செல்வ செழிப்புடன் இருக்க முடியும் எனக் கூறப்படுகிறது. இதோடு ஜோதிட சாஸ்திரமும் ஆமை மோதிரம் அணிவதால் பல நன்மைகள் கிடைப்பதாகக் கூறப்படும் நிலையில், அவை என்ன என்பது குறித்து நாமும் இங்கு அறிந்துகொள்வோம்.
ஆமை மோதிரத்தின் சிறப்புகள்:
இன்றைக்கு ஜோதிட வாஸ்து சாஸ்திரத்தின்படி, பலர் வீடு கட்டுவது, தொழில் தொடங்குவது, கையெழுத்தை மாற்றுவது போன்ற பலவற்றை மேற்கொள்கிறார்கள். இதேப்போன்று சமீப காலங்களாக பலர் ஆமை மோதிரத்தை அணிந்துவருவதைப்பார்திருப்பீர்கள். இவ்வாறு அணியும் போது செல்வ செழிப்பு ஏற்படுவதாக நம்பப்படுகிறது. குறிப்பாக புராணங்களின்படி, வராக அவதாரத்தின் அடிப்படையான அமிர்தம் கடைத்தெடுக்கும் போது, பாற்கடலில் வந்தவர் லட்சுமி என்று கூறப்படுகிறது. இதனால் இந்த மோதிரத்தை அணியும்போது மகாலட்சுமியின் ஆசி கிடைப்பதாக நம்பப்படுகிறது. இதோடு சுப பலன்கள், வீட்டில் சுப காரியங்கள் நடக்கும் என்ற ஐதீகம் உள்ளது.
பொதுவாக ஆமை தண்ணீரில் வாழக்கூடிய என்பதால், ஆமை வடிவிலான மோதிரம் அணியும் போது நம் உடல் குளிர்ச்சி அடைவதோாடு, மனம் நிதானமாக இருக்கும். இதனால் நம்முடைய பணிகளை செம்மையான செய்து சம்பாதிக்கலாம் எனக்கூறப்படுகிறது.
ஆமை மோதிரம் எப்படி அணிவது?
புராணங்களின் படி, செல்வ செழிப்பை வழங்கும் ஆமை மோதிரத்தை அணிவதற்கு முன்பாக, ஆமை வடிவிலான மோதிரத்தை பச்சை பாலில் தேய்த்து, கங்கை அல்லது சுத்தமான நீரால் சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் அணிய விருக்கும் ஆமை வடிவிலான மோதிரத்தை வீட்டு பூஜை அறையில் லட்சுமி தேவியின் முன்பாக வைத்து முறைப்படி வணங்க வேண்டும். இதற்குப் பிறகு ஆமை மோதிரத்தை அணிய வேண்டும் . இவ்வாறு செய்யும் போது உங்களுக்கு லட்சுமி தேவியின் அருளோடு ஐஸ்வர்யம் பெரும் என நம்பப்படுகிறது.
முன்னதாக ஆமை வடிவிலான மோதிரத்தை அணியும் முன்னதாக வாஸ்து முறைப்படி இருக்க வேண்டும். அதாவது ஆமையின் முகம் எப்போதும் உங்களை நோக்கி இருக்க வேண்டும். மேலும் மோதிரத்தை உங்களது வலது கையின் நடுவிரல் அல்லது ஆள்காட்டி விரலில் அணிய வேண்டும்.
ஆமை மோதிரத்தை இப்படி அணியுங்கள்:
ஆமை மோதிரத்தை அணிய நினைப்பவர்கள் மோதிரத்தில் ஆமையின் முகம் உங்களை நோக்கி இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். மோதிரத்தை வலது கையின் நடுவிரலில் அல்லது ஆள்காட்டி விரலில் அணிய வேண்டும். இந்த இரு விரல்களில் ஏதேனும் ஒரு விரலில் அணிந்து கொள்ளலாம்.
இதனை வெள்ளிக்கிழமைகளில் செய்யும் போது நல்ல பலன் கிடைக்கும். இதோடு உங்கள் ஆமை வடிவிலான மோதிரத்திற்கு அடியில் ஸ்ரீ என்று பொறிக்கப்பட வேண்டும். அந்த எழுத்தின் மேல் பகுதி ஆமையின் தலைப்பகுதி இருக்கும் வகையில் பொறிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
பொதுவாக ஆமை நிலத்திலும் இருந்தாலும் நீரில் தான் அதிகம் வாழக்கூடியது. எனவே இந்த ஆமை வடிவிலான மோதிரத்தை நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசியினர் அணியக்கூடாது எனவும் ஒரு வேளை அணியும்போது குளிர்ச்சித்தன்மை அதிகரித்து, உங்கள் உடல் நலம் மற்றும் மன நலனை நேரடியாகப் பாதிக்கும் என வாஸ்து கூறுகிறது.