Skip to product information
1 of 3

Dr. Star Anand Ram

Original Karungali Maalai | கருங்காலி மாலை

Original Karungali Maalai | கருங்காலி மாலை

Regular price Rs. 1,100.00
Regular price Rs. 2,100.00 Sale price Rs. 1,100.00
Sale Sold out
Size

சகல தோஷத்தை போக்கி சகல ஐஸ்வர்யாதை தரும் கருங்காலி மாலை

ஆன்மீக பூஜை பொருட்களில் மிகவும் முக்கியமான அரிதான ஒன்று, கருங்காலி மாலை

மதுரைக்கு அருகில் இருக்கும் பழமையான வீடுகளில் தூணாக உலக்கையாக கதவாக இருந்த ஆற்றல் மிக்க கருங்காலி மரத்தில் இருந்து சுத்தி செய்து மந்திர உரு ஏற்றிய கருங்காலி மாலை கருங்காலி பிரேஸ்லெட் கருங்காலி ருத்ராச்சம் நமது அக்சயம் டிவைன் சென்டரில் உங்கள் ராசி நட்சரத்திற்கு பூஜை செய்து சூச்சம மந்திரத்துடன் தரப்படும்

கருங்காலியின் ஆன்மிக மருத்துவ பயனை இப்போது பார்ப்போம்

கருங்காலி ஒரு பழமையான மர வகையை சார்ந்தது. பல ஆண்டுகள் வாழ்ந்த மரத்தின் நடுப்பகுதி மிகவும் சக்தி வாய்ந்ததாக கருமையாக இருக்கும். அப்படி கருமையான நடுப்பகுதியை வெட்டி நம் தேவைக்கு ஏற்ப சுவாமி சிலைகள், வீட்டு உபயோக பொருட்கள் செய்யப்படுகிறது.

குறிப்பாக பழைய காலத்தில் உலக்கை கருங்காலி மரத்தில் தான் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். இப்போது விலை உயர்வினால் வேறு சில மரங்களினால் செய்யப்படுகிறது.

அந்த காலத்தில் செய்யப்பட்ட மரப்பாச்சி பொம்மைகள் எல்லாம் கருங்காலி மரத்தில் செய்யப்பட்டவை. குழந்தைகள் கடித்து விளையாடினால் கூட உடலுக்கு தீங்கு விளைவிக்காது

ஆன்மீக பூஜை பொருட்களில் மிகவும் முக்கியமான அரிதான ஒன்று, கருங்காலி மாலை.

* இந்த கருங்காலி மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளும் பொழுது நம் உடம்பில் உள்ள கெட்ட சக்திகள் கட்டுப்படுத்தப்படும்.

நவகிரக நாயகர்களில் இது செவ்வாய் பகவானுக்குரியது. இவர் கொடுக்கும் அனைத்து பலன்களும் இந்த கருங்காலி மாலை அணிவதன் மூலம் நமக்கு கிடைக்கும். கருங்காலி மரம் மின் கதிர்வீச்சுகளைத் தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது. இதனால் இதன் நிழலில் அமர்ந்தால் கூட நோய் நீங்கும் வல்லமை கொண்டது. தேகம் வலுவடைந்து, ஆன்மா பலமடைந்து ஆண்டவனைச் சரணடைய கருங்காலியைத் தொழுவோம்.

கருங்காலி மாலையை ஆண் பெண் என இருபாலரும் அணிந்து பயன்பெறலாம் நமது உடலில் இரத்தத்தை சுத்தப்படுத்தும். ஜீரண கோளாறு நீங்கும் பெண்கள் மாதவிடாய் கோளாறு சரியாகும். ஆண்,பெண் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பேறுக்கு வழி வகுக்கும். உடலில் சோம்பல் நீங்கி சுறு சுறுப்பு உண்டாகும். மேலும் மாங்கல்ய பலத்தை பலப்படுத்தும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும். உடல் உறுதியடைய செய்யும். கோபங்கள் சிறிது சிறிதாக குறையும். நம் மன பயத்தை நீக்கி தைரியத்தை வழங்கும். பேச்சுதிறமை அதிகரிக்கும். வியாபார தொழில் போட்டிகளில் வெற்றி கிட்டும். நிலபுலன்கள் வாங்க வழி வகுக்கும். நிலம் சம்மந்த பட்ட தொழில் செய்பவர்கள் இதை அணிந்து கொள்ள அத்துறையில் வெற்றி வாகை சூடலாம். விஷ பூச்சிகள் நம்மை அண்டாமல் பாதுகாக்கும். வாகன விபத்துகளை தடுத்து நமது பயணங்களை பாதுகாக்கும். நெருப்பின் பயம் போக்கும், அதன் அபாயத்திலிருந்து பாதுகாக்கும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலை அணிந்தால் தோஷம் நீங்கி திருமண தடைகளை நீக்கும். சகோதர் பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவி பிரச்சனை இருப்பின் பிரச்சனை நீங்கி கணவன் மனைவி உறவு மேம்படும்.

உடலுக்கு வலிவைத்தரும் ரஸாயனமாகும், குளிர்ச்சி தன்மை கொண்டது, பற்களுக்கு வலிவூட்டும், கசப்பு துவர்ப்பு கலந்த சுவை கொண்டது .கருங்காலி கட்டை அதிகப் படியான மருத்து தன்மை கொண்டது, இதன் வேர் பட்டை மலர் கோந்து அல்லது பிசின் மருந்து பொருட்களாக பயன் படுத்தப்படுகிறது. வைரம் பாய்ந்த கட்டை அதாவது மிகவும் பழமையான வயதான மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. கருங்காலிக் கட்டையை தண்ணீரில் ஊறவைத்தால் அந்நீரின் நிறம் மாறும். அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடலில் உண்டாகும் அனைத்து வலிகளும் நீங்கும்.

கருங்காலி மரம் மேஷம் ராசி, விருச்சிகம் ராசி, அஸ்வினி நட்சத்திரம், பரணி நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம், அனுஷம் நட்சத்திரம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், செவ்வாய்க்கிழமை அன்று பிறந்தவர்களுக்கும், மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை பிறந்தவர்களுக்கும் நல்ல மருந்துமாகும்.

நோய்கள் நீங்க கருங்காலி கட்டையை கையில் தாயத்தாக அணிந்துகொண்டாலும் நல்ல பலன் இருக்கும். எல்லா கோயில்களிலும் கும்பாபிஷேகத்தின் போது கருங்காலி கட்டைகளை கலசத்தின் உள்ளே போடுவார்கள். அதனால் இடி மின்னலால் எந்த பாதிப்பும் அந்த கோயிலை சுற்றி வசிக்கும் நபர்களுக்கு வருவதில்லை. கருங்காலி மரம் ரொம்ப அரிதான மரம் ஒரு சில ஆலயங்களில் மட்டுமே இப்போது இருக்கிறது. மூலிகை மருத்துவர்களின் ஆலோசனைப்படியும் கருங்காலி மரத்தைப் பயன்படுத்தலாம். வீட்டில் கருங்காலி கட்டை வைத்திருந்தால் மிகுந்த நற்பலன்களை அளிக்கும்.

கருங்காலி மாலையானது நன்றாக வைரம் பாய்ந்த மரம் கொண்டு செதுக்கி மணிகளாக செய்து 108 மணிகளை கொண்டு மாலையாக செய்யப்படுகிறது.

View full details