வைகாசி விசாகம்

வைகாசி விசாகம்

🦚 வைகாசி விசாகம் . 🦚

அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி

குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை

ஸ்ரீ சக்தி கணபதியே துணை!

♥ வைகாசி விசாகம் நட்சத்திரம் 2023ல் June 2ஆம் தேதி, (வைகாசி 19) வெள்ளிக்கிழமை காலை 5.55 மணிக்கு
தொடங்கி அன்று நாளை காலை 5.55 மணிக்கு முடிவடைகிறது.
♥ வைகாசி விசாகம் முருகன் ஸ்தலங்கள் அனைத்திலும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
♥ வைகாசி விசாகம் விரதம் இருப்பவர்கள் அதிகாலை 4.30 மணியளவில் இருந்து 6 மணிக்குள் எழுந்து குளிக்க வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். வயோதிகம் மற்றும் நோய் காரணமாக நாள் முழுவதும் விரதம் இருக்க இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு உட்கொள்ளலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’, ‘ஓம் முருகா’ மற்றும் முருகனுக்கு உரிய மந்திரங்கள் ஏதாவது ஒன்றை சொல்லலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம்.

பங்குனி உத்திரம்

♥ தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, சூரபத்ம அசுரர்களை அழிக்கும் வகையில், சிவபெருமான் தனது ஈசானம், தத் புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், அதோமுகம் என்னும் ஆறு முகத்தில் இருந்தும் ஆறு தீப்பொறிகள் தோன்ற செய்தார்.

♥ சூரியனைக் காட்டிலும் பன்மடங்கு ஒளி பொருந்திய அந்த ஆறு தீப்பொறிகளையும் கங்கையில் விடும்படி அக்னி மற்றும் வாயு தேவர்களுக்கு சிவபெருமான் உத்தரவிட்டார். அவர்கள் அதனை கங்கையில் சேர்த்தனர்.

♥ கங்கை, அந்த ஆறு தீப்பொறிகளையும், சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்ப்பித்தது.

♥ அப்போது அங்கு உருவான ஆறு தாமரை மலர்கள் மீது ஆறு தீப்பொறிகளும் ஆறு அழகிய திருவுருவம் கொண்ட குழந்தைகளாக மாறின.

♥ இவ்வாறாக ஆறுமுகப் பெருமான் அவதரித்த இந்நாள் வைகாசி விசாகம் ஆகும்.

♥ சிவனுடன் சரவணப் பொய்கைக்கு வந்து சேர்ந்த அம்பிகை ஆறு குழந்தைகளையும் தன் கையில் அள்ளி, ஒன்றுசேர அனைத்து ஒரே குழந்தையாக்கி ஞானப்பால் பருகக் கொடுத்தார்.

♥ பராசர முனிவருக்கு ஆறு குழந்தைகள். ஆறு பேருமே சுட்டித்தனத்தில் கெட்டிக்காரர்கள். ஒருநாள் குளத்தில் குளிக்கும்போது நீரினை அசுத்தம் செய்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதனால் அந்த நீரில் வாழ்ந்து வந்த மீன்கள், தவளைகள் வேதனைப்பட்டன. அதனைக் கண்ட பராசர முனிவர், நீரை இப்படி அசுத்தப்படுத்தக் கூடாது, சிவபெருமானாக நினைத்து நீரை வழிபட வேண்டும். நீங்கள் நீராடியது போதும் வெளியே வாருங்கள்” என்று கட்டளையிட்டார்.

♥ ஆறு பிள்ளைகளும் முனிவரின் சொல்லைக் கேட்காமல் நீரில் கும்மாளம் போட்டார்கள் இதனால் பல மீன்கள் இறந்தன. அதனைப் பார்த்த முனிவர், கோபம் கொண்டு குழந்தைகள் ஆறு பேரையும் மீன்களாக மாறக்கடவது என்று சாபமிட்டார். உடனே ஆறு பிள்ளைகளும் ஆறு மீன்களாக மாறினர். தவறுக்கு வருந்திய அவர்கள் சாப விமோசனம் கிடைக்காதா என்று கேட்டதற்கு பார்வதிதேவி மூலம் சுய உருவம் கிடைக்கப்பெற்று, சிவமைந்தன் முருகன் அருளால் விமோசனம் கிடைக்கும் என்றார்.

♥ மீன்களாக மாறிய ஆறு பேறும் அந்த நீரில் நெடுங்காலம் வாழ்ந்து வந்தனர். ஒருசமயம் சிவலோகத்தில் பார்வதி தேவி, முருகப்பெருமானுக்கு ஞானப்பாலை ஒரு தங்கக் கிண்ணத்தில் வைத்து ஊட்டும்போது அதிலிருந்து ஒரு சொட்டு பூலோகத்தில் பராசர முனிவரின் குழந்தைகள் மீன்களாக வாழும் குளத்தில் விழுந்தது. அதனை அந்த மீன்கள் பருகியதால் ஆறு பேரும் முனிவர்களாக மாறினார்கள்

♥ ஆறு முனிவர்களும் சிவபெருமானுக்கு நன்றி செலுத்தி வழிபட்டபோது, நீங்கள் ஆறு பேரும் திருச்செந்தூர் சென்று தவம் செய்யுங்கள், அங்கு முருகக் கடவுள் அருள்புரிவார் என்று அசரீரி ஒலித்தது. அதன்படி அனைவரும் திருச்செந்தூர் சென்று தவம் மேற்கொண்டனர். வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்துடன் கூடிய நிறைந்த பௌர்ணமி நாளில் முருகப்பெருமான் அருள் கிடைத்து, சாபம் நீங்கியது.

♥ பக்தர்கள் பார்த்து வணங்க இந்த நிகழ்வு திருச்செந்தூரில் வைகாசி விசாக தினத்தில் ஆறு பொம்மை மீன்களை வைத்து நடத்துகிறார்கள். அன்றைய தினம் முன்வினைப்பயனால் துன்பப்படுபவர்கள் முருகப்பெருமானை வழிபட, துன்பம் நீங்கி இன்பம் பெறுவர் என்று புராணங்கள் கூறுகின்றன.

♥ முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது. முருகன்கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தால் விசேஷம். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும்.

♥ முருகப்பெருமானுக்கு செந்நிற மலர்கள் உகந்தவை.

அரளி, செம்பருத்தி முதலான மலர்களைக் கொண்டு வேலவனை அலங்கரிக்கலாம். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம்.

♥ வீட்டில் கந்த வழிபாடு செய்வது ரொம்பவே விசேஷம். வைகாசி விசாக நாளில், வீட்டை சுத்தமாக்கி, பூஜையறையை சுத்தம் செய்து, கோலமிடவேண்டும். விளக்குகளுக்கு சந்தனம் குங்குமமிட்டு, வீட்டில் விளக்கேற்றி, முருகப்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள். இந்த விரதத்தை கடைபிடிக்கும் போது இயலாதவர்களுக்கும், ஏழைகளுக்கும் முடிந்த அளவு சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம், மோர், பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை தானமாக கொடுக்கலாம்.

♥ வைகாசி விசாக நட்சத்திர விரத விரதம் கடைபிடித்தால் :-

♥ உச்சம் பெற்ற வாழ்க்கை அமையும்

♥ துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும்.

எதிரிகள் தொல்லை நீங்கும். வல்வினைகள் நீங்கும் .

♥ திருமண பேறு கிட்டும்.

♥ குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும். குலம் தழைத்து ஓங்கும்.

♥ வளமான வாழ்க்கை அமையும் வேலை வாய்ப்பு பெருகும். காரிய வெற்றி கிடைக்கும்.

♥ ஆபத்துக்கள் அகலும்.

♥ கடன் உள்ளிட்ட கவலைகளில் இருந்தும் வழக்கு உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்தும் நம்மை விடுவித்து அருளுவார் வேலவன்.

♥ வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும்.

♥ பக்தர்களில் பலர் வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக முருகன் கோவில்களுக்கு வந்து வணங்குகிறார்கள்.

♥ காஞ்சி மஹாபெரியவர், நம்மாழ்வார், திருவாய்மொழிபிள்ளை, கௌதம புத்தர் ஆகியோர் அவதரித்த தினம். இந்நாளில்தான் கௌதம புத்தர் போதி மரத்து அடியில் ஞானம் பெற்றார். இந்நாளில்தான் கௌதம புத்தர் முக்தி அடைந்தார்.

♥ வைகாசி விசாகம் தான் எமதர்மன் அவதரித்த நாளாகும். இந்நாளில் எமனுக்கு கோவிலில் தனிபூஜை செய்பவர் நோய்கள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வார்.

நன்றி நன்றி நன்றி 🌞

வாழ்க வெல்க வளர்க 💸

வாழ்க பணமுடன் 💸

ஜெய் ஸ்ரீ ஆனந்த குபேர குருஜி

Dr.Star Anand ram

பணவளக்கலை

Akshyum Divine Center

🕉🕉

www.drstaranandram.com

#staranand

#GuberaGuruji

#amavasi

#parikaram

#mantra

#chanting

#temple

#divine

Back to blog