ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே
ஜூன் 3ஆம் தேதி உலக மிதிவண்டி தினம் இந்த நாளில் சைக்கிளில் அமர்ந்து ஒரு பதிவு போட்டாச்சு நிறையபேர் அதைப் பார்த்து சந்தோஷம் பட்டார்கள் அப்புறம் நிறைய நபர்கள் கிண்டல் செய்தார்கள் "சைக்கிளை பார்த்தால் மட்டும் போதாது அதை ஓட்டணும்" அப்படின்னு சொல்லி இருந்தார்கள் கிண்டல் செய்திருந்தார்கள்.
எப்போதும் சில நபர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் வெறும் புகைப்படத்திற்காக இதையெல்லாம் செய்கிறார்கள் என்று ஆனால் நான் தினசரி இரண்டு கிலோமீட்டர் சைக்கிளிங் பண்ண கூடிய தன்மை உள்ளவன்.
இவ்வாறு விமர்சனம் வந்தபிறகு நான் எனது தூரத்தை அதிகரிக்கலாம் என்று 4 கிலோமீட்டர் சைக்கிளிங் பண்ணலாம் என்று முடிவெடுத்து கிளம்பினேன். அங்கே செல்ல செல்ல ஒருசில நபர்களும் சைக்கிளிங் செய்தார்கள். நானும் அவருடன் இணைந்து சைக்கிள் பயணத்தை மேற்கொண்டேன் நான்கு கிலோமீட்டர் ஏழு கிலோ மீட்டர் ஆக மாறியது. 7 கிலோ மீட்டரை கடந்தபோது எனக்கு ஒரு பெரிய கடினமான சூழல் இருந்தது ஏனென்றால் ஒரு மிகப்பெரிய மேடு மற்றும் அதை நோக்கிப் பயணம் செய்யும் போது எதிர் காற்றும் இருந்தது என்னால் மேற்கொண்டு சைக்கிளை அழுத்தி செல்ல முடியவில்லை. அப்போது நான் நினைத்தேன் எதற்கு நமக்கு இந்த தேவையில்லாத வேலை என்று நினைத்தேன். போதுமான உடற்பயிற்சி களை காலையிலே முடித்துவிட்டேன் ஒரு ஆசைக்காக தான் சைக்கிளை ஓட்டி வந்தேன் ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் சைக்கிளை தள்ளிக் கொண்டு போகலாமா என்று சிந்தனை தோன்றியது.
அப்படி சிந்தித்துக் கொண்டிருக்கும் போதுதான் தோன்றியது நாம் பல நபர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கின்றோம் ஆனால் நாமே தன்னம்பிக்கை இழந்து திரும்ப செல்லக்கூடாது என்று முடிவெடுத்தேன். எப்பொழுது பிரச்சனைகள் வருகிறதோ எப்பொழுது தடைகள் வருகின்றதோ அப்பொழுது தான் நாம் முயற்சி செய்ய வேண்டும் என்று நாம் பல நபர்களுக்கு சொல்லி இருக்கின்றோம். அதே முயற்சியை இப்போது செய்யலாம் என்று சைக்கிள் வைத்திருந்த தண்ணீரை குடித்துவிட்டு மெல்ல சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தேன் சைக்கிள் முன்னேறிக் கொண்டே சென்றது. மெதுவாக அந்த மேட்டை கடந்தேன் வேட்டை கடந்த பிறகு ஒரு பெரிய இறக்கம் இருந்தது. அந்த இறக்கத்தில் சரசரவென்றுவீடுவந்து சேர்ந்துவிட்டேன்.
வீட்டுக்கு வந்தவுடன் மனைவியிடம் சொன்னேன் நான் இன்னைக்கு 11 கிலோமீட்டர் சைக்கிள் ஓடினேன் என்று எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது ஒரு சாதனை படைத்த அளவுக்கு மனது நிறைந்து உள்ளது என்று கூறினேன்.
இதிலிருந்து நான் என்ன கற்றுக் கொண்டேன் என்றால் ஊருக்கு நாம் என்ன சொல்கிறோமோ அதை நாமும் செய்ய தகுதியானவராக இருக்க வேண்டும். வழிகாட்டு முன் வாழ்ந்த காட்டு என்கின்ற பழமொழிக்கு இணங்க என் குறிக்கோள் என்று நான் செயல்பட்டேன்.
நாலு பேருக்கு சொல்வதற்கு முன் நாமும் அதை செயல்பட்டால் நமக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கை வரும் என்று நான் அதை ஒவ்வொன்றையும் செய்து பார்த்து மிகப்பெரிய ஆனந்தம் அடைகின்றேன்.
எவ்வளவு பெரிய கஷ்டம் கஷ்டங்கள் இருந்தாலும் சைக்கிள் மிதித்தால் மட்டும்தான் முன்னேறும் அதுபோல தான் நம் வாழ்க்கையில் தடைகள் பிரச்சனைகளை மிதித்தால் மட்டும்தான் நம்மால் முன்னேற முடியும் இதை மனதில் வைத்துக் கொண்டு தொடர்ந்து முன்னேறுங்கள்.
சைக்கிளை அழுத்தவில்லை என்றால் நமக்கு போதுமான Balance கிடைக்காது அதுபோல பிரச்சனை நம்மை எழுதவில்லை என்றால் நம் வாழ்க்கையிலும் நமக்கு Balance கிடைக்காது என்று இதை மனதில் வைத்துக்கொண்டு உங்கள் வாழ்வில் முன்னேறுங்கள்.