தை மாதத்தின் சிறப்பு

தை மாதத்தின் சிறப்பு

தை மாதத்தின் சிறப்பு

அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை

ஸ்ரீ சக்தி கணபதியே துணை!

நம் நாட்டில் பொதுவாக எந்த ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் ஆரம்பிப்பது வழக்கம், இம்மாதத்தில் தான் சூரியன் தன்னுடைய வடதிசை பயணத்தை தொடங்குகிறார். உத்திராண்ய காலம் ஆரம்பமாகிறது. தேவர்களின் உலகிற்கு தட்சிணாயனம் எனப்படும் ஆறு மாத இரவுக் காலம் முடிந்து, உத்தராயனம் எனும் ஆறு மாதப் பகல் காலம் ஆரம்பமாகும் மாதம் என்பதே தை மாதத்தின் பெருமையாகும். அப்போதுதான் பித்ருக்கள் உலகின் கதவும் திறக்கப்படுகிறது. ஆடி மாதத்தில் விதைத்த நெல்லானது தை மாதத்தில் தான் அறுவடை செய்யப்படுகிறது. எனவே இது அறுவடை மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. அறுவடையால் மகிழ்ச்சி மிகுந்த மக்கள் தங்கள் கடவுள்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இம்மாதத்தில் பல்வேறு விழாக்களைக் கொண்டாடுகின்றனர். பல்வேறு வழிபாட்டு முறைகளும் இம்மாதத்தில் பின்பற்றப்படுகின்றன.

தை மாதத்தின் சிறப்பு


மகர மாதம்


இந்த மாதத்தினை மகர மாதம் என்றும் அழைப்பார்கள். மகரத்திற்குள் சூரியன் நுழைவதே மகர மாதம். ஜோதிடத்தில் பார்க்கும் போது, பூமியை இரண்டாகப் பிரிப்பது போல் ஆகாயத்தை இரண்டாக பிரிப்பார்கள். அதை சூரியன் பகுதி, சந்திரன் பகுதி என்றும் கூறுவார்கள். அதில் மகரத்தில் இருந்து கடகம் வரை சந்திரனுடைய பகுதிக்குள் வரும், அவைகள் சந்திராதிக்கத்திற்குரியன. இந்த மாதத்தில் இருந்து சூரியன் பகுதி துவங்குகிறது. இந்த மாதத்தில் சூரியப் பகுதி வலிமையடைகிறது.

அதாவது உத்திரயாணப் புண்ணிய காலம் துவங்குகிறது. அதாவது காலத்தை இரண்டு அயனமாகப் பிரித்துள்ளனர். அவை தக்‍ஷாயணம் உத்திராயணம். தக்‍ஷாயணம் என்பது தெற்கு திசையை குறிக்கும். உத்திராயணம் என்பது வடக்கு திசையையும் குறிக்கும். அதனால்தான் இந்த காலம் எல்லா வகையிலும் சிறப்புடையது. உத்திராடம் சிறந்த நட்சத்திரம்.

சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் மாதமாகவும் போற்றி வணங்கி வருகின்றனர். இவை அனைத்திற்கும் மேலாக, சைவம், வைணவம், கௌமாரம், காணாபத்யம், வைஷ்ணவம் என இந்துக்கள் தங்களுடைய வழிபாட்டு முறையை பின்பற்றி வந்தாலும் கூட, அனைத்து இந்துக்களும் பின்பற்றும் வழிபாட்டு முறையானது சௌரம் எனப்படும் சூரியனை வழிபடும் முறையாகும்.

மாசி மாத சிறப்புகள்


ஆதிபகவன் சூரியன்

நாம் வணக்கும் சிவனையோ முருகனையோ எந்த கடவுளையுமே கண்ணால் காண முடியாது. ஆனால் நம்மால் பார்த்து அறிந்து உணர முடிகின்ற ஒரே கடவுள் சூரியன். அதைத்தான் வள்ளுவரும் தன்னுடைய திருக்குறளில் முதல் குறளாக கூறியுள்ளார்.

பகவன் முதற்றே உலகு

என்று போற்றி எழுதியுள்ளார். இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த சூரியக் கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக நாம் கொண்டாடும் வழிபாடே தை பொங்கல் என்னும் பொங்கல் பண்டிகை ஆகும். நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை தவிர தை மாதத்திற்கு எத்தனையோ சிறப்புகள் உள்ளன.

அறிவை வளர்க்கும் தை பூச வெள்ளி

உத்தராயண கால தொடக்க மாதமான தை மாதத்தில் வரும் வெள்ளிக் கிழமைகள் அம்மன் வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நாட்களாகும். அன்றை நாட்களில், அம்மனுக்கு உகந்த அபிராமி அந்தாதி, சௌவுந்தர்ய லஹரி போன்ற அம்மனை போற்றி பாடல்கள் பாடி வழிபாடு செய்யலாம். தேவர்களின் குருவான பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் பூச நட்சத்திரத்திற்கு உரியவர். எனவே தை மாத பூச நட்சத்திரத்தன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால், நம்முடைய அறிவாற்றல் வளரும் என்பது ஐதீகமாகும்.

மாசி மாத சிறப்புகள்


சிவனுக்கு உகந்த தைபூச திருநாள்

தை மாத பூச நட்சத்திரத்திற்கு அருகில் சந்திரன் வரும்போது தைபூச திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சிவபெருமானையும், முருகப் பெருமானையும், வீரபத்திரதையும் வழிபட உகந்த நாளாகும். எம்பெருமான் ஈசன் ஆடலரசராக நடராஜ பெருமானாக மக்களுக்கு காட்சி கொடுத்த நாள் தைபூச திருநாளாகும்.

சக்தி வேல் பெற்ற நாள்

தை பூச நாளில் தான் அன்னை பார்வதி தேவி, அசுரர்களை அழிப்பதற்காக ஆறுமுகக் கடவுளுக்கு சக்தி வேலை வழங்கிய நாள். அதனால் தான், தைபூச திருநாள் உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நீத்தார் கடன் நீக்கும் நாள்

தை மாதத்தில் வரும் தை அமாவாசை மற்றொரு முக்கிய நாளாக கருதப்படுகிறது. அன்று தான் முன்னோர்களுக்கு தர்ப்பணம் எனப்படும் நீத்தார் கடன் வழிபாட்டை மோற்கொள்ளும் நாள். ஆறு, குளம், கடல் என அனைத்து நீர்நிலைகளிலும் பித்ரு கடன் வழிபாடு மேற்கொள்ளப்படும்

ரத சப்தமி விரதம்

தை மாத வளர்பிறையில் வரும் சப்தமி திதியானது ரதசப்தமியாக இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. அன்றைக்கு தான் சூரியன் தன்னுடைய வடதிசை பயணத்தை தொடங்குகிறார். ரத சப்தமி நாளில் விரதம் மேற்கொள்வோருக்கு தேக ஆரோக்கியம், நோய் இல்லாமை, நோய் இல்லாமை, புத்திரப்பேறு, நிலையான செல்வம், பகைவர்களையும் வெல்லும் சக்தி, வெற்றி, நிலம், தானியம் மற்றும் புண்ணியம் ஆகியவை கிடைக்கும்.

தை மாதத்தில்


வீரபத்திரர் வழிபாடு

தை மாதத்தில் வரும் மற்றொரு முக்கிய நாள், வீரபத்திரர் வழிபாடு ஆகும். வீரபத்திரர் வழிபாடு என்பது ஓர் ஆண்டு முழுவதும் கடைபிடிக்கப்படுவதாகும். ஒரு வருடம் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் கூட, தை மாத செவ்வாய்க் கிழமைகளில் மட்டுமாவது வீரபத்திரர் வழிபாட்டை கடைபிடிக்கலாம். அப்படி செய்தால், தீராத பகையும் பறந்தோடி விடும், அனைத்து தடங்கலும் தகர்ந்து போகும். நவக்கிரக பாதிப்புகளில் இருந்தும் நம்மை காக்கும்.

பாவங்கள் போக்கும் சபலா ஏகாதசி

தை மாத தேய்பிறையில் வரும் ஏகாதசி சபலா ஏகாதசி என அழைக்கப்படுகிறது. இந்நாளில் உண்ணாமல் உறங்காமல் விரதமிருந்து மஹாவிஷ்ணுவை வழிபட்டால் நாம் முன்பு செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். அன்றைய நாளில், ஏழைகளுக்கு பழங்களை தானம் செய்வதால், ஒளிமயமான வாழ்க்கை அமையும். லும்பகன் என்னும் இளவரசன் இவ்விரதத்தை கடைபிடித்து பாவங்கள் அனைத்தும் நீங்கி அரச பதவியையும், பின்னர் வைகுண்ட பதவியையும் பெற்றான் என்பது ஐதீகம்.

வளர்பிறை புத்ரதா ஏகாதசி

தை மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியானது, புத்ரதா ஏகாதசி என்றும் சந்தான ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் ஏகாதசி விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும். சுகேது மான் என்ற மன்னன் புத்திர பாக்கியம் இல்லாத குறையை, புத்ரதா ஏகாதசி விரதமிருந்து நல்ல மகனை பெற்றான். அதோடு தன் நாட்டு மக்களையும் இந்த புத்ரதா ஏகாதசி விரதத்தை பின்பற்றச் செய்தான்.

சாவித்ரி கௌரி விரதம்

தை மாத இரண்டாம் நாளில் பின்பற்றப்படும் விரம் சாவித்ரி கௌரி விரதமாகும். சிரஞ்சீவியான மார்க்கண்டேயர் இந்த விரதத்தை தருமனுக்கு எடுத்துக் கூறியதை அடுத்து தருமரும் இந்த விரதத்தை மேற்கொண்டார். இவ்விரதத்தை மேற்கொள்வோர், அதிகாலையில் குளிர்ந்த நீரில் நீராடி, களிமண்ணால் செய்த சாவித்ரி அம்மனை பூஜை செய்ய வேண்டும்.

பைரவ வழிபாடு

தை மாதத்தில் வரும் முதல் செவ்வாய் கிழமையில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகிறது. தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை ஆகியவை பைரவருக்கு உகந்ததாக கூறப்படுகிறது. வாசனைப் பூக்களில் மல்லிகைப்பூவை தவிர்த்து மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. சனி தோஷம் முழுமையாக அகல கால பைரவருக்கு விரதம் இருப்பது விசேஷம்.

ஜெய் ஸ்ரீ ஆனந்த குபேர குருஜி
Dr Star Anand ram

Back to blog