சுதர்சன ஜெயந்தி

சுதர்சன ஜெயந்தி

சுதர்சன ஜெயந்தி : சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள்…

அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை

ஸ்ரீ சக்தி கணபதியே துணை!

ஏவல்,பில்லி,சூனியம் பயம் போக்கும் ஸ்ரீசக்தரத்தாழ்வார் - 28/07/2023 சக்கரத்தாழ்வார் ஜெயந்தி

ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும். ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தரிசித்தால், சகல தோஷங்களும் விலகும். அவரின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம் என்பது ஐதீகம்.

காக்கும் கடவுள் மகாவிஷ்ணுவின் கையில் சுழலும் ஆயுதம், சுதர்சன சக்கரம் ஆகும். மாபெரும் சக்தியும் ஒளிரும் தன்மையும் கொண்ட இந்த சக்ராயுதம், மகத்தான ஆற்றல் வாய்ந்தது. தீமையை அழித்து, நன்மையை நிலைநாட்டக் கூடியது. சுதர்சனர் என வழிபடப்படும் இந்த சுதர்சன சக்கரத்துக்குச் செய்யப்படும் ஹோம வழிபாடு, மஹா சுதர்சன ஹோமம் எனப்படுகிறது.

ஸ்ரீ மகாவிஷ்ணு, உலகில் வாழும் மக்களுக்கு ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் ஆகியவற்றை வழங்கும் பணியை சக்கரத்தாழ்வாரிடம் கொடுத்திருப்பதாக 'சுதர்ஸன சதகம்' விளக்குகிறது.

ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள், ஸ்ரீ சுதர்சன ஜயந்தி உற்சவமாக கொண்டாடப்படும். மஹா விஷ்ணுவின் திருக்கரங்களில் ஐந்து ஆயுதங்களைக் காணலாம். இவற்றில் முக்கியமானது சக்கரம் என்று போற்றப்படுகின்ற ஸ்ரீ சுதர்ஸனம் ஆகும். திருமாலின் ஆக்ரோஷ ஸ்வரூபமான ஸ்ரீ சுதர்ஸன மூர்த்தியே திருமாலின் காத்தல் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பவர்.


ஸ்ரீ சக்கரம் என்னும் ஸ்ரீ சுதர்ஸனம் எம்பெருமான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பிரதான ஆயுதம்! அவர் தம் வலத் திருக்கரத்தில் ஏந்தியுள்ள ஸ்ரீ சுதர்ஸனம், பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறது. ஸ்ரீ அனந்தன் என்ற நாகம், கருடன், ஸ்ரீ சுதர்ஸனம் - இம்மூவரும் பகவானை ஒரு நொடி கூட பிரியாது அவரைத் தொழும் ‘நித்யசூரிகள்’. ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் இருக்கையாகவும், பாற்கடலில் பாம்புப் படுக்கையாகவும், ஆதிசேஷனாகக் குடையாகவும், நடக்கையில் பாதுகையாகவும் இருப்பவர் அனந்தன். பகவான் மனதால் நினைத்தவுடன், நினைத்த இடத்திற்கு அவரைத் தாங்கிச் செல்லும் வாகனமாகவும், அவரது தாசனாகவும் திகழ்பவர் கருடன். ஸ்ரீ சுதர்ஸனாழ்வார், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ அனந்தாழ்வார் என இவர்கள் மூவர்கள் மட்டுமே ஸ்ரீ பகவானை ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பாகும்

சுதர்சனர் என்ற சொல்லுக்கு நல்வழி காட்டுபவர், காண்பதற்கு இனியவர் என்று பொருள். ஆனி மாத சித்திரை நட்சத்திர நாளில் சுதர்சன ஜெயந்தி விழா கொண்டாடுவார்கள். பெருமாளின் கையில் ஆயுதமாக அலங்கரிக்கும் சக்கரத்தாழ்வார் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார். சங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கையிலேயே இடம் பெற்று இருப்பவர் சக்கரத்தாழ்வார். ஆனால், சில இடங்களில் மாறுபட்டும் அமைந்திருப்பது உண்டு. இவர் திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் என்றெல்லாம் பல பெயர்களால் அழைக்கப்படுபவர். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிச் சன்னதி உண்டு. இவர் பதினாறு, முப்பத்திரண்டு என்ற எண்ணிக்கைகளில் கைகளை உடையவர்.

பெரியாழ்வார் வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு" என்று வாழ்த்திப் பாடியுள்ளார். திருமாலுக்கு இணையானவர் என்று எழுதிய சுவாமி தேசிகன், சுதர்சனாஷ்டகத்தில் சக்கரத்தாழ்வாரைப் பலவாறும் போற்றியுள்ளார். மகாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தின்போது, பவித்ர தர்ப்பத்தின் நுனியில் அமர்ந்து சுக்கிரனின் கண்ணைக் கிளறி அழித்தவர் சுதர்சனர். இராவணனின் முன்னோர்களான மால்யவான், சுமாலி என்ற கொடுமையான அரக்கர்களை தண்டிக்க கருடாரூடனாய் இலங்கை சென்ற பகவான், சுதர்சன சக்கரத்தால் அவர்களை அழித்தார்.

சுதர்ஸனர், பல புராணங்களில் பேசப்படுகிறார். நரசிம்ம அவதாரத்தில் இரணியனை வதம் செய்வதற்கு நகங்களாக இருந்தவர் சுதர்ஸனர்தான் என்கிறது புராணம். வாமன அவதாரத்தின்போது தானம் கொடுக்க வந்த மஹாபலி சக்கரவர்த்தியைத் தடுத்தார் சுக்ராச்சாரியார். அவரின் எண்ணத்தைத் திசை திருப்பியவர் சக்கரத்தாழ்வார். காசிநகரில் கண்ணனைப் போன்று சங்கு, சக்கரம் தரித்து, "நானே உண்மையான வாசுதேவன்' என்று பௌண்டரக வாசுதேவன் என்ற வலிமைமிக்க மன்னன் கூறிவந்தான். கண்ணனை மிரட்டி போருக்கு அழைத்தான். கருடன்மேல் ஏறிச்சென்ற கண்ணன் ஆழியினால் அவனை வென்றான்.
தேவர்கோன் முதலான சகல தேவர்களும் பரமசிவனிடமிருந்து சுதர்சன வழிபாட்டை அறிந்து சக்கரத்தாழ்வாரை வழிபட்டு திருவருளைப் பெற்றார்கள். கஜேந்திர மோட்ச வைபவத்தில் சக்கரத்தைக் கொண்டே கஜேந்திரனைக் கவ்விப் பிடித்திழுத்த முதலையை அழித்து, யானையைக் காப்பாற்றுகிறார்.


சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள்
சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள் பதினாறு.

அதில் வலக்கையில் உள்ள ஆயுதங்கள் சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்னி, மிஸ்கிரிசம், வேல் ஆகியவை இடக்கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள் சங்கு, வாள், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம் ஆகியன.

சிவன் கோயில்களில் சிவாம்சமான பைரவரை போன்றே விஷ்ணுவின் அம்சமான சக்கரத்தாழ்வார் நமது சகல துன்பங்களிலிருந்தும் விடுவிக்கும் சக்தி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே நமக்கு நவக்கிரகங்களின் தரிசனம் கிடைக்கும். பெருமாள் கோயில்களில் நவக்கிரகங்களுக்குப் பதிலாக, பெருமாளையும் சக்கரத்தாழ்வாரையும் தரிசனம் செய்தாலே நவக்கிரகங்களின் அனுக்கிரகம் கிடைத்துவிடும் என்பது வைஷ்ணவர்களின் நம்பிக்கை.


செவ்வாயின் சித்திரை நக்ஷத்திம் புதனின் வீடான கன்னி மற்றும் துலா ராசியில் வருவதால் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வணங்குபவர்களுக்கு நோய், எதிரி, விரயம், மரணம் ஆகிய பயம் நீங்குவதோடு தாரித்திரியத்தைப் போக்கி சகல செல்வங்களும் அளிக்கும் என்பது நிதர்சனம். முக்கியமாக இன்றைய கோச்சாரத்தில் சந்திரனும் சுக்கிரனும் பரிவர்த்தனை பெறுவதால் சந்திர சகோதரியான மகாலக்ஷ்மியின் அருள் நிறையும் என்பது நிதர்சனம்.

சக்தி வாய்ந்ததாக விளங்கும் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத தீய சக்திகளிடம் இருந்தும் பாதுகாக்கும்.


ஸ்ரீ சுதர்சன சக்கர ரக்ஷா மந்திரம் : ஓம் நமோ சுதர்சன சக்ராய | ஸ்மரண மாத்ரேண ப்ரகடய ப்ரகடய | த்வம் ஸ்வரூபம் மம தர்சய தர்சய | மம சர்வத்ர ரக்ஷய ரக்ஷய ஸ்வாஹா || மஹாரக்ஷையாக, சக்தி வாய்ந்ததாக விளங்கும் இந்த மந்திரத்தைச் சித்தி செய்யும் முறை மிக எளிது. ஒரு சூரிய அல்லது சந்திர கிரகணத்தன்று விளக்கேற்றி, ஊதுவத்தி ஏற்றி வைத்து 1008 தடவை ஜெபிக்கச் சித்தியாகும். பின்னர் தேவையான போது 3 தடவை ஜெபிக்க எந்தவிதமான ஆபத்துக்களில் இருந்தும், கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத தீய சக்திகளிடம் இருந்தும் பாதுகாக்கும். சைவ உணவு உண்பவர்கள் மட்டும் இம்மந்திரத்தை ஜெபிக்கவும்.உங்களையும் வசிப்பிடத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.அல்லது ஏதேனும் விஷ்ணு ஆலயத்தில் வைத்து ஜெபிக்கலாம்.

ஜெய் ஸ்ரீ ஆனந்த குபேர குருஜி

For more details

7868868899

web- www.drstaranandram.com

நன்றி! நன்றி!நன்றி!
நன்றிகள் கோடி

வாழ்க பணமுடன்

Yours 🦚
Dr.Star anand ram🐘

Back to blog