ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே ஒவ்வொரு வாரமும் கேள்வி பதில் என்ற பகுதியை பார்த்துக்கொண்டு வருகிறோம்.
அந்தக் கேள்வி பதில் பகுதியில் இன்று நாம் பார்க்க இருப்பது. சில கேள்விகளுக்கு மட்டும் பதில் தருகிறேன்.
திருச்சியிலிருந்து ஒருத்தங்க கேட்டிருந்தாங்க பைரவர் வழிபாட்டை ஒழுங்கா செய்யாமல் இருந்தால் நாய் கடிக்குமா?
எந்த தெய்வமும் நாம் சரியாக வழி படவில்லை என்று தண்டனை தரவே தராது. ஆதலால் முதலில் அந்த பயத்தில் இருந்து வெளி வாருங்கள். நீங்கள் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டீர்கள் என்றால் அதை ஆத்மார்த்தமாக செய்யுங்கள். ஒரு செயலை சிறப்பாக செய்தால் அது வெற்றி அதே சிறப்பு இல்லாமல் செய்தால் அது தோல்வி. அதேபோல்தான் ஒரு பூஜையை பரிகாரத்தை மந்திரத்தை சரியாக செய்தால் அது வெற்றி. சரியாக செய்யாவிடில் அது தோல்வியில் முடியும். இதில் தோல்வி என்பது தண்டனை கிடையாது நீங்கள் மறுபடியும் சரியாக செய்வதற்கான வாய்ப்பு தான் தோல்வி. ஆதலால் பைரவர் வழிபாட்டை செய்யாவிடில் நாய்க்கடிக்கும் என்று எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
இன்னொருத்தர் கேட்டிருந்தார் குறிப்பிட்ட ராசிக்காரர்கள் திருப்பதி போனாள் கடன் ஏற்பட்டுவிடும், விபத்துக்கள் ஏற்படும் இது உண்மையா?
அருட்பெருஞ்ஜோதி அன்பர்களே நண்பர்களே திருப்பதி ஏழுமலை என்பது கண்ணுக்குத் தெரியக் கூடியது அங்கு கண்ணுக்குத் தெரியாது இரண்டு மலைகள் இருக்கின்றன. அந்த ஒன்பது மலைகளும் நவகிரக சூட்சமம் அத்துடன் இருக்கக்கூடிய மலைகள் தான். அந்த நவகிரக மலையில் யார் ஒருவர் ஏறி இறங்குகிறார்களோ. அவர்கள் வாழ்வில் எப்பேர்பட்ட தோஷங்களும் தடைகளும் காணாமல் போகின்ற சூழல்கள் தான் ஏற்படும். இது நிறைய பேருக்கு தெரியாமல் யாரோ ஒரு நபர் 2 நபருக்கு நடந்ததை வைத்து குழப்பிக் கொள்கிறீர்கள். எந்த ஒரு தெய்வமும் முதலில் தண்டிக்கவே தண்டிக்காது. அதிலும் பெருமாள் தண்டனையே தரமாட்டார். காக்கும் கடவுள் பெருமாள் நீங்கள் என்ன செய்தாலும் அவர் கோபம் கொள்ளமாட்டார். நீங்கள் பெருமாளை திட்டினாலும் அவர் கோபம் கொள்ளமாட்டார். திரும்பவும் வாரி வாரி வழங்கிக் கொண்டே தான் இருப்பார். அதுபோல் உங்கள் வாழ்வில் செல்வத்தை வாரி வழங்குவதற்கு 12 ராசிக்காரர்களும் 27 நட்சத்திரக்காரர்களும் ஏன் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் மாற்று மதத்தினரும் பெருமாளை வழிபடலாம். அவர் செல்வத்தை ஈட்டி தருவார். யாரோ ஒருவர் இருவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு திருப்பதி பெருமாளை வழிபடாமல் விட்டுவிடாதீர்கள் வளமும் நலமும் வாரிவாரி தருவார்.
நான் காலையில் இருந்து விரதம் இருக்கிறேன் இரவு அசைவம் சாப்பிடலாமா?
விரதம் இருப்பதே உடலையும் மனதையும் தூய்மை படுத்துவதற்காக தான். விரத தினத்தன்று கனமான உணவுகளை சாப்பிட்டால் அந்த விரதத்திற்கு பலன் இல்லாமல் போய்விடும். விரத தினத்தன்று மனதையும் உடலையும் தூய்மை படுத்துவதற்காக எளிய உணவுகள் அதாவது பழங்கள் பால் சாப்பிட்டு விட்டு உறங்கி விடுங்கள். அதற்கு அடுத்த நாள் நீங்கள் கனமான உணவுகளை உட்கொள்ளலாம். இனிமேல் நீங்கள் விரத தினத்தன்று சைவமே சாப்பிட்டாலும் அதிகமாக சாப்பிட வேண்டாம். உங்கள் உள் உணர்வுகளை எல்லாம் புதுப்பிக்கக்கூடிய தினம்தான் விரத தினம். ஆதலால் இதை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள்.
மீண்டும் இன்னொரு கேள்வி பதில் பதிவில் உங்களை சந்திக்கிறேன். உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் சந்தேகங்கள் தீர்வுகள் பரிகார விஷயங்கள் இருந்தாள் கீழே உள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
99769 24786
96989 99786
9790044225
98946 24425