பங்குனி மாதம் ! வெற்றி தேடி வரும் வசந்த காலத்தின் ஆரம்பம்

பங்குனி மாதம் ! வெற்றி தேடி வரும் வசந்த காலத்தின் ஆரம்பம்

அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி

தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி

குருவே சரணம் குருவே துணை

குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை

ஸ்ரீ சக்தி கணபதியே துணை!

பங்குனி தமிழ் மாதங்கள் பன்னிரெண்டில் கடைசி மாதமாகும். சித்திரை தொடக்கம் பங்குனி வரையான தமிழ் மாதங்கள் சூரிய மாதங்களாகும். அதாவது சூரியனைப் பூமி சுற்றுவதனால் ஏற்படும் பூமிக்குச் சார்பான சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே இம் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. சூரியன் இராசிச் சக்கரத்தில் மீன இராசிக்குச் செல்வது பங்குனி மாதப் பிறப்பைக் குறிக்கிறது. இந்த மாதம் முழுதும் சூரியன் மீன இராசியிலேயே சஞ்சரிக்கும். இந்த மாதம் 30 நாட்களைக் கொண்டது. ஆங்கில காலக்கணிப்பின் படி மார்ச்சு மாதம் 15 ஆம் நாளிலிருந்து ஏப்ரல் மாதம் 13 ஆம் நாள் வரையான காலப்பகுதி தமிழ்ப் பங்குனி மாதத்துடன் பொருந்துகிறது.

இந்த மாதத்தில் நாம் செய்கிற சின்னச் சின்ன தானங்கள் கூட மிகுந்த பலன்களைத் தரும் என்றும் ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியத்தைத் தருகிற மாதம் இது என்றும் சிலாகிக்கிறார்கள். பங்குனி மாதத்தில் முறையே நாம் தெய்வ வழிபாடுகளைச் செய்து வந்தால், தடைகளெல்லாம் நீங்கும். வெற்றி தேடி வரும் என்பது ஐதீகம்.

இம்மாதத்தில் தெய்வங்களின் திருமணங்களோடு மனிதர்களின் திருமணமும் நடைபெறுவதால் இது திருமண மாதம் என்ற சிறப்பினைப் பெறுகிறது. இம்மாதத்தில்தான் தாவரங்களில் உதிர்ந்த இலைகள் தளிர்க்க ஆரம்பிப்பதால் இம்மாதம் வசந்த காலத்தின் தொடக்கமாக உள்ளது.

பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமியை ஒட்டி வரும் உத்திர நட்சத்திரத்தில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. இந்நாளிலே சிவன் – பார்வதி, முருகன் – தெய்வயானை, ராமர் – சீதை, ஆண்டாள் – ரங்கமன்னார் போன்ற தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. மேலும் சாஸ்தா, மகாலட்சுமி, அர்ஜூனன் போன்றோர்களின் அவதார தினமாகவும் இந்நாள் கருதப்படுகிறது. பெரும்பாலோனோர் தங்களின் குலதெய்வ வழிபாட்டினையும் இந்நாளில் மேற்கொள்கின்றனர்.

தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்ற நாளாதலால் இந்நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் கல்யாண விரதம் என்றழைக்கப்படுகிறது. நல்ல திருமண வாழ்க்கை வேண்டி மணமாகாதோரும், திருமண வாழ்வானது வளமாகத் தொடர மணமானோரும் இவ்விரதத்தினை மேற்கொள்கின்றனர்.

சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட புனிதவதி என்னும் காரைக்கால் அம்மையாரின் குருபூஜை பங்குனி சுவாதியில் மேற்கொள்ளப்படுகிறது.

பங்குனி மாத விழாக்கள், விசேஷங்கள்!

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெருமை உண்டு. பங்குனி மாதத்தை வசந்த காலம் என்று அழைப்பார்கள். பங்குனி மாதத்தில்தான் பெண்கள் கடைபிடிக்கும் காரடையான் நோன்பு, கடவுள்களின் திருமணங்கள் நடைபெற்ற பங்குனி உத்திரம் என்று பல்வேறு நிகழ்வுகள் நிகழ்கின்றன.

15.03.2023 (பங்குனி 01) காரடையான் நோன்பு :

கார் காலத்தில் விளைந்த நெல்லைக் கொண்டு அடை செய்து கௌரி ஆகிய காமாட்சி அம்மனை சாவித்திரி வழிபட்டதால் இது காரடையான் நோன்பு என்று அழைக்கப்படுகிறது. இவ்விரத முறையானது மாசி மாதக் கடைசி நாள் தொடங்கப்பட்டு பங்குனி முதல் நாள் நிறைவு பெறுகிறது. திருமணமான பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதால் தங்கள் கணவனின் ஆயுள் நீடிப்பதோடு, ஆரோக்கியமான வாழ்வினை அம்மன் அவருக்கு வழங்குகிறாள்.

01.04.2023 (பங்குனி 18) ஆமலகீ ஏகாதசி :

ஏகாதசி, பெருமாளை வணங்குவதற்கு உகந்த நாளாகும். பங்குனி வளர்பிறை ஏகாதசிக்கு 'ஆமலகீ ஏகாதசி" என்று பெயர். இன்றைய தினத்தில் விரதமிருந்து, நெல்லி மரத்தடியில் பரசுராமர் படத்தை வைத்து பூஜை செய்தால் புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். பசு தானம் செய்த புண்ணியமும் கிடைக்கும்.

5.04.2023 (பங்குனி 22) பங்குனி உத்திரம் :

12வது மாதமான பங்குனி பௌர்ணமியுடன் 12வது நட்சத்திரமான உத்திரம் இணையும் புண்ணிய நாளே பங்குனி உத்திரம். பங்குனி உத்திரத்தில்தான் சிவன் - பார்வதி, முருகன் - தெய்வானை, ராமன் - சீதை உள்ளிட்ட தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றன என்று புராணங்கள் கூறுகின்றன. பங்குனி உத்திரம், சிவ மற்றும் முருகப்பெருமானை வழிபட உகந்த நாள். திருமணத் தடைகள் அனைத்தும் விலகும்.

5.04.2023 (பங்குனி 22) பங்குனி பௌர்ணமி :

பௌர்ணமியன்று செய்யப்படும் அம்பிகை வழிபாட்டுக்கு பலன்கள் அதிகம். பௌர்ணமி இரவு நேரத்தில் சிவ வழிபாடு செய்த பிறகு கிரிவலம் மேற்கொண்டால் நன்மைகள் உண்டாகும். உடலும், மனமும் ஆரோக்கியமாகவும். கூடுதலாக வட இந்தியர்கள் கொண்டாடும் ஹோலிப்பண்டிகையும் இந்நாளில் வருகிறது.

18.03.2023 (பங்குனி 4) விஜயா ஏகாதசி :

ஏகாதசி பெருமாளுக்குரிய நாள். பங்குனி மாதத்தில் தேய்பிறை ஏகாதசிக்கு 'விஜயா ஏகாதசி" என்று பெயர். விஜயா ஏகாதசி தினத்தில் ஏழு தானியங்களை ஒன்றன் மேல் மற்றொன்றைப் பரப்பி மகாவிஷ்ணுவை வழிபட்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

2023 (பங்குனி 7) சர்வ அமாவாசை :

இறந்த முன்னோர்களை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள் 'அமாவாசை". இன்று புனித நீர் நிலைகளில் நீராடி தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். பாவங்கள் அனைத்தும் விலகி சகல நன்மைகளும் வந்து சேரும்.

22.03.2023 (பங்குனி 8) யுகாதி பண்டிகை (தெலுங்கு வருடப்பிறப்பு) :

தெலுங்கு பேசும் மக்களின் புத்தாண்டு தினம் 'யுகாதி பண்டிகை". நான்கு நவராத்திரிகளுள் ஒன்றான வசந்த நவராத்திரியும் யுகாதி அன்றுதான் தொடங்குகிறது. இந்த வசந்த நவராத்திரி காலத்தில் அம்மனை வழிபட்டால் அம்மனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.

30.03.2023 (பங்குனி 16) ஸ்ரீ ராம நவமி :

புராண நம்பிக்கையின் படி, மகா விஷ்ணு ராம அவதாரம் எடுத்த நாள் ராம நவமியாகக் கொண்டாடப்படுகிறது.மனிதனாகவே வாழ்ந்து தர்மம், நீதி, நேர்மைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ ராமர். ஒரு மனிதன் எவை எல்லாம் செய்ய வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதாக எடுக்கப்பட்ட அவதாரமே ராம அவதாரம்.

சுபம். நன்றி நன்றி நன்றி

🌞

வாழ்க வெல்க வளர்க

💸

வாழ்க பணமுடன்

💸

ஜெய் ஸ்ரீ ஆனந்த குபேர குருஜி Dr.Star Anand ram பணவளக்கலை Akshyum Divine Center

🕉
🕉

www.drstaranandram.com

#staranand#GuberaGuruji#amavasi#parikaram#mantra#chanting#temple#divine

Back to blog