பணவளக்கலையால் பணத்தை வளர்த்த முடியுமா | பணவளக்கலை பயிற்சி விபரங்கள்

பணவளக்கலையால் பணத்தை வளர்த்த முடியுமா | பணவளக்கலை பயிற்சி விபரங்கள்

பணவளக்கலையால் பணத்தை வளர்த்த முடியுமா | பணவளக்கலை பயிற்சி விபரங்கள்.

அருட்பெருஞ்ஜோதி

பணம் என்றால் என்ன, நம் உழைப்பின் பிரதிபலிப்பின் வெற்றி, நம் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு பொருள், நம்மையும் நம்மை சார்ந்தவர்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்து ஆனந்தமாக நிம்மதியுடன் வாழ வைக்கக்கூடிய ஒரு அற்புதமான கருவிதான் பணம்.

பணத்தை வளர்த்த முடியுமா பணவளக்கலையால் ?

கண்டிப்பாக வளர்த்த முடியும், பணம் வளரும் எப்போது, நம் மனம் வளரும் பொழுது. மனரீதியாக நேர்மறை ஆற்றல்களை பெருக்கி அந்த நேர்மறை ஆற்றல்களுடன் திட்டம் தீட்டி திறன் பட உழைத்தால் பணத்தை பெருக்க முடியும்.

அவ்வாறு ஒரு மனிதன் காலை முதல் இரவு வரையும் பணரீதியான மனதை உருவாக்க, செல்வ ரீதியான எண்ணங்களை உருவாக்க, தன் வாழ்வில் இருக்கக்கூடிய பண எதிர்மறைகள் பணக்கஷ்டங்கள் பண நஷ்டங்கள் கடன் பிரச்சனைகள் மனக்குழப்பங்கள் அவர் செய்யக்கூடிய தொழிலில் வேலையில் இருக்கக்கூடிய தேவையில்லாத காரிய தடைகள் போன்றவற்றை தீர்ப்பதற்கான ஒரு பயிற்சி தான் "பணவளக்கலை"

இந்த பயிற்சியில் சொல்லித் தரக்கூடிய ரகசியங்களை, நீங்கள் கற்றுக் கொண்டால் பணத்தை வளர்க்க முடியும், வாழ்வை வளப்படுத்த முடியும். இதுவரைக்கும் உங்களுக்கு எப்பேர்பட்ட பணம் வந்திருந்தாலும் கூட, இந்த பயிற்சியை கற்றுக் கொள்வதன் மூலமாக பணத்தினால் எவ்வாறு மன நிம்மதியுடன் செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்பதையும் கற்றுக் கொள்ள முடியும், பணப்பிரச்சனை கடன் பிரச்சனையை தவிர்த்து வாழ்வை அழகாக மாற்றிக் கொள்ளவும் முடியும்.

பணத்தை வளர்த்தும் கலை தான் பணவளக்கலை.

இந்தப் பணவளக்கலை பயிற்சி எங்கு கற்றுக் கொள்ள முடியும், ஸ்ரீ ஆனந்த குபேர குருஜி அவர்கள், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஒவ்வொரு ஊர்களில் இந்த பயிற்சியை நடத்தி வருகிறார். கீழ் இருக்கக்கூடிய தொலைபேசி எண்களிலோ அல்லது WhatsApp எண்களிலோ உங்கள் பெயரை பதிவு செய்து கொண்டால் உங்களுக்கு விவரங்கள் அனுப்பப்படும்.

பணவளக்கலை பயிற்சியை நீங்கள் கற்று செயல்படுத்தினால் வெற்றி கிடைக்கும்.

பணவளக்கலை பயிற்சிக்கு கட்டணம் உள்ளதா ?

கண்டிப்பாக கட்டணம் உள்ளது, இலவசம் என்ற ஒரு வார்த்தை தான் மனிதனை இல்லாமல் செய்கின்றது. பணத்தை பெருக்கும் அறிவை நீங்கள் பெற வேண்டும் என்றால், சிறிதளவு பணத்தை நீங்கள் செலவு செய்ய வேண்டும். ஆனால், இந்த பயிற்சிக்கு நீங்கள் கொடுக்கும் பணமானது செலவு அல்ல உங்கள் வாழ்வில் முதலீடு. ஏனென்றால், கோடி கோடியாய் செல்வத்தை குவிக்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் ஒரு துளி அதில் செலவை செய்வது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தித் தரும்.

ஒரு விதைக்கு நீங்கள் செலவு செய்தால் உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் விளைச்சலை வெற்றியை அனுபவிக்க முடியும். பணவளக்கலைக்கு கட்டணம் உள்ளது அந்த கட்டண விவரங்களை தெரிந்து கொள்ள, கீழ இருக்கக்கூடிய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

பணவளக்கலை என்ற பயிற்சி எத்தனை நாள் பயிற்சி ?

பணவளக்கலை, இது ஒரு நாள் பயிற்சி காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெறும். இதை நீங்கள் நேரடியாக கற்றுக் கொள்ள முடியும்.

பணவளக்கலை பயிற்சியை கற்ற உடன் எத்தனை நாட்களில் வெற்றி காண முடியும்?

பயிற்சியை பொருத்தவரைக்கும் இதை நீங்கள் தொடர்ச்சியாய் முயற்சி செய்தால் தான், வெற்றி காண முடியும். நமது குருஜி அவர்கள் 100 நாட்களுக்குள் வெற்றி கிடைக்கும் என்பதை உறுதி செய்கிறார். கற்றுக் கொள்ளுங்கள் வெற்றி அடையுங்கள்.

பணவளக்கலை பயிற்சி எந்த வயதில் இருந்து எந்த வயதில் உள்ளவர்கள் கற்றுக் கொள்ளலாம் ?

பணத்தை எப்போது நீங்கள் கையால் எடுத்து பயன்படுத்துகிறீர்களோ அந்த வயதில் இருந்தே நீங்கள் இதை கற்றுக் கொள்ளலாம், பணம் நம் வாழ்நாளின் இறுதிவரை நமக்கு தேவைப்படுவதால் பணம் எப்போதும் தேவைப்படுபவர்கள் இதை கற்றுக் கொள்ளலாம், அனைத்து வயதிற்கும் உரிய பயிற்சிதான் பணவளக்கலை.

இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களின் அனுபவ பதிவை கொடுக்க முடியுமா?

ஆம் கண்டிப்பாக கொடுக்க முடியும், Panavalakalai என்று தனியாக ஒரு YouTube channel வைத்துள்ளோம். அதில் பல நூற்றுக்கணக்கான மனிதர்களின் வாழ்வில், பணப் பிரச்சனை கடன் பிரச்சனை தீர்த்து வெற்றிகரமாக வாழக்கூடிய அவர்களின் நேரடியான அனுபவ பகிர்வையே அதில் நாங்கள் பகிர்ந்து உள்ளோம். அதை முழுமையாக பார்த்தாலே உங்களுக்கு அதைப் பற்றி தெரிய வரும்.

இந்தப் பணவளக்கலை பயிற்சியை கற்றுக் கொள்ளும் போது குருஜி ஏதேனும் பொருட்கள் தருவாரா ?

ஆம், ஸ்ரீ குபேர குருஜி அவர்கள் பணவளக்கலை பயிற்சியில், முதலில் பண ஆற்றலை தரக்கூடிய அறிவைத் தருவார், அதற்குப் பிறகு அந்தப் பயிற்சியை செய்வதற்கு சில சூட்சம உபகரணங்களையும் தருவார். அதனுடன் சேர்ந்து MONEY REIKI & MONEY HEALING, மணி பிளசிங்கும், குபேர தீட்சையும் இந்த பயிற்சியில் நமக்கு வழங்குவார்.

பயிற்சி கற்ற பிறகு, இந்த பயிற்சியை பற்றின சந்தேகங்களை கேட்க முடியுமா ?

கண்டிப்பாக முடியும், இந்த பயிற்சி கற்ற ஒரு சில நாட்களில், உங்களை பணவளக்கலை WhatsApp group இல் நமது அக்ஷயம் டிவைட் சென்டர் உங்களை இணைத்துக் கொள்வார்கள். அந்த WhatsApp group இல் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பணவளக்கலை பயிற்சியை பற்றிய கேள்விகளையும் அனுபவ பகிர்வுகளையும் தாராளமாக கேட்கலாம். உங்களை தொடர்ந்து வழி நடத்துவது தான் இந்த பணவளக்கலை பயிற்சி.

இது ஒரு நாள் பயிற்சி மட்டுமல்ல, ஒரு நாளில் சொல்லித் தரக்கூடிய பயிற்சியை தொடர்ந்து உங்களை பயிற்சி வைக்கக்கூடிய முயற்சிகளை செய்வதுதான் இந்த பயிற்சியின் சிறப்பு.

பணவளக்கலை பயிற்சி எத்தனை ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது, எந்தெந்த ஊர்களில் நடந்து கொண்டிருக்கிறது, வெளிநாடுகளில் நடக்கிறதா ?

பணவளக்கலை பயிற்சி கடந்த 15 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது, 10 க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய பயிற்சி வகுப்பு. நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் உங்கள் பெயர்களை பதிவு செய்தால் அந்த ஊரில் எப்போது நடக்குமோ, அப்போது இந்த பயிற்சி வகுப்பை பற்றிய விவரங்களை உங்களுக்கு அனுப்பி வைப்போம், அந்த தகவல்களை வைத்து நீங்கள் அந்த நாளில் கலந்து கொள்ளலாம்.

பணவளக்கலை இன்றி நம் குருஜி வேறேதும் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறாரா ?

ஆம், பல்வேறு விதமான பயிற்சிகளை நடத்துகிறார். குருஜியின் மிக முக்கியமான பயிற்சி வகுப்புகள்,

பணவளக்கலை - இது ஒரு நாள் பயிற்சி வகுப்பு தன்னை உணர்ந்து பணத்தை வெல்லும் பயிற்சி வகுப்பு.

வியாபார வசியக்கலை - இதுவும் ஒரு நாள் பயிற்சி வகுப்பு, வியாபாரம் சார்ந்த செல்வ செழிப்பை பெருக்கக் கூடிய ஒரு அற்புதமான பயிற்சி வகுப்பு.

ஆனந்த ரகசியம் - இது 3 நாள் பயிற்சி வகுப்பு, ஸ்ரீ குபேர பீடத்தில் 3 நாளும் குபேர குருஜி உடன் இருந்து பல்வேறு விதமான ஆன்மீக சூட்சமங்களையும், பல்வேறு விதமான செல்வ அறிவையும் நீங்கள் கற்றுக்கொண்டு, வாழ்க்கையில் மிகப் பெரும் உன்னதமான ஆனந்த மனநிலையை உருவாக்கக்கூடிய பயிற்சி வகுப்பு தான் இந்த ஆனந்த ரகசிய பயிற்சி வகுப்பு.

இது மட்டும் இன்றி,

Online workshop, Zoom workshop, WhatsApp workshop இன்று பல்வேறு விதமான பயிற்சிகளை நடத்துகிறார்.

நீங்கள் உங்கள் பெயர்களை பதிவு செய்தால் அடுத்தடுத்த விஷயங்களை உங்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்வார், இதை வைத்து நீங்கள் மறுபடியும் மறுபடியும் கற்று உங்களையும் நீங்களே உயர்த்திக் கொள்ள முடியும்.

Star Anand Ram Videos

பணவளக்கலை கற்ற பிறகு நான் என்ன செய்ய வேண்டும் ?

அந்தப் பயிற்சியை நீங்கள் செயல்படுத்த வேண்டும், அவ்வளவுதான்.

அனைவருக்கும் நன்றிகள் கோடி இந்த பயிற்சிகளில் ஒரு முறை கலந்து கொள்ளுங்கள் 100% வாழ்வில் வெற்றியை காணுங்கள்.

மேலும் விபரங்களுக்கு
786 886 8899 என்கின்ற தொலைபேசி எண்ணிலோ, WhatsApp எண்ணிலோ தொடர்பு கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி !

Back to blog