பழனியும் இரவு செல்வ ரகசிய புஜையும்

பழனியும் இரவு செல்வ ரகசிய புஜையும்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே

பல்வேறு விதமான செல்வ ரகசியங்களையும் வாழ்வியல் மேம்பாட்டு தன்னம்பிக்கை ரகசியங்களையும் பதிவிட்டு வருகின்றோம்.

இன்று பழனி முருகனின் செல்வ ரகசியத்தை பற்றிய ஒரு பதிவை தான் பதிவிடுகின்றோம்.

பழனி மலை முருகன் கோவிலைப் பற்றி வரலாறுகள் கூறுவதையும் நாம் கூற வேண்டும் என்று நினைத்தாலும் பல பதிவுகள் போதாது பல திரைப்படங்களும் போதாது அதற்கு மேலாக பழனி மலையின் வரலாறு உள்ளது.

சமீபத்தில் நான் ஒரு அன்பருடன் பழனிமலை சென்றிருந்தேன். எதிர்பாராத விதமாக பழனிக்கு இரவு தரிசனத்திற்கு சென்றிருந்தோம். அந்த நாளின் கடைசி தரிசனம் அதுதான். அது சரியாக வியாழக்கிழமை இரவு நாங்கள் சென்றிருந்தோம். முருகனுக்கு அழகாக பூ அலங்காரம் செய்திருந்தார்கள் வணங்கிவிட்டு நாங்கள் வெளியே வந்து கொண்டிருந்தபோது எனது நண்பர் கூறியிருந்தார். இறுதியாக ஒரு பூஜை நடக்கும் முருகனை கொண்டு போய் தூங்க வைக்கும் பூஜை. அந்த பூஜையில் சில அதிசயங்கள் நடக்கும் அது உங்களுடைய பணவளக்கலை க்கு சம்பந்தப்பட்டது என்று கூறியிருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது முருகனுக்கும் பணவளக்கலை பயிற்சிக்கும் என்ன சம்பந்தம் என்று யோசனை செய்து கொண்டிருந்தேன். அந்த தரிசனம் வெளியாட்களுக்கு பார்வையிட படாது ஒரு சில நபர்களுக்கு மட்டுமே அந்த தரிசனம் காட்டப்படும் என்றார். போகர் ஓட ஆசீர்வாதத்தால் எங்களுக்கு அந்த தரிசனம் பார்க்கக்கூடிய ஆசீர்வாதம் கிடைத்தது. சரியாக எட்டு 45 க்கு பழனி மலை முருகனை கடைசியாக கற்பூரம் காண்பித்து ஒரு ஐயா முன்னாடி நின்று முருகனிடம் ஒன்று சொல்கிறார் முருகனுடைய பல்வேறு பெயர்களை கூப்பிட்டு அவர் அழைக்கிறார். அவர் அற்புதமான தூய தமிழில் முருகனை மனதார உயிரோட்டத்தோடு அழைக்கின்றார் அந்த நிகழ்வை பார்க்கும் போது உண்மையாகவே முருகன் எழுந்து வந்து விடுவாரோ என்ற சந்தேகம் எழுந்தது அப்படி இருந்தது அவரின் அழைப்பு. அதற்குப்பின் முருகனை ஒரு சிறிய வடிவில் தூங்க வைப்பதற்காக எடுத்துச் சென்றார்கள் அதனுடன் இணைந்து மெல்லிய இசை வாத்தியங்களும் வாசிக்கப்பட்டது அதனுடன் கலந்து வந்த நறுமணமும் நமக்கு அங்கே முருகன் நடந்து வர மாதிரியான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியது. ஒரு நிமிடம் எனக்கு ஆனந்த கண்ணீர் வந்து விட்டது அந்த அளவிற்கு இறையாற்றல் சூழ்ந்து அந்த இடம் காணப்பட்டது. அதன்பின் முருகனை அவர் உறங்கும் இடத்தில் வைத்துவிட்டு.

அதற்குப் பின் நடந்த முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த பழனி மலையின் கணக்காளர்கள் அவர் முன் வந்து நின்று அன்று முழுவதும் என்னென்ன நடந்தது அதாவது வரவு எவ்வளவு செலவு எவ்வளவு எத்தனை பக்தகோடிகள் கோயிலுக்கு வந்தார்கள் சிறப்பு தரிசனத்திற்கு எத்தனை நபர்கள் வந்தார்கள். எத்தனை விதமான சிறப்பு தரிசனங்கள் நடந்தது அபிஷேகங்கள் ஆராதனைகள் நடந்ததை சொல்லி இந்த நாளில் பழனியில் நடந்த வரவு செலவு கணக்கை பழனி முருகனிடம் சொன்னார்கள். அதற்குப்பின் அந்தப் ஐயா மீண்டும் தமிழில் முருகர் இடம் உரையாடுகிறார். உங்களை இங்கே உறங்க வைத்துவிட்டு நாங்கள் மலையை விட்டு இறங்கி உறங்கச் செல்கின்றோம் எங்களை நீதான் காத்தருள வேண்டும் என்று சொல்கின்றார்.

அங்கே நாங்கள் தெரிந்து கொண்ட விஷயம் என்னவென்றால் அருளை மட்டும் போதிக்கின்ற பழம் நீ என்று சொல்லக்கூடிய அந்த பழனி ஆண்டவர். அருளை மட்டுமே ஆசீர்வாதமாக கொடுக்கக்கூடிய நபர் நாம் பொருளை வேண்டுகின்றோம். அந்த கடவுளே தினமும் வரவு செலவு கணக்கை பார்த்து விட்டு உறங்கச் சென்றார் அது மட்டுமில்லாமல் தினமும் என்ன உடை அணிய வேண்டும் என்ன அலங்காரம் செய்ய வேண்டும் என அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்ய வேண்டும் என்று அட்டவணையிட்டு அதன்படி நடக்கின்றார்.

இதில் நாம் ஒன்றும் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. அருளை மட்டும் தரக்கூடிய பழனிமலை முருகனே இரவு தூங்குவதற்கு முன்பு கணக்கு வழக்கை பார்த்துவிட்டு அதிகாலையில் எழுந்து விடுகிறார் அதுபோல நம் வாழ்விலும் இது சம்பந்தப்பட்டுள்ளது நாம் தூங்குவதற்கு முன்பு நம் வாழ்வில் அன்றைய நாளில் என்னென்ன வரவுசெலவு நடந்தது என்று தவறாமல் தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு பார்த்துவிட்டு அதிகாலையில் எழுந்து மீண்டும் என்னென்ன செய்ய வேண்டும் என்று அட்டவணையிட்டு செயல்பட்டால் நிச்சயம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய பலதடைகள் பணப் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்.

அந்த இரவு தரிசனம் எங்களுக்கு மிகுந்த பாடத்தை கற்று தந்தது. பொருளை நாளே செல்கின்ற நாமளும் தினசரி கணக்கு வழக்கை பார்த்துவிட்டு அதன் பிரகாரம் செல்வத்தை ஈட்டுவதற்காக அதிகாலையில் எழுந்து உழைக்க தொடங்கினால் நிச்சயம் நம் வீட்டில் செல்வம் பெருகும் நாம் நினைத்த பொருள் நம்மை வந்தடையும் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். இதை மனதில் வைத்துக்கொண்டு இன்றிலிருந்து செயல்படுங்கள்.

எல்லாம் வல்ல இறைவன் சரவணபவன் நாம் அருகில் இருந்து காத்தருள்வார்.

முதல் சித்தர் தமிழ் கடவுள் முருகன் நிச்சயம் நமக்கு வழி வகுப்பார்.

சகல ஐஸ்வரியங்களும் பெருகட்டும்! வாழ்க பணமுடன்!

Back to blog