7000 கேமராக்களை ஒன்றாக பார்க்க வேண்டுமா

7000 கேமராக்களை ஒன்றாக பார்க்க வேண்டுமா

வின்டேஜ் கேமரா மியூசியம் சிங்கப்பூரில் எடுத்த ஒரு புகைப்படத்தின் சுவாரசியமான விஷயத்தை இன்றைய புகைப்பட நாளில் அதாவது கேமரா
கூட பகிர்ந்து கொள்வதில் எனக்கு பெருத்த ஆனந்தம்

தற்காலத்தில் கேமரா என்றால் செல்போனையும் டிஎஸ்எல்ஆர் கேமரா வை தான் நமக்குத் தெரியும் ஆனால் பழங்காலத்தில் இருந்தே தற்போது உள்ள அனைத்து விதமான கேமராவையும் ஒன்றாக பார்க்க வேண்டுமென்றால் நாம் சிங்கப்பூர் செல்ல வேண்டும் சிங்கப்பூரில் உள்ள Jalan Kledek என்ற இடத்தில் வின்டேஜ் கேமரா மியூசியம் உள்ளது மேலே நான் பதிவு செய்த புகைப்படம் அங்கு நான் சென்றபோது எடுத்ததுதான்

அந்த கட்டிடமே கேமரா போல்தான் இருக்கும் கார் நிறுத்துமிடத்தில் பல்வேறுவிதமான கேமராவை வடிவமைத்துள்ளார்கள் கேமரா எவ்வாறு இருப்பதை அப்படியே வெளிப்படுத்தும் அதுபோலவே வெள்ளை நிறத்தில் இந்த கட்டிடம் மிக அழகாக கேமரா வடிவத்திலேயே உள்ளது

மிகப்பெரிய கேமராவிலிருந்து மிக சிறிய கேமரா அவரை அனைத்தும் இங்கு உள்ளது இங்கு சுமார் ஆயிரம் வகை கேமராக்கள் உள்ளன 6 மீட்டர் அளவில் மிகப்பெரிய கேமரா இங்கு உள்ளது அது மிகச் சிறிய ஸ்பை கேமராவை இங்கு உள்ளது

7000 கேமராக்களை இங்கு வைத்துள்ளார்கள் கடந்த 20 ஆண்டுகளாக இதை தேடித்தேடி சேகரித்து வைத்துள்ளனர் 1800ஆம் ஆண்டு கேமரா
கூட இன்று உள்ளது 1800ஆம் ஆண்டு கண்டுபிடித்த கேமராவில் கூட இங்கு இருப்பது ஆச்சரியமான ஒன்று

புறாவின் இறகை விட மிகக் குறைந்த எடையுள்ள கேமராவும் உண்டு aka droning
என்ற வகை கேமரா உலகப் போர் ஒன்று மட்டும் இரண்டிலும் பயன்படுத்தப்பட்ட கேமரா வகைகளும் இங்கு உண்டு விளையாட்டு வகை கேமராவும் உள்ளன 007 James Bond படத்தில் பயன்படுத்திய வகை கேமராவும் இங்கு வைத்துள்ளார்கள்

இந்த மியூசியத்தில் சிறப்பு மற்ற மியூசியங்கள் சென்றால் எதை தொடக் கூடாது அதை தொடக் கூடாது என்பார்கள் ஆனால் இங்கே நாம் அந்த மியூசியத்தில் உள்ள ஒவ்வொரு பொருளையும் எடுத்து தெளிவாக பார்க்க முடியும் 3 டி கேமிரா 1860 நாளிலேயே அறிமுகப்படுத்தி உள்ளார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது ஆம் இது தற்போதைய கண்டுபிடிப்பு அல்ல இங்கு மரத்திலான இரண்டு 3D கிளாஸ் யிலான கண்ணாடிகளும் இங்கு உள்ளன

ஸ்ரீதர் என்ற இந்திய வம்சாவளி தமிழர் இதை நிர்வகித்து வருகிறார் என்பது நமக்கு ஒரு பெருமையாகும் இருக்கின்றது புகைப்படத் துறையில் ஆர்வமுள்ளவர்கள் கேமராவை பற்றி அனைத்தும் தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்கள் கண்டிப்பாக சிங்கப்பூரில் பார்க்க வேண்டிய இடம் இங்கு நாம் செல்வதற்கு சிறிய நுழைவுக் கட்டணம் வாங்குகிறார்கள் ஆனால் அதில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் மிகப்பெரிய அளவில் இருக்கின்றன நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய கேமராவின் அனைத்து விஷயங்கள் தெரிந்து கொள்ள நாம் செல்லவேண்டிய இடத்தை நான் இங்கு பதிவு செய்துள்ளேன் நீங்களும் சென்று வாருங்கள் ஆனந்தம் அடையுங்கள் இதோடு அட்ரஸ் மற்ற விபரங்கள் கீழே

Vintage Camera Museum

Admission: $20 for adults, $15 for senior citizens and children below 12
Opening hours: 10.30AM-9.30PM
Address: 8C & 8D Jalan Kledek, Singapore 199263
Telephone: 6291 2278

Back to blog