சகல பாவம் போக்கும், செல்வம் பெருக்கும் மூன்றாம் பிறை தரிசனம்

சகல பாவம் போக்கும், செல்வம் பெருக்கும் மூன்றாம் பிறை தரிசனம்.

மூன்றாம் பிறை

வானில் தோன்றும் மூன்றாம் பிறை நிலவைத் தரிசிப்பதையே, 'பிறை காணுதல்' என்கின்றனர். பஞ்சாங்கத்திலும், காலண்டரிலும் மூன்றாம் பிறையை மக்கள் பார்க்கவேண்டும் என்பதற்காக 'சந்திர தரிசனம்' என்று குறிப்பிட்டுள்ளது.

ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால், மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும்.

அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை

ஸ்ரீ சக்தி கணபதியே துணை!

கீழ்க்கண்ட மந்திரத்தை

இன்று 108 முறை ஜெபிக்கவும்

ஸ்ரீ சக்தி கணபதியே துணை!
ஸ்ரீ சக்தி கணபதியே போற்றி
ஸ்ரீ சக்தி கணபதியே சரணம்

சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும். காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காணவேண்டும் என்று கூறினார்கள்.

மூன்றாம் பிறை உருவான கதை :

ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம் செய்தார். தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர். உடனே தங்களின் தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர் . தட்சனோ தனது அறியாமையால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார். இறுதியில் 27 நட்சத்திர மனைவியரும் சந்திரனும் சிவ பெருமானை நினைத்து தவம்புரிந்தனர். சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தன் தலைமுடியில், ‘மூன்றாம் பிறையாக’ அமரும் பேறுபெற்றார்.

சுறுசுறுப்போடு அதேநேரம் சிறுகச் சிறுக வளர்ந்தால் முழுப்பலனையும் அடையமுடியும் என்னும் கருத்தை வலியுறுத்துகின்றது இந்த பிறை. இதை வைத்துத்தான் எண்பது வயது நிறைவுற்றவர்களை 'ஆயிரம் பிறை கண்டவர்' என்று அவருக்குச் சதாபிஷேகம் செய்து கொண்டாடுகின்றோம்.

பலன்கள் :

அமாவசையை அடுத்து வரும் மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வரும் மூன்றாம் பிறை மிகவும் விசேஷமான ஒன்றாகும். குறிப்பாக சித்திரை, வைகாசி மாதங்களில் வரும் இப்பிறையைக் கண்டால் ஓர் ஆண்டு சந்திர தரிசனம் செய்த பலன் கிடைக்கும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் வரும் மூன்றாம் பிறையைக் கண்டால் சகல பாவங்களும் தொலையும்.

காலை வேளை பிரம்ம முகூர்த்தமாகும். மாலை வேளை விஷ்ணு முகூர்த்தமாகும். எனவே, அந்த வேளையில் சந்திர தரிசனம் செய்து, வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் செல்வம் பெருகும்.

திருமணம் ஆனவர்கள் தம்பதி சமேதராக சந்திர தரிசனம் செய்யலாம். திருமணம் ஆகாதவர்கள் பெற்றோருடன் சேர்ந்து மூன்றாம் பிறையை தரிசிக்கலாம். இதனால் குடும்ப ஒற்றுமை பெருகும்.

அமாவாசை கடந்த மூன்றாவது தினம் சந்திரபிறை தரிசனம் காணவேண்டும், செல்வவளம் பெருகும், தேவைகள் யாவும் பூர்த்தியாகும், பிறை தரிசன நாளை தினசரி காலாண்டரிலும். பஞ்சாங்கத்திலும் கண்டறியலாம், சந்திர தரிசனம் சிவன் பார்வதி என பலரும் குறிப்பிடுவது உண்டு, எனினும் ஸ்ரீ மகாவிஷ்ணுவும் ஸ்ரீ மகாலட்சுமி ஆவார்கள், சிவனின் தலையில் புனித கங்கைக்கு அருகில் இருப்பவர்கள் செல்வ சந்தோஷ கடவுளான இவர்களே ஆவார்கள், சந்திரனுக்குரியவரும் ஸ்ரீ ஹரியே ஆவார், மாலை வேலைக்கும். மேற்க்குக்குரிய சனிஷ்வரருக்கும் உரியவரும் ஸ்ரீ ஹரியே ஆவார், செல்வத்துக்குரியவரும் மனமகிழ்ச்சிக்கு உரியவரும் காக்கும் இறைவனான ஸ்ரீ விஷ்ணு தம்பதியே ஆவார் .


காலை வேளை பிரம்ம வேளையாகும், மாலை வேளை எப்பொழுதுமே விஷ்ணு வேளையாகும், ஆக மாலை வேளையில் மேற்கு திக்கில் அடிவானத்தில் அமாவாசை மூன்றாவது தினம் சந்திர தரிசனம் கண்டு வணங்க வேண்டும்,

அதற்கான முறைகளையும் காண்க, ஒரு தாம்புள தட்டில் பச்சரிசி அல்லது பச்சை நெல் பரப்பி அதன் குலவிளக்கான காமாட்சி அம்மன் விளக்கு வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி பஞ்சு அல்லது பருத்தி நூல் திரி போட்டு மேற்கு பக்கமாக விளக்கு முகம் வைத்து ( வெளியில் வந்து வழிபாடு செய்ய வேண்டும்,) ஏற்றி வணங்க வேண்டும், அப்போது இறைவனை மும்மூர்த்தியாகவும் பாவித்து வணங்கலாம், அவர்களிடம் அதாவது பிறையை பார்த்து கையேந்தி வணங்க வேண்டும், தேவையை கேட்க வேண்டும், இந்த தேவையை கேட்கும் முன் இன்று காலையில் இருந்து ஏதாவது ஒரு உயிருக்காவது உணவு தண்ணீர் தர்மம் செய்திருக்க வேண்டும், இந்த தர்மம் நம் சேமிப்பு கணக்கில் இருக்கும், இதை அளந்தே இறைவன் நமக்கு கூலி வழங்குவார், இதைத்தான் முன்னோர்கள் கையில் ஏதாவது வைத்துக் கொண்டு வணங்க வேண்டும் என்றார்கள், பின்னாளில் வந்தவர்கள் கையில் காசு. நகை. தானியம். மாங்கல்யம்.

இவைகளை வைத்து வழிபடும் முறைகளை செய்தார்கள், தவறாக புரிந்து கொண்டவர்கள் காட்டிய வழி இன்றும் கையாளப்படுகிறது , கையில் எதுவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை, தர்ம பலம் . மனதிலே அன்பு பலம் இவை மட்டும் கொண்டு மேற்கு நோக்கி தீபம் ஏற்றி கையேந்தி வழிபட நாம் செய்து வைத்துள்ள தர்மத்தின் கூலியாக நம் தேவைகளை இறைவன் பூர்த்தி செய்வார்.

சூரியனிடமும். சந்திரனிடமும் வேறு எந்த தெய்வத்திடமும் நாம் வேண்டியதை கேட்கும் போது கையேந்தியே கேட்க வேண்டும், அதுவே யாசகம் பெருவது . ஸ்ரீ கிருஷ்ணர் கூட கர்ணனிடம் யாசகம் பெரும்போது கையேந்தியே பெற்றார், எனவே இந்த கையேந்துவதை இறைவனிடத்தில் ஒரு தவறான கண்ணேட்டத்தில் காண கூடாது, இல்லாத ஒன்றையோ.

தேவையையோ நாம் இறைவனிடம் கேட்டால் நாமும் பிச்சை எடுப்பவர்தான், பிச்சை என்பதை தவறானதாக கருதக்கூடாது, சிவபெருமான் கூட அனு தினம் அவரவர் செய்து வைத்துள்ள தர்மத்தை பிச்சையாக வாங்கி அதன் பலனை அவரவருக்கு பிச்சை இடுவார், இதை படி அளப்பது என்பார்கள், எனவே இதை உணர்ந்து பவ்வியமாக மரியாதையாக பிறை தரிசனம் செய்யும் போது வேண்டுங்கள், செல்வ சந்தோஷ வளம் கிட்டும், வணங்கி முடித்த பின் அந்த தீபத்தை ஒரு முறை சுற்றி வந்து வடக்கு நோக்கி விழுந்து வணங்கவும், பின்பு சிறிது தண்ணீர் எடுத்து பூமியில் விட்டு.

தீபத்தை அணையாமல் நடு வீட்டில் கொண்டு வந்து வைத்து வணங்கவும், இதுபோல் குறைந்தது மூன்று சந்திர தரிசனத்தையாவது செய்வது நலம், ஆயுளுக்கும் செய்து வந்தால் தரித்திரனும். அவனிருக்கும் போதே உயர்ந்த செல்வத்தை பெறுவான் இது உறுதி, அனுபவ வெற்றி .

மேக மூட்டமாக உள்ள காலங்களில் பிறை தெரியாது , எனினும் கவலை இல்லை , மாலை 6 1/2 மணி முதல் 7 1/2 மணிக்குள் மேற்கு திசை அடிவானத்தை பார்த்து கூறிய முறைப்படி வழிபட்டால் போதும், நலம் பயக்கும்,

பிறை தரிசனம் செய்யும் போது நிதான மன பக்குவத்துடன் செய்ய வேண்டும், அவசர வேலையை வைத்துக் கொண்டோ ஏதோ ஒப்புக்காகவோ. கோபதாபங்களோடோ பிறை தரிசனம் செய்ய கூடாது, குறிப்பாக அழகையுடன் பிறையை காண கூடாது, என்ன மனநிலையில் நாம் பிறையை காண்கிறோமோ அதுவே வரமாக நமக்கு பெருகி கிடைக்கும், எனவே நல்ல மனதோடு தேவைகளை கேட்க வேண்டும்,

அசைவ உணவை விரும்பி உண்ணும் இஸ்லாமியர்கள்கூட இந்த பிறை தரிசனத்தை காணும் நாளில் கடுமையான விரதங்களை மேற்கொண்ட பின்னரே பிறை தரிசனம் கண்டு விரதத்தை பூர்த்தி செய்வார்கள், இந்த பிறைநாள் செவ்வாய்.

வெள்ளி. சனி கிழமைகளில் வந்தால் இரட்டிப்பான பலன்கள் உண்டு, அதே போல் சித்திரை. வைகாசி மாதங்களில் காணும் பிறை தரிசனத்திற்கு ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும், அதே போல் கார்த்திகை. மார்கழி மாதங்களில் காணும் பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும், ஆக மகிமை பெற்ற சந்திர பிறை தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும் கேட்ட வரம் கிடைக்கும், செல்வமும் சந்தோஷமும் தேடிவந்து அமையும்திருமணம் ஆனவர்கள் தம்பதி சமேதராய் நின்று பிறையை வணங்க வேண்டும்,திருமணம்ஆகாதவர்கள் பெற்றோர்களுடன் நின்று பிறை தரிசனம் காண வேண்டும், சூழ்நிலையால் முடியாதவர்கள் தனித்து நின்றும் வழிபடலாம், இந்த பிறை தரிசனம் காண ஆண்.பெண் பேதமில்லை, யாருக்கு செல்வம். சந்தோஷம். கல்வி வேண்டுமோ அவரவர் தரிசனம் கண்டு வணங்கி கேட்க நிச்சயம் கிடைக்கும் .

ஓரிரு முறை தரிசனம் கண்டும் இன்னும் எதுவும் கிடைக்கவில்லையே என வெதும்பக் கூடாது , நமக்கு கர்ம பாவங்கள் சூழ்ந்த நிலையில் இறைவன் அதை முதலில் சரிசெய்வார், பின்பு யோகத்தை அருளுவார், எனவே பொறுமையாக உண்மையாக வழிபட்டு வரவேண்டும், சிலருக்கு ஒரே தரிசனத்திலேயே கிடைத்து விடும், கர்ம வினை பாவம் நிறைந்தவராக இருந்தால் 12 மாதம் பிறை தரிசனம் கண்டவுடன் தான் பலன் கிடைக்கும், எனவே யாருக்கு எவ்வளவு வினைகள் இருக்கிறது என யாருக்கும் தெரியாது , எனவே இறைவன் மேல் நம்பிக்கை வைத்து தரிசனம் காணுங்கள் அளவு கடந்த நன்மைகளை பெறுங்கள் .

சுபம்.

நன்றி நன்றி நன்றி 🌞
வாழ்க வெல்க வளர்க 💸

வாழ்க பணமுடன் 💸

ஸ்ரீ ஆனந்த குபேர குருஜி
Dr.Star Anand ram
பணவளக்கலை
Akshyum Divine Center
🕉🕉
www.drstaranandram.com

#staranand #GuberaGuruji #amavasi #parikaram #mantra #chanting #temple #divine

Back to blog