ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே
இது ஒரு கொரானா காலம் அதாவது நம் மனதை குழப்பக் கூடிய காலம். இதைப் பற்றி தெரியாமலே நிறைய பேர் குழப்பிக் கொண்டு இருக்கிறார்கள். கொரானா என்பது எதிர்பாராமல் உருவாகிய ஒரு பெரும் தொற்று நோய். இந்த தொற்று நோயை பார்த்து நீங்கள் பயந்து கொண்டே இருந்தீர்கள் என்றால் அதுவே உங்களுக்கு மன ரீதியான பல பிரச்சினைகளைக் கொடுக்கும்.அந்த நோயை பற்றியே தொடர்ந்து பார்த்துக் கொண்டு பேசிக்கொண்டு சிந்தித்து கொண்டு இருந்தால் அதன் மீது நமக்கு பயம் உண்டாகும். அந்த பயமே நமக்கு பல வகையான நோய்களை அளிக்கும். ஒரு விஷயம் மட்டும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே எதை நாம் அதிகமாக கேட்கிறோமோ பேசுகிறோமோ சிந்திக்கிறோமோ பார்க்கிறோமோ அதுவாகவே நாம் ஆகிறோம் என்பது தான் உலக நியதி. கடந்த ஓராண்டு காலமாகவே நாம் எதிர்பாராத விதமாக இந்த கொரானா என்கின்ற நோயைப் பற்றித் தான் பார்த்துக் கொண்டு பேசிக் கொண்டு சிந்தித்துக் கொண்டு இருக்கின்றோம். இதுவே உங்களுக்கு மன ரீதியாக ஒரு நோயை உருவாக்கிவிடும். நம் மனதை தயாராகி விட்டால் நம் உடலில் இருக்கும் பல பிரச்சனைகளை தீர்த்து விடலாம்.
பல மருத்துவர்கள் கூறுகையில் இந்த கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களை விட கொரோனாவை பற்றி பயந்தவர்கள் தான் அதிகம். இதன் மூலமாகவே அவர்களுக்கு பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றது.
அன்பு நண்பர்களே நாம் இப்போது லாக்டோன் மூலமாக வீட்டில் இருக்கின்றோம் ஆதலால் இந்த சூழ்நிலையில் நீங்கள் எதிர்மறையான எந்த செய்திகளையுமே கேட்காமல் தவிர்த்து இருப்பது நல்லது. அது செய்தித்தாள்கள் மூலமாக வந்தாலும் சரி அல்லது தொலைக்காட்சியின் வாயிலாக அல்லது சமூக வலைத்தளங்கள் வாயிலாக வந்தாலும் சரி நீங்கள் அதை பார்க்காமல் கேட்காமல் தவிர்த்திருப்பது மிகவும் நல்லது.
செய்திகள் பார்ப்பது நல்லது தான் ஆனால் கொரோனவை பற்றி அதிகமாக பார்த்து நீங்களும் பயந்து உங்கள் குடும்பத்தாரும் பயந்து இருப்பது நல்லதல்ல. கொரனோ நோய் இன்னும் சில ஆண்டுகளில் நம்மை விட்டு சென்று விடும் ஆனால் மன நோய் நம்மைவிட்டு நீங்காது.
வயிற்றுக்கு எப்படி நாம் தீனி போடுகின்றோம் அதுபோலத்தான் நம் மனதிற்கும் நல்ல சொற்களை தீனியாக போடுங்கள். அது உங்களுக்கு நன்மைகளை தான் தரும்.
எதிர்மறை கைகளை விட்டுவிட்டு நேர்மறை களை செய்யுங்கள் அதுவே உங்களுக்கு தன்னம்பிக்கைகளை அதிகப்படுத்தும். அரசாங்கம் கூறும் பாதுகாப்பை பின்பற்றி விட்டு ஆரோக்கியமான உணவு பழக்கங்களை மேற்கொள்ளுங்கள். உங்கள் அறிவை மேம்படுத்தும் விதமான பல நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள்.
கொரோனாவை பற்றி எண்ண வேண்டாம் நல்ல ஆரோக்கியமான உடல்நிலை வேண்டுமென்று நேர்மறையான எண்ணத்துடன் செயல்படுங்கள் உங்களையும் உங்களை சார்ந்தவர்களையும் ஆரோக்கியமாக வைத்திருங்கள்.
நல்லதையே சிந்திப்போம் நல்லதைப் பேசுவோம் நல்லதே நடக்கும்!
நன்றிகள் கோடி
ஜெய் ஆனந்தம்