வாழ்க்கை மாற்ற இந்த விஷயத்தை தினமும் கடைபிடிக்க வேண்டும்

வாழ்க்கை மாற்ற இந்த விஷயத்தை தினமும் கடைபிடிக்க வேண்டும்

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே

நம்பிக்கை என்கின்ற வார்த்தை எவனொருவன் வாழ்விலும் வெற்றியை தந்தே தீரும். சமீபத்தில் வாட்ஸ்அப் மூலம் வந்த ஒரு வீடியோவை நான் பார்த்தேன். அதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டு போனேன். அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன்.

இன்னொரு மாரத்தான் என்கின்ற ஓட்டப் பந்தயத்தில் ஒற்றைக்கால் உடைய ஒரு நபர் முழு மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் ஓடி முடித்து அவர் நண்பர்களுடன் உற்சாகத்தில் செம்மையாக வெற்றி வெள்ளத்தின் மூழ்கியிருந்தார். ஒரு விஷயம் கவனித்தீர்களா நம்மால் சாதாரண உடற்பயிற்சி செல்வதற்கே யோசிக்கும் என்றும் அதற்கான முயற்சிகளை எதுவும் எடுப்பதில்லை. நம்முடைய ஆரோக்கியத்தை நாம் பார்ப்பதற்கே நாம் சிரமப்படுகிறோம்.

ஆனால் இந்த ஒற்றைக் கால் உடைய நபர் முழு மாரத்தான் ஓட்டப் பந்தயத்தை முடித்துவிட்டு உற்சாகமாகவும் மிக சந்தோசமாகவும் தன்னம்பிக்கையோடும் அவர் ஆட்டம் ஆடி கொண்டாட்டத்துடன் மிக மகிழ்ச்சியாக இருந்தார்.

யார் ஒருவர் தன்னம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும் செயல் படுகிறார்கள் அவர்களுக்கு நிச்சயம் வெற்றியுண்டு அந்த வெற்றியை ருசிக்கும் கொண்டாட்டமும் நிச்சயம் அவர்களுக்கு கிடைக்கும். வெற்றி பெறுவதற்கு உடலுறுப்புகள் அவசியமில்லை தன்னம்பிக்கைதான் மிக பெரிய ஆயுதம்.

கையில் இல்லை என்றாலும் தன்னம்பிக்கை வைத்து நம்மால் போராட முடியும் நம்மால் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் இந்த பதிவே.

உங்களை வேறு யாராலும் உற்சாகப்படுத்தவும் ஊக்குவிக்கவும் முடியாது உங்களை நீங்களே உற்சாகப் படுத்திக் கொள்ளுங்கள் உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.அதுதான் உங்களின் தன்னம்பிக்கையை பலப்படுத்தும் மற்றவர்கள் அதைச் செய்வார்கள் இதை செய்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்.

உங்கள் குறையை நினைத்து நீங்கள் வருத்தப்படாதீர்கள் அதை நிறை செய்வதற்காக நீங்கள் உண்மையாக உழையுங்கள் போராடுங்கள் முயற்சி செய்யுங்கள் அதுவே உங்கள் குறையை போக்கி கொண்டாட்டத்தில் ஆழ்த்தும்.

சீனாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஒரு வசனத்தை எழுதி வைத்திருப்பார்கள் "உன்னால் முடியாது என்றால் எவராலும் முடியாது இப்போது முடியாது என்றால் எப்போது மே முடியாது" என்றுஎழுதி வைத்திருப்பார்கள் அதுபோல தான் நீங்களும் செயல்பட வேண்டும்.

ஆகையால் எனது அருமை நண்பர்களே உற்சாகத்துடன் செயல்படுங்கள் வெற்றி நிச்சயம் உங்களை வந்து சேரும்.

நன்றிகள் கோடி!!!

ஜெய் ஆனந்தம்!!!

Back to blog