அதிர்ஷ்டத்தை தரும் ஜயேஷ்ட அமாவாசை

அதிர்ஷ்டத்தை தரும் ஜயேஷ்ட அமாவாசை.

அமாவாசை என்றாலே விசேஷம் தான் என்றாலும், வருகிற 19 ஆம் தேதி வர இருக்கும் ஜயேஷ்ட அமாவாசை

அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை

ஸ்ரீ சக்தி கணபதியே துணை!

இன்னும் சில நாட்களில் வர இருக்கும் ஜயேஷ்ட அமாவாசை திருமணமான பெண்களுக்கு மிகவும் விசேஷமானது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த இந்நாளில் சனி ஜெயந்தியும் வர இருப்பது கூடுதல் விஷேஷம் ஆகும்.

மூன்று விசேஷங்கள் வருவதால் ஜயேஷ்ட மாத அமாவாசை மிகவும் விசேஷமானது. சனி ஜெயந்தியும், ஜ்யேஷ்ட அமாவாசை நாளில் வருகிறது, இந்த நாளில் திருமணமான பெண்கள் சாவித்திரி விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள். ஜ்யேஷ்ட அமாவாசை அன்று நீராடுவது, தானம் செய்வது, விரதம் இருப்பது, ஆலமரத்தை வழிபடுவது மிகுந்த பலன்களைத் தரும்.

இந்த ஆண்டு ஜ்யேஷ்ட அமாவாசை மே 19 ஆம் தேதி வருகிறது. அதாவது மே 19 ஆம் தேதியே சாவித்திரி விரதம் அனுசரிக்கப்படுவதுடன், சனி ஜெயந்தியும் கொண்டாடப்படும். இவ்வாறு செய்வதன் மூலம் முன்னோர்களின் ஆசிர்வாதமும், சனி பகவான், விஷ்ணு, சங்கரர் ஆகியோரின் ஆசியும் கிடைக்கும்.

ஜயேஷ்ட அமாவாசை அன்று புண்ணிய நதிகளில் நீராடினால் 7 பிறவிகளின் பாவங்கள் நீங்கும். அதுமட்டுமல்லாமல், இந்த நாளில் கண்டிப்பாகச் தர்ப்பணம் செய்வது, முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். ஜயேஷ்ட அமாவாசை திதி மே 18, 2023 அன்று இரவு 9.42 மணிக்கு தொடங்கி மே 19, 2023 அன்று இரவு 9.22 மணிக்கு முடிவடையும். உதயதிதியின்படி மே 19 வெள்ளிக்கிழமை ஜ்யேஷ்ட அமாவாசையாகக் கருதப்படுகிறது.

அமாவாசை பரிகார நேரம்:

ஜயேஷ்ட அமாவாசை அன்று நீராடும் நேரம் - காலை 05.15 முதல் மாலை 04.59 வரை
சாவித்திரி பூஜை முஹூர்த்தம் - காலை 05.43 முதல் 08.58 வரை
சனி பகவான் பூஜை முஹூர்த்தம் - மாலை 06.42 முதல் 07.03 வரை

ஜயேஷ்ட அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரங்கள்:

ஜயேஷ்ட அமாவாசை நாளில் புனித நதி, நீர்த்தேக்கம் அல்லது குளத்தில் நீராடுங்கள். மேலும் சூரியபகவானுக்கு அர்க்யா அர்ச்சனை செய்யவும். அமாவாசை தினத்தன்று பாயும் நீரில் கருப்பு எள்ளைப் விட்டால் பல தொல்லைகள் நீங்கும்.

இதனால் நம்மிடம் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நன்மை உண்டாகும்.

முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய தர்ப்பணம் கொடுத்து, ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவும் அமாவாசை நாள் முக்கியமானது. இந்நாளில் குளித்த பின் தானம் செய்யவும். ஜயேஷ்ட அமாவாசை நாளில், திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக யம தேவதையை வைத்து வழிபட வேண்டும்.

சனி தேவன் ஜயேஷ்ட அமாவாசை அன்று பிறந்தார். சனி ஜெயந்தி அன்று சனிதேவருக்கு நல்லெண்ணைய் கறுப்பு எள், கறுப்பு ஆடைகள் மற்றும் நீல நிற மலர்களை சமர்பிக்கவும். சனி காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கவும். சனிஸ்வர மூலமந்திரமான ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ என 1008 முறை உச்சரிக்கவும்

ஸ்ரீ குபேர பீடத்தில் குல தெய்வ ஆசி பெற சிறப்பு பூஜையும் நடைபெறும் உலக நன்மைக்காக

ஜெய் ஆனந்தம் ஆனந்தம் அனைவர்க்கும்

சுபம்.

நன்றி நன்றி நன்றி 🌞
வாழ்க வெல்க வளர்க 💸

வாழ்க பணமுடன் 💸
ஜெய் ஸ்ரீ ஆனந்த குபேர குருஜி

Dr.Star Anand ram
பணவளக்கலை
Akshyum Divine Center
🕉🕉

Back to blog