வாடகை வீடு குடி போக, கிரகப்பிரவசம் செய்ய உகந்த மாதங்கள்.. | House Shifting best Months in Tamil Calender

வாடகை வீடு குடி போக, கிரகப்பிரவசம் செய்ய உகந்த மாதங்கள்.. | House Shifting best Months in Tamil Calender

சித்திரை:
வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் எந்த கவலையுமின்றி தாராளமாக வீடு குடி புகுதல் மற்றும் கிரக பிரவேசங்களை செய்யலாம்.

வைகாசி:
வைகாசி மாதத்திலும் வாடகை வீட்டிற்கு குடி புகுதல் மற்றும் கிரக பிரவேசம் செய்வது நன்மையை தரும்.

ஆனி:
ஆனி மாதத்தில் வீடு குடி போக கூடாது. ஏனென்றால், இந்த மாதத்தில் தான் மகாபலி சக்கரவர்த்தி தனது ராஜ்ஜியம் முழுவதையும் இழந்தார். அதனால், நாம் வாழும் வீட்டை ஆனி மாதத்தில் கிரகப் பிரவேசம் செய்வது, புது வீடு கட்ட தொடங்குவதை தவிர்க்க வேண்டும்.

ஆடி:
ஆடி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது மற்றும் புது வீடு கட்ட தொடங்குவதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த மாதத்தில் தான் மிகப்பெரிய சிவ பக்தனான ராவணன் தனது இலங்கை கோட்டையை இழந்தார்.

Gubera Peedam Address

ஆவணி:
ஆவணி மாதம் வீடு குடி போக மற்றும் கிரக பிரவேசம் செய்ய உகந்த நல்ல மாதம் தான்.

புரட்டாசி:
புரட்டாசி மாதத்தில் வீடு குடி போகுதல், புது வீடு கட்ட தொடங்குவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த மாதத்தில் தான் இரணியன் தனது அரண்மனையிலேயே நரசிம்ம மூர்த்தியினால் சம்ஹாரம் செய்யப்பட்டார்.

ஐப்பசி:
ஐப்பசி மாதத்தில் வீடு குடி போகலாம். அதேபோல் கிரக பிரவேசம் செய்ய உகந்த மாதமும் கூட.

கார்த்திகை:
கார்த்திகை மாதத்திலும் வீடு குடி போகலாம், புது வீடு கிரக பிரவேசம் செய்யலாம். இதுவும் உகந்த மாதமே.

மார்கழி:
மார்கழி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதத்தில் துரியோதனன் தனது ராஜ்ஜியத்தை இழந்தார். அதேபோல், புது வீடு கட்ட தொடங்குவதையும் தவிர்க்க வேண்டும்.

தை:
தை மாதத்தில் எந்த சந்தேகமும் இல்லாமல் தாராளமாக வீடு குடி புகுதல் மற்றும் கிரக பிரவேசம் செய்யலாம்.

மாசி:
மாசி மாதத்தில் தான் சிவபிரான் ஆலகால விஷம் அருந்தி மயக்கமடைந்தார். அதனால், மாசி மாதத்தில் வீடு குடி போவதையும், புது வீடு கட்ட தொடங்குவதையும் தவிர்க்க வேண்டும்.

பங்குனி:
சிவ பெருமான் மன்மதனை எரித்தது இந்த பங்குனி மாதத்தில் தான். அதனால், பங்குனி மாதத்தில் புது வீட்டிற்கு குடி போதல் அல்லது கிரக பிரவேசம் செய்தல், புது வீடு கட்ட தொடங்குவதல் போன்றவற்றை செய்யக் கூடாது.

புது வீட்டிற்கு குடி போக/கிரக பிரவேசம் வைக்க உகந்த மாதங்கள்:
• சித்திரை
• வைகாசி
• ஆவணி
• ஐப்பசி
• கார்த்திகை
• தை

வாடகை வீடு குடு போக உகந்த மாதங்கள்:
• சித்திரை
• வைகாசி
• ஆவணி
• ஐப்பசி
• கார்த்திகை
• தை
• பங்குனி (பங்குனி மாதம் புது வீடு கிரகபிரவேசம் செய்வது தான் கூடாது. ஆனால், வாடகை வீட்டிற்கு குடி போகலாம்.)
வீடு கிரகபிரவேசம் செய்ய உகந்த நாள்:
• திங்கட்கிழமை
• புதன் கிழமை
• வியாழன் கிழமை
• வெள்ளிக் கிழமை

வீடு கிரகபிரவேசம் செய்ய உகந்த நட்சத்திரங்கள்:
அசுவினி, ரோகினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், மகம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்வதம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி போன்ற நட்சத்திரங்கள் வீடு கிரகப்பிரவேசம் செய்வதற்கு உகந்த நட்சத்திரங்களாகு.

Back to blog