10 ஆண்டுகளாக எஜமானுக்காக காத்திருந்த நாய், ஆனால் அவர் கடைசி வரை வரவே இல்லை!

10 ஆண்டுகளாக எஜமானுக்காக காத்திருந்த நாய், ஆனால் அவர் கடைசி வரை வரவே இல்லை!

படத்தில் உள்ள இந்த நாயின் பெயர் ஹச்சிகோ. 1923 ஆம் ஆண்டு, இசாபுரா என்ற ஜப்பானியர் தினமும் வேலைக்குச் செல்லும் ரயில் பெட்டியில் இந்த நாயை குட்டியாக இருக்கும் போது கண்டெடுத்தார். அவர் அதனை எடுத்து வீட்டில் வளர்த்து வந்தார்.

இந்த ஜப்பானியர் தினமும் ரயிலில் வேலைக்குச் செல்லும் போது இந்த நாயையும் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்வார். 10 மணித்தியாலம் கழித்து அவர் திரும்பும் வரை இந்த நாயும் நாளாந்தம் ஸ்டேஷனில் காத்திருக்கும்!

ஒரு நாள் திடீரென வேலை செய்யும் இடத்தில் இவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார். நாய் தனது எஜமான் திரும்பி வருவார், வருவார் என ஸ்டேஷனில் காத்திருந்தது. ஒருநாள் இரண்டு நாள் அல்ல! 10 ஆண்டுகளாக காத்திருந்தது, ஆனால் அவர் கடைசி வரை வரவே இல்லை!

காத்திருக்கும் இடத்தை விட்டும் நகர மறுத்த இந்த நாயை வருவோர், போவோர் அனுதாபத்தோடும் பரிதாபத்தோடும் பார்த்து வந்தனர். பின்னர் அது அவ்விடத்திலே இறந்து போனது.

ஜப்பானில் உள்ள குறித்த ரயில் நிலையத்தில் இந்த நாயின் சிலை வடிவமைக்கப்பட்டு, ஞாபகார்த்த சின்னமாக வைக்கப்பட்டுள்ளது.

விசுவாசம் என்பது மலைகளை விட கனமானது. கயிறுகளை விட நீளமானது.
நன்றி என்ற சொல்லை மனிதன் நாயிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்.❣️

Back to blog