ஸ்ரீ வாஞ்சா கல்ப கணபதி

ஸ்ரீ வாஞ்சா கல்ப கணபதி

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே நமது மனித இனம் பல்வேறு சூட்சம சக்திகள் உணர்ந்து அதை அகத்திலும் புறத்திலும் எவ்வாறு
செயல்படுத்தினால் நன்மைகள் பெருகும் என்று மெய் உணர்வில் உணர்ந்து அதை செயல்படுத்தி பல அற்புதங்களை செய்துள்ளனர் செய்து கொண்டே இருக்கின்றனர். அதில் என் குலதெய்வம் காமாட்சியின் கடாக்ஷத்தாலும் என் குருமார்களின் ஆசீர்வாதத்தாலும் பல சூட்சும ரகசியங்களை கற்றுக் கொண்டே இருக்கின்றேன் நான் எப்போதும் ஒரு விஷயத்தை கற்றால் அதை
உடனடியாகவே செயல்படுத்தி பார்ப்பேன் அதில் கிடைக்கும் பயன்களை அனைவரிடமும் பகிர்ந்து தொடர்ந்து செயல்படுத்தவும் வலியுறுத்துவேன்.

அந்த வழியில் சென்ற மாதம் சத்ரு சம்ஹார பூஜை சஷ்டி அன்று செய்யும் பொழுது எனது ஆன்மீக நண்பர் ஸ்ரீ சபரி சிவாச்சாரி இடம் கலந்துரையாடும் முழுவதும் விநாயக பகவான் மிகவும் சக்தி வாய்ந்த பூஜை எது எனக் கேட்கும் பொழுது ஸ்ரீ வாஞ்சா கல்ப கணபதி பற்றியும் அதை பல வருடங்களாக செய்து நன்மைகள் பெற்றதையும் விலாவாரியாக எடுத்துரைத்தார் அதை கேட்ட உடனே அதைப் பற்றிய அனைத்து தரவுகளையும் தேட ஆரம்பித்தேன் தேடத் தேட தான் ஸ்ரீ வாஞ்சா கல்ப பூஜை என்பது மிகப்பெரும் சமுத்திரம் என்பதை உணர்ந்தேன் உடனடியாக யாகத்திற்கான தேதியை குறித்தேன் மகா சங்கட சதுர்த்தி திதியே சரியாக அமைந்து வந்தது அதை மிகச் சிறப்பாகவும் செய்தோம்.

அந்தப் பூஜையின் சிறப்புகளை நான் இப்பொழுது உங்களிடம் பகிர்கிறேன் தற்காலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினம் எது என்றால் நாம் அனைவரும் சொல்வோம் யானை என்று அந்த யானையை மிகச்சிறிய அங்குசம் என்ற தொரட்டியல் மூலம் நான் உன் இஷ்டப்படி நடக்கச் செய்யலாம். தொரட்டி என்ற ஆயுதம் நம் எண்ணத்தின் படி யானையை பயன்படுத்திக் கொள்ளப் பயன்படுகிறது அதுபோலவே ஸ்ரீ வாஞ்சா கல்ப கணபதி பூஜை நமது எண்ணம் என்ற தோரணையில் கணபதி தெய்வத்தை தாயுள்ளம் உள்ள ஸ்ரீவித்யா தெய்வமாக ஆக்கம் செய்து நாம் நினைத்ததை நினைத்தபடியே அடையலாம்.


அன்பு என்ற ஒரு சொல் அனைத்தையும் வெல்லும் அந்த அன்பு என்ற வார்த்தையின் மூலம் மந்திர யந்திர தந்திர முறையில் நம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும் இப்பூஜையால் ஸ்ரீ வாஞ்சா கல்ப கணபதி என்ற பெயரே சக்தியின் பிச்சம் வேறு எந்த ஹோமத்திற்கு இவ்வளவு ஆகர்ஷண சக்தி உடைய பெயர் இல்லை.
சகல ஐஸ்வரியங்கள் கிடைப்பதற்கும் நினைத்தவுடன் கிடைப்பதற்கும் சகல விதமான தோஷங்கள் உடனே விலகுவதற்கு விசித்திரமான காரியங்கள் நிறைவேறும் இந்த ஹோமம் மிகச் சிறந்தது.


வாஞ்சை என்றால் விருப்பம் கல்ப என்றால் கற்பக விருட்சம் போன்று நினைத்ததை நினைத்தபடியே தரவல்லது.
ஆகஸ்டு 7 மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இப்பூஜையை கோவையில் நமது அக்ஷயம் டிபன் சென்டரால் நடத்தப்பட்டது.


இறையின் ஆசீர்வாதம் இருந்தால் சில வாய்ப்புகள் கிடைக்கும் அதன்படி விநாயகப் பெருமானின் வாஞ்சா கணபதியின் முழு ஆசிர்வாதமும் இப்பூஜையில் நமக்கு கிடைத்தது. பூஜையின் முதல் நாள் மாலையில் பூஜையின் ஏற்பாடுகளை பார்க்க நமது ஸ்ரீ குபேர குருஜி வந்திருந்தார். பூஜையின் முதல் சூட்சமம் யாக கூண்டை சாலை அமைப்பது எந்திரம் வரைவது அப்போது கும்ப அலங்காரம் செய்து கொண்டு இருக்கும் போது தேங்காய் தானாகவே ஒரு சுற்று சுற்றி நின்றது அப்பொழுது பூஜையின் சக்தியை உணர முடிந்தது.
நமது ஸ்ரீ குபேர குருதியுடன் 1008 அன்பர்கள் இணைந்து மூன்று நாள் கடும் விரதம் இருந்தனர். பூஜை அன்று காலை நாலு மணி பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர் முன் நின்று பூஜைக்கான வேண்டுதலையும் சங்கல்பத்தையும் செய்தோம்.
அதே சமயத்தில் உலகு எங்கும் இருக்கும் நமது அன்பர்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நமது ஸ்டார் ஆனந்தம் யூடியூபின் மூலம் நேரடி ஒளிபரப்பில் இருந்தார்கள்.
அதைத் தொடர்ந்து

தண்ணீரை ஊற்றும் தீர்த்த பூஜை
விக்னேஸ்வர பூஜை
கும்ப பூஜை (கலச ஸ்தாபனம்) செய்து லம் ஹம் யம் ரம் வம் ஷம் என்ற சூட்சம மந்திரத்துடன் பஞ்ச பூஜை செய்தோம்.
ஸ்ரீ வல்லப கணபதி வேள்வி யாகம் ஆனது தொடங்கியது.
அதே சமயத்தில் குமாரி பூஜை
பிரம்மச்சாரி பூஜை
மகேஸ்வர பூஜை செய்து வஸ்திர தானமும் செய்தோம்.

ஸ்ரீ வல்லப கணபதி பூஜையில் சக்திமிக்க மந்திரங்களை சிவாச்சாரியார்கள் ஆத்மார்த்தமாக செய்தனர்.
நான்கு பர்யாயம் (பகுதி) ல் பூஜையை அக்னி வளர்த்து செய்தோம் ஒவ்வொரு பர்யாயத்திற்கும் தனியே மோரத்தில் ஸ்ரீ வல்லப கணபதி க்கு உரிய சூட்சம பிரசாதத்தை வைத்து அக்னியில் சமர்ப்பித்தோம்.


நான்கு பர்யாயம் செய்யும் பொழுது விநாயகர் பச்சை பட்டு சேலையை அக்னியில் சமர்பித்து மோரத்தில் அவருக்குரிய விஷயங்களை வைத்து பூர்ணவாதி செய்தோம். அதைத்தொடர்ந்து கலசத்திலிருந்து தீர்த்தத்தை ஸ்ரீ செல்வ கணபதிக்கு அபிஷேகம் செய்து தொடர்ந்து பல்வேறு அபிஷேகம் செய்து ஸ்ரீ வல்லப கணபதி அலங்காரத்துடன் தரிசித்தோம். தொடர்ந்து கோவிலிலும் மதுரையில் உள்ள கிராமத்திலும் அன்னதானம் செய்து ஆனந்தம் அடைந்தோம்.


4 என்றால் விநாயகப் பெருமானைக் குறிக்கும் எண் தான் ஸ்ரீவித்யா சம்பந்தம் உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதுபோலவே இப்பூஜை 444 என்ற கணக்கில் பூஜைகள் செய்தும் பூஜையில் ஸ்ரீ சொர்ண கணபதி யந்திரம் வைத்து பூஜை செய்து பூஜை முடிந்த பிறகு அனைவருக்கும் பிரசாதத்துடன் எந்திரத்தையும் அனுப்பி வைத்தோம்.


இப்பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாஞ்சா கல்ப கணபதி பல்வேறு விதத்தில் காட்சி தந்தார் பல அற்புதங்களை நாம் கண்டோம்.
காதலால் அன்பால் இறைவனை கசிந்து உருகி வழிபட்டால் வாழ்வில் வளம் பெற முடியும் ஸ்ரீ வாஞ்சா என்ற பெயரில் உள்ளது அனைத்தும் ரகசியமும் வாஞ்சை விநாயகரை வழிபட்டால் அவரவர் தாயைப்போல் நம்மை அரவணைத்து நாம் கேட்டதை தருவார்.

ஓம் சக்தி கணபதியே போற்றி! போற்றி!

ஸ்ரீ வாஞ்சா கல்ப கணபதி போற்றி!

இப்பூஜை உங்கள் இல்லத்தில் தொழில் செய்யும் இடத்தில் செய்தால் அற்புதங்கள் நடக்கும் உங்களுக்கும் அற்புதங்கள் நடக்க பூஜைகள் செய்ய நமது அக்ஷயம் டிவைன் சென்டர் ஐ தொடர்பு கொள்ளவும்
வாழ்க பணமுடன் நன்றிகள் கோடி

CALL : 9790044225/9894624425

Back to blog