வெற்றித்தெய்வம் ஸ்ரீவாராஹி அம்மன்

வெற்றித்தெய்வம் ஸ்ரீவாராஹி அம்மன்

லலிதையின் ரத, கஜ, துரக, பதாதி எனும் நால்வகைப் படைகளுக்கும் தலைவி எனும் பொறுப்பில் தண்டினீ (commander in cheif) என இவள் பக்தர்களால் போற்றப்படுகிறாள்.

சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன்.பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் ஆகும். திருமாலின் ஒப்புயர்வற்ற யக்ஞ வராஹ வடிவத்தை எடுத்துக் கொண்ட சக்தி எவளோ, அவளே அங்கு வாராஹி வடிவம் தாங்கி வந்து சேர்ந்தாள் என தேவி மஹாத்மியம் எட்டாம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வராஹ மூர்த்தியின் அம்சமே வாராஹியாவாள்.

மந்த்ர சாஸ்த்ரம் அறிந்தவர்கள் பல்வேறு வடிவங்களில் இவளை வழிபடுகின்றனர்.இந்த வாராஹி, லலிதா தேவியின் புரத்தின் 16வது பிராகாரமான மரகதமணியால் ஆன பிராகாரத்தில் வசிப்பவள். மகாபத்மாடவீ எனும் கோடிக்கணக்கான தாமரை மலர்கள் பூத்த தடாகங்கள் உள்ள அந்த பிராகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் நூற்றுக்கால் மண்டபத்தில், சர்வாலங்காரங்களுடன் அருள் பவள் இத்தேவி. வடகிழக்குப் பகுதி என்பது ஆராதனைக்குரியது. அமைதி, வளம், ஆரோக்கியம் போன்றவற்றை தருவது. அப்படி வளம் கொடுக்கக்கூடிய பகுதியில் வசிக்கிறாள் வாராஹி. அதனால் தன்னை வழிபடுவோரின் வாழ்வையும் வளம் கொழிக்கச் செய்கிறாள். பஞ்சமி பஞ்சபூதேஸி’ என லலிதா ஸஹஸ்ரநாமம் இவள் பெருமையைப் பேசுகிறது. ‘பஞ்சமி பைரவி பாசாங்குசை’ என்று அபிராமி அந்தாதியில் அபிராமி பட்டரும் இந்த வாராஹியைப் போற்றுகின்றார்.

காட்டுப்பன்றியின் முகம், அழகிய பெண்ணின் உடல் என்ற தோற்றத்துடன் காட்சியளிப்பவள் இவள். எட்டு கைகளை இத்தேவி கொண்டிருக்கிறாள். என்ன பேசுவது என நடுக்கம் வந்தால் வாராஹி என நினைத்தால் வார்த்தைகள் தானே வரும். வாராஹி காவல் தெய்வம். காலம் எனும் கடலில் நீந்தும் நம்மை கரை சேர்க்கும் கப்பல் அவள். வாராஹி உபாசனை உக்ர நரசிம்ம உபாசனையைப் போல் பயங்கரமானது என்று பாமரரிடையே எண்ணம் உள்ளது. வித்யா பூஜை முறையில் மஹாவாராஹியின் இடம் மிக மிக உயர்ந்தது. மஹாவாராஹியை ஏதோ பயங்கர தேவதையாகக் கருதுவது தகாதது. கருணைக்கடலான தேவி அவள்.

சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராகி. மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள்.

ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும். இந்தியாவில் வராஹிஅம்மனுக்கு இரு இடங்களில் தான் ஆலயம் உள்ளது.

ஒன்று காசி மற்றொன்று தஞ்சாவூர் பெரியகோயிலில் உள்ளது. இங்குள்ள வராகி அம்மன் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக உள்ளார். இந்த வராகி அம்மன் என்பவள் அம்பாளின் போர்ப் படைத்தளபதி ஆவாள்.

ராஜராஜசோழன் எச்செயலைத் தொடங்கினாலும், வராகியை வழிபட்ட பின்னரே தொடங்குவார். இதனால் இந்த அம்மனை''ராஜராஜ சோழனின் வெற்றித்தெய்வம் என்று வர்ணிப்பர். தஞ்சைப் பெரியகோயில் கட்டுவதற்கு முன்பே, வராகி வழிபாடு இங்கிருந்ததாகக் கூறுவர்.

மற்ற கோயிலில் எங்கும் இல்லாத ஒரு நடைமுறையும் தஞ்சைப்பெரியகோயிலில் உண்டு. எந்த வழிபாட்டை தொடங்கினாலும், முதலில் விநாயகரை வணங்குவதே மரபு.

இங்கு சிவவழிபாட்டைத் தொடங்குபவர்கள் விநாயகருக்குப் பதிலாக வராகியம்மனை வழிபட்டே தொடங்குகிறார்கள். சோழர்களின் வெற்றிக்குரிய தெய்வம் துர்க்கை. இங்கு துர்க்கையின் தளபதியான வாராகிக்கு சன்னதி உள்ளது.

கோயிலில் நுழைந்ததும் இடதுபுறம் இவளது சன்னதி உள்ளது. இங்கு என்ன வேண்டிக் கொண்டாலும் உடனே நிறைவேறுகிறது. திருமணமாகாதவர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் திருமணவரம் உடனே கைகூடுகிறது.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மனமுருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர வழக்கு விவகாரங்கள், வியாபார சிக்கல்கள், கோர்ட் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து இத்தலத்து அம்பிகையிடம் வேண்டிக்கொண்டால் பிரச்சினைகள் தீர்கின்றன.

ஸ்ரீவாராஹி அம்மன் ஆதிபராசக்தியின் படைத் தலைவி. இந்த ஒட்டுமொத்த பூமிக்கும் சொந்தக்காரி. ஸ்ரீவாராஹி அம்மனைத் தொடர்ந்து வழிபட்டு வருவோர் பில்லி, சூனிய பிரச்சினைகள் மற்றும் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடுவார்கள். வீட்டிலேயே இவளின் திருவுருவப் படத்தை வைத்து வழிபாடு செய்யலாம்.

மகாவிஷ்ணுவின் ஸ்ரீவராக அவதாரத்தின் அம்சமாக அவதரித்தவளே ஸ்ரீவாராஹி. வராக (பன்றி) முகமும், நான்கு கரங்களும் உடையவள். இவளை வழிபட்டால், எதிரிகளை வெற்றி கொள்ளலாம். ஸ்ரீவாராஹி அம்மனை செவ்வாய், வெள்ளி என்றில்லாமல் தினமும் அஷ்டோத்திரம் சொல்லி, குங்கும அர்ச்சனை செய்து வழிபடுவது கூடுதல் சக்தியைக் கொடுக்கவல்லது. மேலும், அஷ்டோத்திரத்தில் உள்ள அந்த அம்மனின் நாமாக்களைச் சொல்லியும் வழிபடலாம். தினமும் காய்ச்சிய பாலில் சர்க்கரை கலந்து நைவேத்தியம் செய்யலாம்.

பஞ்சமி, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் தேங்காய்ப் பூரணம், சர்க்கரைப் பொங்கல், கேசரி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை நைவேத்தியம் செய்யலாம். அதோடு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வெள்ளரிக்காய் ஆகியவற்றையும் நைவேத்தியம் செய்து வழிபடலாம்.

காசி: நகரில் ஸ்ரீ வாராஹிக்கு மிகப் பெரிய கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பாகவே (5.30 மணிக்குள்) ஸ்ரீ வாராஹிக்கு அபிஷேக ஆராதனைகளும் அலங்காரங்களும் சிறப்புற நடைபெறுகின்றன.

அப்போது, ஸ்ரீ வாராஹிக்கு மூன்று வித ஆரத்திகள் எடுத்து பூஜிக்கின்றனர்.
இதை தரிசித்தால் பெரும்பேறு வாய்க்கும் என்பது ஐதீகம்.

தவிர, இங்குள்ள ஸ்ரீ வாராஹி தேவியை துவாரங்களின் வழியாகத்தான் தரிசிக்க இயலும்.

சந்நிதிக்கு மேற்புறம் உள்ள துவாரத்தை (பாதாள அறையைத் திறப்பது போல்) திறந்து காண்பிக்கிறார்கள்.

இந்த இடத்தில் இருந்து அம்பாளின் பாதங்களை மட்டுமே தரிசிக்க முடியும். இதையடுத்து, மற்றொரு துவாரத்தின் வழியாகப் பார்த்தால்,

வாராஹியின் நின்ற திருக்கோலத்தை முழுவதுமாகத் தரிசிக்கலாம். இங்கு, ஸ்ரீ வாராஹி உக்கிரமாகத் திகழ்வதால்தான் இப்படியொரு விசேஷ ஏற்பாடு என்கின்றனர்.

“வெள்ளிக்கிழமைகளில் இந்த தேவியை வழிபடுவதால் மாங்கல்ய பலமும் வியாபார விருத்தியும் கிடைக்கும்.

நோயுற்றவர்கள் தங்களின் நோய் நீங்கி நலம் பெற ஞாயிற்றுக்கிழமைகளில் வாராஹியை வழிபடுவது சிறப்பு. மனநலம் குன்றியவர்கள், வீண் கவலைகளுக்கு ஆளானவர்கள் திங்கட்கிழமைகளில் வழிபட வேண்டும்.

நிலம், வீடு, வழக்கு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து வழிபட செவ்வாய்க்கிழமையிலும்,

கடன் தொல்லை அகல புதன் கிழமைகளிலும்,

குழந்தைப்பேறு மற்றும் கல்வியில் தேர்ச்சி பெற வியாழக்கிழமைகளிலும் ஸ்ரீ வாராஹியை வழிபட வேண்டும்.

சிவகங்கை மாவட்டத்த்லுள்ள இலுப்பைக்குடியில் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் அம்பாள் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில்
சிம்ம வாகனத்தில் அமர்ந்த வாராஹிசிற்பம் இருக்கிறது.

பார்வதிதேவியின் போர்ப்படைத்தளபதியாக விளங்குவதாக சக்தி வழிபாட்டு நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

சப்த மாதர்களில் ஒருத்தியான ஸ்ரீ வாராஹி, பராசக்தியின் படைத் தளபதியாகி பண்டாசுரனை அழித்தவள்.

இந்த தேவிக்கு பஞ்சமீ, தண்டநாதா, சங்கேதா, சமயேஸ்வரி, சமய சங்கேதா, வாராஹி, சிவா, போத்ரிணி, வார்த்தாளி, மகாசேனா, அரிக்னி, ஆக்ஞா சக்ரேஸ்வரி ஆகிய பெயர்களும் உண்டு.

இவளது திருநாமம் ஜபித்து வழிபட்டால் எந்தக் காரியத்திலும் வெற்றி கிட்டும் என்று ஞான நூல்கள் போதிக்கின்றன.

அமிர்தக் கடலின் மத்தியில் கற்பகவிருஷங்கள் நிறைந்த தோப்பில் உள்ள ரத்னத் தீவில் கடம்பமரங்கள் நிறைந்த உத்தியானவனம் (நந்தவனம்) உள்ள சிந்தாமணி க்ருஹத்தில் பரம மங்கள வடிவில் அமைந்த சிம்மாஸனத்தில் அம்பிகை காமேசருடன் கூடி வீற்றிருக்கிறாள்.

இது தேவியின் வாசஸ்தலம் என்பார்கள். சிந்தாமணி கிருஹம் என்பார்கள் இதை. இந்தச் சிந்தாமணி கிருஹத்தைத் தான் விஸ்வகர்மா அமைத்துக் கொடுத்தார்

ஸ்ரீ வாராஹியின் பனிரண்டு பெயர்களைச் சொன்னாலே அம்பிகை
ஸகல கார்ய சித்தியும், அளவற்ற அருளையும் அருளுவாள்.

பஞ்சமீ
தண்டநாதா
ஸங்கேதா
ஸமயேஸ்வரி
ஸமயஸங்கேதா
வாராஹி
போத்ரிணி
சிவா
வார்த்தாளி
மஹாசேனா
ஆக்ஞா சக்ரேஸ்வரி
அரிக்னி
சிவாலயங்களில் கன்னி மூலையில் இவர்களை காணலாம் ..

“ ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரில்

களிக்கும் இச் சிந்தையில் காரணமாம் காட்டித்

தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும்

அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே ! ”

  • திருமூலர்

உலகையே ஒளிர்விக்கும் பராசக்தி என்ற அம்பிகை நம் மனதில் எழுந்தருளினால், உண்மைப் பொருள் விளங்கும் ; மனம் தெளிவு பெறும் . அவளை அறிந்து கொள்பவருக்கு அனைத்துச் செல்வங்களும் வாய்க்கும் என்று திருமூலர் கூறுகிறார். அருள்மிகு முத்தவடுகநாத சித்தர், அம்பிகையின் மறுவடிவமான வராஹி அம்மனிடம் சரணடைந்து சித்தி பெற்றார். அதுவும் தமது ஐந்தாம் வயதில்.

அபிராமி அந்தாதி :

நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி, சாமளை சாதி நச்சு
வாய் அகி மாலினி வாராஹி, சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!”

“பயிரவி பஞ்சமி, பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் ஆவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி, வாராஹி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே!’

    என அபிராமிபட்டர் துணையாகக் கொண்டாடிய அம்பிகையின் வடிவம் வாராஹி.

அன்னை வராகிக்கு பிடித்தமான நிறம் பச்சை! பச்சை நிறத் துண்டின் மீது அமர்ந்து இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி(கிழக்கு நோக்கி ஏற்றினால் வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;வடக்கு நோக்கி ஏற்றினால் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்..வேறு திசைகளில் ஏற்றினால் ஜபத்துக்குரிய பலன் நம்மை வந்து சேராது. ஸ்ரீ மகாவராஹியை ஆக்ஞா சக்கரத்தில் தியானிக்க வேண்டும்.

 ஐந்து பஞ்சமி அல்லது ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் தேங்காய் மூடியில் நெய் விளக்கு ஏற்றி வாராஹியை வழிபட, கோரிய பலன் கிட்டுவது உறுதி.

ஸ்ரீ வாராஹி அம்மன் துதி

ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி ,
பண்டிதஸ்ய மனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!

தியான சுலோகம்
முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:

மந்திரம்:
ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

கஷ்டம், கடன், பிரச்சினைகளில் இருந்து விடுபட, ஒரு தேங்காயை உடைத்து, இரண்டு மூடிகளிலும் நெய்விட்டு, பஞ்சு திரி போட்டு, குங்குமம் இட்டு தீபம் ஏற்றி, அந்த தீபம் தானாகவே மலையேற விடவேண்டும். பிரச்சினைகள் எதுவும் இல்லாவிட்டாலும்கூட பஞ்சமி திதி அன்று இவ்வாறு விளக்கேற்றி வழிபடலாம்.

‘பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, கௌமாரி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரே சப்த கன்னியர். மேலும், யோகேஸ்வரி என்ற தெய்வத்தையும் சேர்த்து அஷ்டமாதர் என்றும் சொல்வதுண்டு.

சப்த மாதர்களான ஏழு கன்னியரின் உருவங்களை ஒரே கல்லில் வடித்திருப்பார்கள். பழைமை வாய்ந்த சிவாலயங்களில் இது ஒரு பரிவார சந்நிதி. பெரும்பாலும் ஆலயத்தின் தெற்குப் பிராகாரத்தில் வடக்கு நோக்கியவாறு சப்த மாதர்களை பிரதிஷ்டை செய்திருப்பார்கள். முற்காலத்தில் இவர்களைப் புடைப்புச் சிற்பங்களாக வடித்துப் பிரதிஷ்டை செய்திருந்தார்கள். நாளடைவில் தனித்தனி திருமேனிகளாக வடிக்கத் தொடங்கினார்கள். இவர்களுக்குக் காவலாக வீரபத்திரர் மற்றும் விநாயகரின் திருமேனிகளைப் பிரதிஷ்டை செய்திருப்பதை தரிசிக்கலாம்.

வளர்பிறை பஞ்சமி திதியில், வாராஹிதேவியை மனதார வழிபடுங்கள். வீட்டில் குடும்பமாக அமர்ந்து விளக்கேற்றி மனமுருக பிரார்த்தனை செய்யுங்கள். தீய சக்திகள் அனைத்தையும் விரட்டி, காத்தருள்வாள் வாராஹி தேவி!

குறிப்பிட்ட காரியங்களுக்கான ஸ்ரீ வாராஹி மந்திரங்கள் :-

செல்வம் பெருக
ஓம் - ஸ்ரீம் - ஹ்ரீம் - க்லீம் - வாராஹி தேவியை நம:
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் - ஸித்திஸ்வரூபிணி - ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.
மூலம்:-
லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவீம் பாதுகாப்பாம். ஸ்வாஹா II

1.எதிரிகளால் தீமை ஏற்படாதிருக்க :-
ஓம் சத்ருசம்ஹாரி| சங்கடஹரணி| மம மாத்ரே |ஹ்ரீம் தும் வம் சர்வாரிஷ்டம் நிவாரய|சர்வ சத்ரூம் நாசய நாசய ||

2.செல்வவளம் பெருக:-

க்லீம் வாராஹமுகி |ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி |ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா||
3.சர்வ சித்திகளும் செல்வமும் பெற :-

ஸ்ரீம் பஞ்சமி சர்வசித்திமாதா| மம கிரகம் மே தனசம்ருத்திம் தேஹி தேஹி நம||
4.வறுமை நீங்க :-

ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் நம: மம மாத்ரே வாராஹி தேவி மம தாரித்ரியம் த்வம்சய த்வம்சய||

ஸ்ரீ வாராஹி அஷ்டோத்திர சத நாமாவளி

  1. ஓம் ஐம் க்லௌம் வாராஹ்யை நம:
  2. ஓம் ஐம் க்லௌம் பஞ்சமி சித்தி தேவ்யை நம:
  3. ஓம் ஐம் க்லௌம் வாசவ்யை நம:
  4. ஓம் ஐம் க்லௌம் வைதேஹ்யை நம:
  5. ஓம் ஐம் க்லௌம் வஸூதாயை நம:
  6. ஓம் ஐம் க்லௌம் விஷ்ணு வல்லபாயை நம:
  7. ஓம் ஐம் க்லௌம் பலாயை நம:
  8. ஓம் ஐம் க்லௌம் வஸூந்தராயை நம:
  9. ஓம் ஐம் க்லௌம் வாமாயை நம:
  10. ஓம் ஐம் க்லௌம் தர்மிண்யை நம:
  11. ஓம் ஐம் க்லௌம் அதிசயகார்ய ஸித்திதாயை நம:
  12. ஓம் ஐம் க்லௌம் பகவத்யை நம:
  13. ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புர ரக்ஷிண்யை நம:
  14. ஓம் ஐம் க்லௌம் வனப்ரியாயை நம:
  15. ஓம் ஐம் க்லௌம் காம்யாயை நம:
  16. ஓம் ஐம் க்லௌம் காஞ்சன்யை நம:
  17. ஓம் ஐம் க்லௌம் கபாலின்யை நம:
  18. ஓம் ஐம் க்லௌம் தாராயை நம:
  19. ஓம் ஐம் க்லௌம் லக்ஷ்ம்யை நம:
  20. ஓம் ஐம் க்லௌம் சக்த்யை நம:
  21. ஓம் ஐம் க்லௌம் சண்ட்யை நம:
  22. ஓம் ஐம் க்லௌம் பீமாயை நம:
  23. ஓம் ஐம் க்லௌம் அபயாயை நம:
  24. ஓம் ஐம் க்லௌம் வார்த்தாள்யை நம:
  25. ஓம் ஐம் க்லௌம் வாக் விலாஸின்யை நம:
  26. ஓம் ஐம் க்லௌம் நித்ய வைபவாயை நம:
  27. ஓம் ஐம் க்லௌம் நித்ய சந்தோஷின்யை நம:
  28. ஓம் ஐம் க்லௌம் மணிமகுட பூஷணாயை நம:
  29. ஓம் ஐம் க்லௌம் மணிமண்டப வாஸின்யை நம:
  30. ஓம் ஐம் க்லௌம் ரக்தமால் யாம் பரதராயை நம:
  31. ஓம் ஐம் க்லௌம் கபாலி ப்ரிய தண்டின்யை நம:
  32. ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நம:
  33. ஓம் ஐம் க்லௌம் தண்டநாயக்யை நம:
  34. ஓம் ஐம் க்லௌம் கிரிசக்ர ரதாரூடாயை நம:
  35. ஓம் ஐம் க்லௌம் உத்தராயை நம:
  36. ஓம் ஐம் க்லௌம் வராஹ முகாயை நம:
  37. ஓம் ஐம் க்லௌம் பைரவ்யை நம:
  38. ஓம் ஐம் க்லௌம் குர்குராயை நம:
  39. ஓம் ஐம் க்லௌம் வாருண்யை நம:
  40. ஓம் ஐம் க்லௌம் ப்ரும்மரந்தரகாயை நம:
  41. ஓம் ஐம் க்லௌம் ஸ்வர்க்காயை நம:
  42. ஓம் ஐம் க்லௌம் பாதாள காயை நம:
  43. ஓம் ஐம் க்லௌம் பூமிகாயை நம:
  44. ஓம் ஐம் க்லௌம் ஸ்ரியை நம:
  45. ஓம் ஐம் க்லௌம் அஸிதாரிண்யை நம:
  46. ஓம் ஐம் க்லௌம் கர்கராயை நம:
  47. ஓம் ஐம் க்லௌம் மனோவாஸாயை நம:
  48. ஓம் ஐம் க்லௌம் அந்தே அந்தின்யை நம:
  49. ஓம் ஐம் க்லௌம் சதுரங்க பலோத்கடாயை நம:
  50. ஓம் ஐம் க்லௌம் ஸத்யாயை நம:
  51. ஓம் ஐம் க்லௌம் ÷க்ஷத்ரக்ஞாயை நம:
  52. ஓம் ஐம் க்லௌம் மங்களாயை நம:
  53. ஓம் ஐம் க்லௌம் ம்ருத்யை நம:
  54. ஓம் ஐம் க்லௌம் ம்ருத்யுஞ்சயாயை நம:
  55. ஓம் ஐம் க்லௌம் மகிஷக்ன்யை நம:
  56. ஓம் ஐம் க்லௌம் ஸிம்ஹாருடாயை நம:
  57. ஓம் ஐம் க்லௌம் மஹிஷாருடாயை நம:
  58. ஓம் ஐம் க்லௌம் வ்யாக்ராரூடாயை நம:
  59. ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நம:
  60. ஓம் ஐம் க்லௌம் ருந்தே ருந்தின்யை நம:
  61. ஓம் ஐம் க்லௌம் தான்யப்ரதாயை நம:
  62. ஓம் ஐம் க்லௌம் தராப்ரதாயை நம:
  63. ஓம் ஐம் க்லௌம் பாபநாசின்யை நம:
  64. ஓம் ஐம் க்லௌம் தோஷநாஸின்யை நம:
  65. ஓம் ஐம் க்லௌம் ரிபு நாஸின்யை நம:
  66. ஓம் ஐம் க்லௌம் க்ஷமாரூபிண்யை நம:
  67. ஓம் ஐம் க்லௌம் ஸித்திதாயின்யை நம:
  68. ஓம் ஐம் க்லௌம் ரௌத்ர்யை நம:
  69. ஓம் ஐம் க்லௌம் சர்வக்ஞாயை நம:
  70. ஓம் ஐம் க்லௌம் வ்யாதிநாஸின்யை நம:
  71. ஓம் ஐம் க்லௌம் அபயவரதாயை நம:
  72. ஓம் ஐம் க்லௌம் ஜம்பே ஜம்பின்யை நம:
  73. ஓம் ஐம் க்லௌம் உத்தண்டின்யை நம:
  74. ஓம் ஐம் க்லௌம் தண்டநாயிகாயை நம:
  75. ஓம் ஐம் க்லௌம் துக்கநாஸின்யை நம:
  76. ஓம் ஐம் க்லௌம் தாரித்ர்ய நாஸின்யை நம:
  77. ஓம் ஐம் க்லௌம் ஹிரண்ய கவசாயை நம:
  78. ஓம் ஐம் க்லௌம் வ்யசவாயிகாயை நம:
  79. ஓம் ஐம் க்லௌம் அரிஷ்டதமன்யை நம:
  80. ஓம் ஐம் க்லௌம் சாமுண்டாயை நம:
  81. ஓம் ஐம் க்லௌம் கந்தின்யை நம:
  82. ஓம் ஐம் க்லௌம் கோரக்ஷகாயை நம:
  83. ஓம் ஐம் க்லௌம் பூமிதானேஸ்வர்யை நம:
  84. ஓம் ஐம் க்லௌம் மோஹே மோஹின்யை நம:
  85. ஓம் ஐம் க்லௌம் பஹூரூபாயை நம:
  86. ஓம் ஐம் க்லௌம் ஸ்வப்னவாராஹ்யை நம:
  87. ஓம் ஐம் க்லௌம் மஹா வராஹ்யை நம:
  88. ஓம் ஐம் க்லௌம் ஆஷாட பஞ்சமி பூஜனப்பிரியாயை நம:
  89. ஓம் ஐம் க்லௌம் மதுவாராஹ்யை நம:
  90. ஓம் ஐம் க்லௌம் மந்த்ரிணி வாராஹ்யை நம:
  91. ஓம் ஐம் க்லௌம் பக்த வாராஹ்யை நம:
  92. ஓம் ஐம் க்லௌம் பஞ்சம்யை நம:
  93. ஓம் ஐம் க்லௌம் பஞ்ச பஞ்சிகாபீடவாஸின்யை நம:
  94. ஓம் ஐம் க்லௌம் ஸமயேஸ்வர்யை நம:
  95. ஓம் ஐம் க்லௌம் ஸங்கேதாயை நம:
  96. ஓம் ஐம் க்லௌம் ஸ்தம்பே ஸ்தம்பின்யை நம:
  97. ஓம் ஐம் க்லௌம் வன வாசின்யை நம:
  98. ஓம் ஐம் க்லௌம் கிருபா ரூபின்யை நம:
  99. ஓம் ஐம் க்லௌம் தயாரூபின்யை நம:
    100.ஓம் ஐம் க்லௌம் ஸகலவிக்ன விநாஸின்யை நம:

101.ஓம் ஐம் க்லௌம் போத்ரிண்யை நம:
102.ஓம் ஐம் க்லௌம் சர்வ துஷ்ட ஜிஹ்வா முகவார்க் ஸ்தம்பின்யை நம:
103.ஓம் ஐம் க்லௌம் அனுக்ரஹதாயை நம:
104.ஓம் ஐம் க்லௌம் அணிமாதி சித்திதாயை நம:
105.ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ ப்ருஹத் வாராஹ்யை நம:
106.ஓம் ஐம் க்லௌம் ஆக்ஞா சக்ரேஸ்வர்யை நம:
107.ஓம் ஐம் க்லௌம் விஸ்வ விஜயாயை நம:
108.ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புவனேஸ்வரீ ப்ரிய மஹா வாராஹ்யை நம:

வராஹி தெய்வத்தை வணங்கி வெற்றி அடையுங்கள்

சகல ஐஸ்வரியங்கள் பெருகட்டும்

வாழ்க பணமுடன்

ஸ்ரீ குபேர குருஜி

ஸ்டார் ஆனந்த் ராம்

AKSHYUM divine Center

Back to blog