விஷ்ணுபதி புண்ய காலம்

விஷ்ணுபதி புண்ய காலம்

*வாழ்வில் வளம் வாரி வழங்கும் *

விஷ்ணுபதி புண்ய காலம்

கடுமையான கஷ்டமா?
கொடுமையான வாழ்க்கையா?
பெரும் நஷ்டம் கடனா?

வழிபடுங்கள் விஷ்ணு பதி புண்ய காலத்தில்

🔔17. 09.2021 🔔

செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 AM மணி முதல் காலை 10:30 AM மணி வரை.

பெருமாள் கோவிலுக்கு சென்று கொடி மர நமஸ்காரம் செய்து 27 பூக்களை கையில் வைத்துக்கொண்டு 27 முறை பிரகார வலம் வாருங்கள்.

ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடிமரத்திற்கு முன் வையுங்கள்.

27 சுற்று முடித்த பின்பு மீண்டும் கொடிமர நமஸ்காரம் செய்யுங்கள்.

பின்பு தாயாரையும் பெருமாளையும் வழிபட்டு தங்களின் பிராத்தனைகளை மனமுருகி சொல்லுங்கள்.

தங்களின் நியாமான கோரிக்கை எதுவானாலும் அடுத்த மூன்று விஷ்ணுபதி காலம் முடிவடைவதற்குள் நிறைவேறியே தீரும்.நிறைவேறியே தீரும்.

தமிழ் மாத கணக்கின்படி வைகாசி , ஆவணி, கார்த்திகை , மாசி மாதங்களில் முதல் தேதி விஷ்ணுபதி புண்ய காலம் வருகிறது. பன்னிரண்டு தமிழ் மாதங்களில் சித்திரை, ஆடி, ஐப்பசி, தை ஆகியவை பிரம்மாவுக்கு உரியவை. மாசி, வைகாசி, ஆவணி, கார்த்திகை ஆகியவை மகாவிஷ்ணுவுக்கு உரியவை. பங்குனி, ஆனி, புரட்டாசி, மார்கழி ஆகியவை சிவனுக்குரியவை . சிவனுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் ஷடசீதி புண்ணிய காலம். ஷடாங்கன் என்றால் சிவபெருமானைக் குறிக்கும். விஷ்ணுவுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் விஷ்ணுபதி புண்ய காலம். பிரம்மாவுக்குரிய சித்திரை, ஐப்பசி, ஆடி, தை மாதம் பிறக்கும் காலங்கள் விஷு புண்ய காலம் எனப்படும்.

பொதுவாக திதிகளில் சிறந்ததான ஏகாதசி திதியைமகாவிஷ்ணுவிற்கு மிகவும்உகந்ததாக சாஸ்திரம் கூறுகிறது.ஏகாதசி அன்று ஒருவன் புரியும் பூஜைகளும் ,அனுஷ்டிக்கும் விரதமுறையும் அனைத்திலும் சிறந்த பலன்தருவதாகவும் கூறுவர்.

ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பலனைத் தர வல்லதுவிஷ்ணுபதி புண்யகாலம் ஆகும். மகாவிஷ்ணுவின் அருளும்கருணையும் மிகவும்அதிகமாகவும், பூரணமாகவும் துலங்கும்அரிதான நாளாக இந்த நாள் அமைந்து உள்ளது.

ஒவ்வொரு வருடமும் நான்கு விஷ்ணுபதி புண்ய காலங்கள்வருவது உண்டு. தமிழ் மாத கணக்கின்படி மாசி , வைகாசி , ஆவணி,கார்த்திகை மற்றும்மாதங்களில் இந்த விஷ்ணுபதி புண்ய காலம்வருகிறது.
அன்றைய தினத்தில் அதிகாலை 1 :30 மணி முதல் காலை 10:30 மணி வரை இந்த புண்ய காலநேரம் வருகிறது. முழுமையாக 9 மணி நேரம் இந்த புண்யகாலம் அமைகிறது.

இந்த புண்ய காலத்தில் நாம் மகாவிஷ்ணுவையும்,மஹாலக்ஷ்மியையும்மனதார வழிபாட்டு நமது எல்லாதேவைகளையும் , வேண்டுதல்களையும் கூறி பிரார்த்தனைபுரியலாம். ஸ்ரீ விஷ்ணு மற்றும் ஸ்ரீ தேவியினுடையதுதிகளை கூறிநமது சக்திக்கு இயன்ற பூஜைகளை குறைவற செய்யலாம்.முறைப்படி பூஜை செய்யத் தெரிந்தவர்கள் அவ்விதம் செய்யலாம் .அருகில்உள்ள விஷ்ணு ஆலயத்திற்கு அந்த குறிப்பிட்ட நேரத்தில்சென்று வழிபடலாம். துளசி பூஜை , கோ பூஜை மற்றும் ஸ்ரீதேவிக்குப்ப்ரீத்தியைத் தரக்கூடியகாரியங்களை எல்லாம் சக்திக்குத்தகுந்தவாறு செய்யலாம்.

அதே போன்று அன்றைய தினத்திலே, விரத நாட்களில் செய்யக்கூடாத செயல்களைத் தவிர்ப்பது நன்று.

ஒருவர் ஒரு முறை இந்த விஷ்ணுபதி புண்ய கால விரதத்தைஅனுஷ்டிப்பது , பல ஏகாதசி விரதங்களை அனுஷ்டிப்பதற்கு சமம்என சாஸ்திரங்கள்கூறுகின்றன.

எனவே அரிதான இந்த வாய்ப்பினைத் தவற விடாமல் இந்தவிரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் உலகாதாயமானதேவைகளையும் மகிழ்ச்சியானமற்றும் செல்வ செழிப்பு மிக்கவளமான வாழ்வினையும் பெற முடியும் என சாஸ்திரங்கள்கூறுகின்றன.மேலும் நமது அக வளர்ச்சி, ஆனந்தம் .ஆன்மிகமுன்னேற்றம் , மன அமைதி மற்றும் மோக்ஷத்தையும் தர வல்லதுஇந்த புண்ய காலம் ஆகும்.
எல்லோரும் இந்த புண்ய காலத்தை முழுமையாகக் கடைப் பிடித்துஸ்ரீ லக்ஷ்மி நாராயணனின் பூரண அருளைப் பெறுவோமாக!

கடன், வறுமை நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை 108 முறை சொல்லி வந்தால் குபேரன், மகாலட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்
ஞானாயை கமலதாரிண்யை
சக்தியை சிம்ஹ வாஹின்யை
பலாயை ஸ்வாஹா !
ஓம் குபேராய நமஹ
ஓம் மகாலட்சுமியை நமஹ

என தினமும் 1008 முறை அல்லது 108 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும்.

நன்றி நன்றி நன்றி 🌞
வாழ்க வெல்க வளர்க 💸

வாழ்க பணமுடன் 💸
குபேர குருஜி
Dr.Star Anand ram
பணவளக்கலை
Akshyum Divine Center
🕉🕉
www.drstaranandram.com
https://youtu.be/FQ2Xms7YuGQ

Back to blog