வாழ்க்கையில் பண கஷ்டமாகவே இருக்கு என்ன செய்வது |Money Problem

வாழ்க்கையில் பண கஷ்டமாகவே இருக்கு என்ன செய்வது |Money Problem

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே

வாழ்க்கையில் என்னதான் நான் கோயிலுக்கு சென்றாலும் கடவுளை வழிபட்டாலும் எனக்கு ஒரே கஷ்டமாகத்தான் இருக்கின்றது பணப் பிரச்சனை கடன் பிரச்சனை அதிகமாக தான் இருக்கின்றது. இந்த மாதிரியான நபர்களால் நீங்கள் அப்பஇந்தப் பதிவு முழுவதும் உங்களுக்காக.

பொதுவாக எனது பயிற்சி வகுப்பில் நான் கூறுகின்ற ஒரு அற்புதமான கதையை தான் இப்போது உங்களிடம் சொல்லப் போகின்றேன்.

ஒரு சிலையை எவ்வாறு வடிவமைக்கிறார்கள் என்று தெரியுமா ஒரு கரடுமுரடான மலையில் சென்று அங்கே உள்ள பாறாங்கல்லை எடுத்துக்கொண்டு வருவார்கள். கொஞ்ச கொஞ்சமாக கொஞ்சம் கொஞ்சமாக அதை செதுக்க ஆரம்பிப்பார்கள். ஒவ்வொரு அடியும் செதுக்க செதுக்க சில சில கற்கள் உடைந்து கீழே விழுந்து கொண்டே இருக்கும். உடனே அந்தப் பாறை நினைக்கும் என்னடா இது ஒவ்வொருகற்களாக என் மீது இருந்து சென்று கொண்டிருக்கின்றது. கடைசியாக அந்த சிற்பிஅந்த பாராங்கல்லை ஒரு அழகான சிலையாக அதாவது கடவுள் வடிவத்தை செதுக்கிவைத்திருப்பார்.அந்த சிலையை தான் ஊரில் இருக்கும் அனைவருக்கும்கையெடுத்து கும்பிட்டு வணங்குவார்கள். பாறை முதலில் நினைத்திருக்கும் என்னடா இப்படி நம் மீது கற்கள் கொஞ்சம் கொஞ்சமாக வில் ஆரம்பித்து விட்டது என்ன ஆகப்போகுதோ என்று வருத்தப் பட்டுக் கொண்டிருந்தது ஆனால் கடைசியில் அந்தப் பாறை அத்தனை வலியையும் பொறுத்துக் கொண்டதால்தான் திருவுருவமாக தெய்வ உருவமாக மாறி அனைவரும் போற்றக் கூடிய அளவிற்கு இன்று இருக்கின்றது.

அதுபோலத்தான் நம் வாழ்க்கையிலும் பிரச்சினைகள் தொல்லைகள் கடன்கள் இவையெல்லாம் நம்மை பல படுத்துவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது. யார் ஒருவர் இதையெல்லாம் அனைத்தையும் கடந்து வருகின்றார்களோ அவர்களை சாதனையாளராக வெற்றியாளராக உருவாக்கினார்கள். வடிவமைக்கும்போது வழிகள் இருக்கத்தான் செய்யும். நாம் இதையெல்லாம் நினைத்து புலம்பிக் கொண்டிருந்தால் ஒரு பிரயோஜனமும் இல்லைநமது கஷ்டங்களை அதிகரிக்கத்தான் செய்யும்.

இனி உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் கஷ்டங்கள் நஷ்டங்கள் வந்தால் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் ஏனென்றால் கடவுள் நம்மை கவனிக்கிறார்கள் என்று அர்த்தம்.நாம் ஒரு பழமொழி கேள்விப்பட்டிருப்போம் கஷ்டம் கொடுக்கின்ற கடவுள் தான் நம்மை காப்பாற்றுவார்.

இப்படி கஷ்டம் கொடுக்கின்ற கடவுள் நம்மை கவனிக்கிறார் என்று சொல்கிறீர்கள். ஒருமருத்துவமனை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் ஒருத்தருக்கு தலைவலி ஒருத்தருக்கு காய்ச்சல் அதைவிட இன்னொருத்தருக்கு பெரிய விபத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் முதலில் கடவுள் யார் காப்பாற்றுவார் அவரைத்தான் காப்பாற்றுவார். அடுத்தடுத்து சிறு சிறு பிரச்சனைகளுக்கு வருவார். அதுபோலத்தான் யாருக்கு அதிக பிரச்சனையில் இருக்கின்றதோ அவரைத்தான் கடவுள் முதலில் கவனிப்பார்.

ஆகையால் எனது அருமை நண்பர்களே அன்பர்களே ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் கஷ்டம் உள்ளவரை தான் கடவுள் கவனிப்பார் ஆகையால் உங்கள் செயலை நீங்கள் சரியாக செய்து கொண்டே சென்று கொண்டிருந்தால் நிச்சயம் உங்களுக்கு மாற்றவும் மாறுதலும் கிடைக்கும்.

நன்றிகள் கோடி!!! ஜெய் ஆனந்தம்!!!

🙏 வாழ்க பணமுடன்🙏

Back to blog