அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை
தகடூரில் ஸ்ரீசக்ரம் அமைத்து மாதவத்தில் ஆழ்ந்தாள் அன்னை. ஈசனும் அந்த தவத்தில் கரைந்தார். சட்டென்று தரிசனம் தந்தார். தவத்தில் உறைந்திருந்த நாயகியின் முகம் சிவனைக் கண்டதும் பூரித்துச் சிவந்தது. மலைமகள் திருமணக் களை கொண்டாள். ஈசனும் அத்தலத்திலேயே அவளை மணந்ததோடு மன்மதனை உயிர்ப்பித்து ரதிதேவியின் கண்களுக்கு மட்டுமே தோன்றுமாறு செய்தார். மன்மதன் மகிழ்ந்தான். ரதி தேவி ஈசனின் திருவடி வீழ்ந்து பரவினாள். மன்மதனைக் காத்த கல்யாண காமாட்சி சக்தி பீடத்தின் மத்தியில் அமர்ந்து பேரருள் பெருக்கும் தலத்திற்கு ராமனையும் சென்றுவரச்சொல்லி, வசந்த நவராத்திரி பூஜை முறைகளையும் உபதேசித்தார் அகத்தியர்.
ராமர் சக்தி பீடத்தை நெருங்கியபோதே தன்வயமிழந்தார். அப்போதே பிரம்மஹத்தி தோஷமானது முற்றிலுமாக மறைந்தது. ராமர் பிரம்மம் எனும் தெளிந்த நீலவானத்தைப்போல நிர்மல மனதினராகத் திரும்பினார். தர்மபுரி எனும் இத்தலத்தில் மன்மதனை உயிர்ப்பித்ததற்கு ஆதாரமாக இருந்த அன்னை, போக காமாட்சியாக அருள் கூட்டி அமர்ந்தாள். பதினெட்டு யானைகள் தாங்கிய தேர் போன்ற அமைப்பில் விளங்குகிறது அன்னையின் சந்நதி. அன்னையை வணங்குபவர்கள் ராமரையும் தரிசிக்கிறார்கள். மேற்குப் புற கருவறையின் பின்னர் உள்ள முதல் யானையிடமிருந்து ஆரம்பிக்கும் ராமாயணக் காட்சிகள் அதியற்புதமான வேலைப்பாடுகளுடன் கூடி, அப்பிரதட்சணமாக வந்து, பதினெட்டாவது யானையுடன் முடிகிறது.
ஸ்ரீராமர் தர்மபுரி கல்யாண காமாட்சி ஆலயத்தில்தான் முதன் முதலாக வசந்த நவராத்திரியை தொடங்கி பூஜிக்கவும் செய்தார். தேவி வழிபாடு என்பது சக்தியை, அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் முறையாகும். தேவி வழிபாட்டின், பண்டிகைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாக்கள்தான்.
வசந்த நவராத்திரி யோகம் எனும் பக்தி நிலையை தரக் கூடியது. மேரு எனும் ஸ்ரீசக்ரம் அமைந்திருக்கும் ஆலயங்களில் வசந்த நவராத்திரி பொதுவாகக் கொண்டாடப்படும். ஒன்பது தினங்களிலும் காலை வேளையில் சிறப்பு அபிஷேகம் நடத்தப் பெறும். ஒன்பது தினங்களிலும் அம்பிகை ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். மாலை வேளையில் அம்பிகைக்கு உகந்த, சாக்தத்தின் மிக உயர்நிலை பூஜையான ஸ்ரீநவாவரண பூஜையும் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனையும் கன்யா பூஜையும் ஸுவாஸினி பூஜையும் நடைபெறும்.
குளிர்கால (புரட்டாசி மாதம்) ஆரம்பமும் கோடை கால (பங்குனி மாதம்) ஆரம்பமும் எமனின் இரு தாடைகளாக விளங்குவதாக அக்கினி புராணம் கூறுகிறது. அந்த இரு தாடைகளிலும் படாமல், அந்த இரு மாதங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று, நீண்ட நல்வாழ்வு வாழ அருளக் கூடியவள் அம்பிகை மட்டுமே. புரட்டாசி மாதம், குளிர் காலத்தின் ஆரம்பம். பங்குனி மாதம், கோடையின் துவக்கம். இந்த இரு காலங்களுக்குள் அமையும் நவராத்திரிகளை அனுசரித்தால் நன்மை பயக்கும்.
பன்னிரண்டு மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாக்த சாஸ்திரங்கள். அந்த பன்னிரண்டிலும் மிக முக்கியமானவை நான்கு. பங்குனி மாதத்தில் கொண்டாடப் படுவது வசந்த நவராத்திரி . ஆடி மாதத்தில், ஆஷாட நவராத்திரி; புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரி; தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. சக்தி வழிபாடு செய்யும் ஸ்ரீவித்யா உபாசகர்கள் இந்த நான்கு நவராத்திரி களையும் கொண்டாடுவது வழக்கம்.
மகிஷாசூரன் என்ற அரக்கனை அழிக்க அனைத்து கடவுள்களால் ஒரு தேவி படைக்கப்பட்டார் என்று நம்பப்படுகிறது. அனைத்து கடவுள்களும் தங்களின் சக்தியை ஒன்றிணைத்து வலிமையான தேவியை உண்டாக்கி அவருக்கு துர்க்கை என்று பெயரையும் சூட்டினர். ராமபிரான் தான் வசந்த நவராத்திரி என்ற வழக்கத்தை கொண்டு வந்தார் என்றும் நம்பப்படுகிறது.
ஒரு காலத்தில் கோசலா அரசாங்கத்தை ஆண்டு வந்தார் துருவசிந்து என்ற மன்னர். வேட்டையாடும் போது அவர் கொல்லப்பட்டார். அதனால் அவரின் மகனான சுதர்சன் இளவரசருக்கு முடி சூட ஏற்பாடு நடைபெற்றது. இருப்பினும் அண்டை அரசர்களான யூதஜீத் மற்றும் வீரசேனா அந்நாட்டின் மீது படையெடுத்தனர். அப்போரில் வீரசேனாவை வீழ்த்தினார் யூதஜீத் மன்னர். அதனால் தன் தாய் மற்றும் ஒரு அரவாணியுடன் இளவரசர் சுதர்சன் நாட்டை விட்டு தப்பித்து சென்றார். அவர்கள் பரத்வாஜா என்ற துறவியின் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்தனர். இளவரசர் சுதர்சனை கொலை செய்ய அவரை தேடி யூதஜீத் வந்தார்.
இருப்பினும் தஞ்சம் வந்தவர்களை நெருங்க விடவில்லை அந்த துறவி. அதனால் யூதஜீத் திரும்பி சென்றார். பல வருடங்கள் கழித்து, ஒரு நாள், அத்துறவியின் மகன், அந்த அரவாணியை 'க்லீபா' என்ற அவரின் அசல் பெயரில் அழைத்தார். இதனை 'க்லீ' என்று புரிந்து கொண்ட அந்த இளவரசர், 'க்லீம்' என்று அழைத்தார். க்லீம் என்றால் இறைதன்மை உடைய தேவியை அழைக்கும் மந்திரமாகும்.
இதனை மீண்டும் மீண்டும் உச்சரித்ததால், தேவியின் அருளை பெற்றார் இளவரசர். அவர் முன் காட்சி அளித்த தேவி, அவருக்கு சக்தி மற்றும் ஆயுதங்களை அளித்து அருள் வழங்கினார். பின்னர் சக்தி வாய்ந்த ஒரு அரசரின் மகளை அவர் கைப்பிடித்தார். தன் மாமனாருடன் சேர்ந்து யூதஜீத் அரசனை வீழ்த்தி தன் அரசாங்கத்தை மீண்டும் கைப்பற்றினார் சுதர்சன். தன் அரசாங்கத்தை மீட்ட இளவரசர் சுதர்சன், தேவியை குளிர வைக்க வசந்த நவராத்திரி பூஜையை மேற்கொண்டார்.
வசந்த நவராத்திரி பற்றிய கண்டறிதல்:
இந்நேரத்தில் 9 நாட்கள் விரதத்தை மக்கள் கடைப்பிடிப்பார்கள். வசந்த நவராத்திரி பூஜையின் போது, தினமும் மாலை நேரத்தில் துர்கா சுக்தம் ஓதப்படும். பண்டிகையின் எட்டாவது நாளின் (அஷ்டமி) போது, 'கஞ்சாக்' என அழைக்கப்படும் சின்ன பெண் பிள்ளைகள் சில பேர் வீட்டிற்கு அழைக்கப்படுவார்கள்.
வீட்டின் குடும்ப தலைவர்கள் அவர்களுக்கு பாத பூஜை செய்து, அவர்களுக்கு விருந்து பரிமாறுவார்கள். சேலை, வளையல் மற்றும் பணம் என சின்ன சின்ன பரிசுகளை அந்த பிள்ளைகளுக்கு வழங்குவார்கள். தேவியின் பிரதிநிதிகளாக தான் இந்த பெண் பிள்ளைகள் பார்க்கப்படுகிறார்கள். அதனால் துர்கை அம்மனை போல் அவர்களை பாவித்து, அவர்களை ஒவ்வொரு வீட்டிற்கும் அழைக்கிறார்கள்.
வசந்த நவராத்திரி என்பது கொண்டாட்டம், விரதம் கடைப்பிடித்தல் மற்றும் விருந்திற்கான நேரமாகும். இத்திருவிழா வண்ணமயமான இளவேனிற் காலத்தை சுவாரசியமாகவும் புனிதமாகவும் வைத்திருக்கும்.
வசந்த நவராத்திரி வழிபாட்டால், பெண் குழந்தைகள் மகிழ்ச்சி அடைவார்கள். கன்னியர்கள் திருமணம் நிறைவேறப் பெறுவார்கள். சுமங்கலிகள் மாங்கல்ய பலம் பெறுவார்கள். வசந்த நவராத்திரியை அனுஷ்டிக்கிறவர்களுக்கு கடன் தொல்லைகள் தீர்வதோடு, கணவன்-மனைவி உறவு பலப்படும்; அன்யோன்யம் உண்டாகும். அக்னி புராணத்தில் ஒரு வருடத்தில் 4 நவராத்திரிகளையும் கொண்டாட முடியாதவர்கள் சாரதா நவராத்திரி மற்றும் வசந்த நவராத்திரியையாவது விரதம் அனுஷ்டித்து கொண்டாடுவது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது
வசந்த நவராத்திரி நாட்களில் வீட்டுக்கு வரும் பெண்களை சக்திகளாக நினைத்து கௌரவிக்க வேண்டும். அவர்களுக்கு தாம்பூலம், மஞ்சள், கண்ணாடி, சீப்பு, குங்குமச் சிமிழ், தேங்காய், பழம், புத்தகங்கள், ரவிக்கைத் துணி கொடுத்து அனுப்ப வேண்டும். நவராத்திரி 9 நாட்களும் 9 கன்னியரை சக்தியாக பூஜிப்பது குடும்பத்துக்கு நல்லது. அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே, வசந்த நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாடலாவது பாட வேண்டும். முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது.
வசந்த நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும். வசந்த நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். வசந்த நவராத்திரி தொடர்பான ஸ்லோகம், மந்திரம் தெரியவில்லையா? கவலைப்படாதீர்கள். ‘ஓம் ஸ்ரீ லலிதா தேவ்யை நமஹ’ என்பதை 108 தடவை சொன்னால் போதும், உரிய பலன் கிடைக்கும்.
சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும் வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் வசந்த நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும். தர்மபுரி கல்யாண காமாட்சி ஆலயத்தில் வசந்த நவராத்திரி விரதத்தை ஸ்ரீராமன் கடைப்பிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது. தேவியை இந்த வசந்த நவராத்திரி நாட்களில் கட்கமாலா துதி, லலிதா த்ரிசதி, லலிதா ஸஹஸ்ரநாமம், ஸௌந்தர்யலஹரி, ஆச்ரேய அஷ்டோத்திரம் போன்ற துதிகளால் அர்ச்சித்து வளங்கள் பெறலாம்.
நன்றி நன்றி நன்றி 🌞
வாழ்க வெல்க வளர்க 💸
வாழ்க பணமுடன் 💸
happily
ஸ்ரீ குபேர குருஜி
Dr.Star Anand ram
பணவளக்கலை