ராகு கேது மோதிரம் அணிவதால் ஏற்படும் பயன்கள் என்ன
ராகு - கோமேதகம்
கேது - வைடூரியம்
Stone - natural cats eye & Hessonite
Lap certified original stone
🌺வெற்றி தரும் கோமேதகம்
ரஸ ஜல நிதி
தெய்வீகக் கல் கோமேதகம்
அது பயங்கரமான, எதிரிகளைக்கூட வெல்லக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியமும், நல்ல செல்வச் செழிப்பும் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது இந்தக் கல். பண வரவை அதிகரிக்கும். பங்கு வணிகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலனைக் கொடுக்கும்.
ஜோதிட சாத்திரத்தின் படி சாயா கிரகமான ராகு கிரகத்திற்கு உரியது கோமேதகம். ராகுவைப் போற்றித் துதிக்கும் ராகு அஷ்டோத்தர சத நாமாவளியில் 19வது நாமமாக கோமேதாபரண ப்ரியாய நமஹ என்று கூறப்படுவதால் கோமேதக ஆபரணத்தை அணிந்தவர் ராகு என்பது பெறப்படுகிறது.
தேவி பாகவதம் தேவியின் இருப்பிடத்தைச் சுற்றியுள்ள பிரகாரங்களை வர்ணிக்கிறது. இதில் கோமேதக பிரகாரம் பத்மராக பிரகாரத்திற்கு மேல் செம்பருத்தி மலர் போல பிரகாசித்து ஒளிர்வதாகக் கூறப்படுகிறது.
சிலப்பதிகாரம் ஊர் காண் காதையில் (190ஆம் வரியில்) ‘இரு வேறு உருவவும்’ என்று கூறப்படுகிறது. ஆகவே இரு வண்ணமுடைய கோமேதகமே சிறந்தது என்பது வலியுறுத்தப்படுகிறது.
நல்ல உடல் அழகையும், நரம்புகளுக்குப் புத்துணர்வையும் தரும்.
ராகு திசை நடப்பவர்கள் கோமேதகம் அணிவதன் மூலம் இல்லற வாழ்வில் இனிமை உண்டாகும். சொத்து வகையில் மேன்மை கிடைக்கும். பங்காளிகள் வகையில் உதவி கிடைக்கும். பாரம்பரிய தொடர்பு கிட்டும். அரசு அனுகூலப் பதவியில் உயர்வைக் கொடுக்கும்.
🐘இசைபட வாழ வைக்கும் வைடூரியம்
நீங்கள் ஒரு இசைக் கலைஞரா, பேச்சாளரா, கல்லூரியிலோ அல்லது பெரிய நிறுவனங்களிலோ வேலை பார்ப்பவரா, உங்கள் சொல்லை மற்றவர் மதித்து நடக்க வேண்டிய தலைமை இடத்தில் இருப்பவரா, உங்களுக்கெனவே இருக்கிறது வைடூரியம் என்னும் அபூர்வ ரத்தினம். நவ ரத்தினங்களுள் ஒன்றான இதை ஆங்கிலத்தில் கேட்ஸ் ஐ – (Cat’s Eye) என அழைக்கின்றனர். தோன்றில் புகழொடு தோன்றுக என்று ஆணையிட்ட வள்ளுவர் ஈதல் இசைபட வாழ்தல் -அதாவது புகழுடன் வாழ்தல் – உயிருக்கு ஊதியம் என்ற ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.
குரல் வளம் சிறக்கவும் இசைபட – புகழுடன் – வாழவும் பெரிதும் உதவுவது வைடூரியம்!
இலக்கியம் புகழும் வைடூரியம்
பழைய காலத்திலிருந்தே அனைத்து நாகரிக மக்களும் கொண்டாடிய கல் வைடூரியம்.
செய்வினை, மந்திர சக்தி, மரணம் ஆகியவற்றிலிருந்து இது ஒருவரை காப்பாற்ற வல்லது என்று பழைய நாகரிகத்தினர் பெரிதும் நம்பினர். அராபியர்களோ பெரும் யுத்த களத்தில் இதை அணிந்தால் மறைந்து இருந்து மாயாவியாகப் போர் புரிய முடியும் என்று நம்பினர்.
சிலப்பதிகாரத்தில், ஊர் காண் காதையில் “தீதறுக் கதிரொளி தெள் மட்டு உருவவும்” என்று குறிப்பிடப்படும் வரியினால் (வரி 189) ‘குற்றமற்ற கதிரவனின் ஒளி போலவும் தெளிந்த தேன் துளி எனச் சொல்வதற்கு ஒத்த உருவமும் உடையது வைடூரியம்’ என்பது தெரிய வருகிறது.
இராமாயணத்தில் அயோத்தி நகரமும் இலங்கையும் வைடூரியக் கற்களினால் ஜொலிப்பது பல இடங்களில் அழகுற வர்ணிக்கப்பட்டுள்ளது.
நல்ல ஒரு வைடூரியத்தை அணிந்தால்,
ரத்தக்கசிவு, ரத்தப்போக்கு நீங்கும்,
அறிவு மேம்படும்,
ஆயுள் நீடிக்கும்,
வலிமை கூடும்,
பித்தத்தினால் ஏற்படும் அனைத்து வியாதிகளும் நீங்கும்,
ஜீரண சக்தி கூடும்,
மலம் இளகி நீங்கும்.
ஒரு ஜாதகத்தில் கேது தசை நடந்தாலோ அல்லது கேது புக்தி நடந்தாலோ இதை அணிவது நலம் பயக்கும். கேது வைடூரிய ஆபரணத்தை அணிந்தவன் – வைடூர்ய விபுஷண தாரணாயாம் – என்று கேது தியான ஸ்லோகம் கூறுகிறது.
சாயா கிரகம் எனப்படும் நிழல் கிரகமான இந்தக் கேதுவினால் ஏற்படும் சில தோஷ பலன்களை நீக்க வைடூரியம் அணியலாம்; உடனே தீய பலன்கள் நீங்கி விடும். குறிப்பாக சர்ப்ப கிரக தோஷம் என்ற தோஷத்தால் புத்திர பாக்கியம் தாமதப் படுவோர் இதை அணிந்தால் சீக்கிரமே புத்திர பாக்கியம் கை கூடும்.
வைடூரியத்தில் அதன் நடுவில் இருக்கும் கோடு தான் அதற்கு அழகூட்டுகிறது. இதை ரத்தின சாஸ்திரம் சூத்ரம் என்று அழைக்கிறது. இந்த சூத்ரம் இருபுறமும் முழுவதும் ஓடுவதாக இருக்க வேண்டியது அவசியம். இப்படி அணிந்தால் தைரியம் கூடும்; தெய்வ பலமும் சேரும்.
யார்வேண்டுமானாலும் ராகு கேது மோதிரம் அணியலாம்
தரம் மிக்க ராசி கற்கள் தோஷ நிவர்த்தி செய்து பூஜை செய்து மந்திர உரு ஏற்றி நமது ஸ்ரீ குபேர குருஜியால் தரப்படுகிறது இதில் உள்ள ராசி கற்கள் ராகு கேதுவின் சூட்சும உருவான நாக வடிவத்தில் உருவாக்கபட்டு உள்ளது ராசி கற்கள் டெஸ்டிங் லேபில் குடுத்து தரம் பார்க்கப்பட்டு சான்றிதழ் கொடுக்க பட்டு உள்ளது
For more details
Akshyum divine center
Call 786 886 8899