ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே இயல்பாகவே நம்ம செயல்பாடுகளைப் பார்த்து நிறைய பேரு இதெல்லாம் ஒரு மானங்கெட்ட பொழப்பு அப்படின்னு ஒரு வார்த்தை வெளிப்படுத்துவார்கள். அதுவும் நான் பணவளக்கலை என்ற பயிற்சியை உலகெங்கும் பல நாடுகளில் நடத்தி கொண்டிருக்கும் பொழுது கூட நம்மள பத்தி நல்லா தெரிந்தவர்கள் கூட என்ன என்றே புரியாமல் இதெல்லாம் ஒரு பொழப்பா இதுக்கு வேற ஏதாவது செய்யலாமே அப்படினு ஒரு பதிவு செய்வாங்க.
இதை நெனச்சுக்கிட்டே சென்னையில் திருவெற்றியூரில் இருக்கக்கூடிய ஆதிபுரீஸ்வரர் கோயில் உட்கார்ந்து தியானம் செய்யும்பொழுது எனக்குள்ளேயே சில கேள்விகளும் சில பதில்களும் வந்தது அந்த பதிலில் மானங்கெட்ட பொழப்பு அதை பற்றிய விளக்கத்தைத் தான் இந்த வீடியோ மூலமாகவும் நம்மளோட வெப்சைட் ஆன drstaranandram.Com வெப்சைட்ல ஒரு எழுத்துபூர்வமாக பதிவு செய்துள்ளேன்.
மற்றவர்கள் வாழ்க்கையில் நல்லது செஞ்சா தான் நம்ம வாழ்க்கைல நல்லா இருக்க முடியும் அப்படிங்கிறது நமது குருமார்கள் சொல்லித்தந்த ரகசியம் நான் வணங்கும் குருமார்களும் என்னை வளர்த்த குருமார்களும் நமது சித்தர்களும் மகான்களும் முனிவர்களும் ஏன் நமது சைவ வழிபாடும் சொல்லக்கூடிய ஒரு ரகசியம் நீ மற்றவரின் வாழ்க்கையில் நல்வழிப்படுத்த முயற்சி செய் உன் வாழ்வும் நன்றாக இருக்கும் என்பது தான்.
அந்த வாழ்வியல் தன்மையோடு வாழக்கூடிய நானும் என்னால் முடிந்த 4 பேருக்கு நல்வழி காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த செயலை இந்த துறையை இந்த சேவையை செய்து வருகிறேன் இருந்தும் இந்த சேவையில் அடிக்கடி வெளிப்படுத்தக் கூடிய ஒரு வார்த்தை மானங்கெட்ட பொழப்பு.
நான் செய்யக்கூடிய செயல் மானங்கெட்ட பொழப்பு தான் ஏனென்றால் எனது முன்னோர்கள் இதே செயலைத் தான் செய்தார்கள் அதை தற்கால சூழலுக்கு தகுந்த மாதிரி நான் செய்து வருகிறேன் அது மானங்கெட்ட பொழப்பாகவே இருந்தாலும் நான் செய்தேன். மற்றவரின் வாழ்க்கையில் நல்வழிப்படுத்த வேண்டும் என்பதுதான் என் குறிக்கோளும் கூட ஏனென்றால் எனது மிக முக்கியமான குறிக்கோளே தனிநபரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் அவர்களின் குறிக்கோள்களை அடைய செய்ய வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோள்.
அந்த குறிக்கோள் தவறாக இருந்தால் அது மானங்கெட்டதாக இருந்தாலும் இருக்கட்டும் விதியை மதியால் வெல்ல முடியும் என்கின்றேன். அது மனம் கெட்டதாக இருந்தால் இருக்கட்டும் எதிர்மறையான வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையை நல்வாழ்க்கையை அமைத்துத் தரவேண்டும் என்ற முயற்சியும் பயிற்சியும் செய்கின்றேன் ஆதலால் அது மானங்கெட்டதாகவே இருக்கட்டும்.
ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் உண்மையை உன்னதத்தை கூடிய சக்தியை உணர வேண்டும் என்பதற்கான வாழ்வியல் முறைகளையும் நம்பிக்கையும்தான் வழங்கி வருகிறேன் அது மானங்கெட்டதாக இருந்தால் அதுவும் அவ்வாறு இருக்கட்டும்.
வாழ்க்கையை அவநம்பிக்கையோடு இருக்கக்கூடிய ஒவ்வொரு மனிதனையும் நம்பிக்கையை ஊட்டி அவனை எப்படியாவது ஜெயிக்கவேண்டும் அப்படி நான் நினைக்கிறேன் இல்ல அந்த நினைப்பு தவறாக இருந்தால் என் வாழ்வு மானங்கெட்டதாகவே இருக்கட்டும். ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் நம்பிக்கையை நம்பி நமது முன்னோர்கள் வழி நடத்திய வாழ்க்கையை ரகசியங்களை புரிந்துகொண்டு செயல்பட்டால் வாழ்வில் வெல்ல முடியும் என்ற சூட்சும ரகசியங்களைத் தேடி தேடி உலகில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு பதிவு செய்து வருகின்றேன்.
அந்த பதிவு தவறாக இருந்தால் அது மானங்கெட்டதாக இருந்தாலும் நான் தொடர்ந்து செய்வேன். ஏனென்றால் நான் செய்யும் செயலால் என்னை சார்ந்த பல நபர்களின் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நல்லதே நடந்து கொண்டிருக்கின்றது நடந்துகொண்டே இருக்கும் இதை படிக்கக்கூடிய வாழ்வியல் அன்பர்களுக்கும் இதை நான் பதிவு செய்கின்றேன் நம் வாழ்வு நாலு பேருக்கு நல்லதாகவும் நமது மனசாட்சிக்கு நல்லதாகவும் இருந்தாலே போதும் அதை எந்த விதமான செயலாக இருந்தாலும் சரி அதைப் பற்றி மற்றவர்கள் என்ன குறை கூறினாலும் சரி அதை பார்த்து நீங்கள் கவலைப்படாதீர்கள் நெஞ்சை நிமிர்த்தி நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்யுங்கள் அது மானங்கெட்ட பொழப்பு என்று மற்றவர்கள் பதிவு செய்தாலும் சரி நாம் செயல்படுவோம் நாமும் நம்மைச் சார்ந்தவர்களையும் நலமாக வளமாக சகல ஐஸ்வரியங்கள் கூடிய வாழ்வியலை அமைத்துக் அதற்கான முயற்சிகளையும் பயிற்சிகளையும் ஒவ்வொரு நொடியும் செய்வோம் இதையே தான் நான் செய்வேன் செய்துகொண்டே இருப்பேன்.
சொல்லக் கூடியவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கட்டும் கத்துபவர்கள் கத்திக் கொண்டே இருக்கட்டும் கொண்டே இருக்கட்டும் அவர்கள் கத்துவது நான் மானம் கெட வேண்டும் என்பதற்காக அல்ல அவர்கள் வாழ்வில் காணாமல் போய்விட்டார்கள் என்பதற்காகத்தான் எது செய்தாலும் சரி நான் நல்லதையே செய்வோம் நல்லதையே பேசுவோம் நல்லதையே வெளிப்படுத்துவோம் ஏனென்றால் நமக்கும் நல்லதாகவே ஏற்படட்டும் மானங்கெட்ட பொழப்பு தொடர்வோம்.