பைரவர் ஜென்ம அஷ்டமி காலாஷ்டமி பெருவிழா

பைரவர் ஜென்ம அஷ்டமி காலாஷ்டமி பெருவிழா

பைரவர் ஜென்ம அஷ்டமி
காலாஷ்டமி பெருவிழா

நாள் சனிக்கிழமை 27/11/2021

காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக்கூடிய சக்தி கொண்டவர். சிவபெருமானின் அம்சமான பைரவர் காசி நகரின் காவல் தெய்வம், நவ கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர். சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவானால் ஏற்படும் துன்பங்கள் தீரும். ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனியால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க பைரவரை வணங்கலாம். பைரவரின் உடம்பில் நவக்கிரகங்களும், அனைத்து ராசிகளும் அடங்கியுள்ளன. சிவபெருமானின் இந்த ருத்ர அவதாரத்தைதான் காலம் காலமாக முனிவர்களும், யோகிகளும் வழிபட்டு வருகின்றனர்.

ஸ்ரீ காலபைரை வணங்குவதால் வறுமை, பகைவர்களின் தொல்லை, வியாபார முன்னேற்றம், தன லாபம், பயம் நீங்கி அஷ்ட ஐஸ்வர்களும் கிடைக்கும். சிவபெருமானின் அம்சத்துடன் நாய் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பவர் பைரவர். பொதுவாக மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவது பொருளாதார சிக்கல்களால் தான். சொர்ண ஆகர்ஷண பைரவரை தேய்பிறை அஷ்டமியிலும், ராகு காலம் சனி ஓரையிலும் தரிசிப்பது நல்ல பலன் தரும்.

சஷ்டி திதி முருகப் பெருமானுக்கு உரியது. ஏகாதசி திதி பெருமாளுக்கு உகந்தது. சதுர்த்தி விநாயகருக்கும் பஞ்சமி வாராஹி தேவிக்கும் முக்கியமான நாள். திரயோதசி திதி என்பது பிரதோஷமாக சிவ வழிபாட்டுக்கு உரிய நாளாக போற்றி வணங்கப்படுகிறது.


இதேபோல், அஷ்டமி திதி என்பது பைரவ வழிபாட்டுக்கு உரிய நாளாகப் போற்றப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி என்பது கூடுதல் விசேஷமான நாளாகச் சொல்கின்றனர். தேய்பிறை அஷ்டமியில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் செல்வதும் பைரவருக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டுவதும் தடைகளையெல்லாம் தகர்க்கவல்ல வழிபாடு என்று போற்றுகின்றனர். கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி திதியன்று சிவபெருமானின் அவதாரங்களில் ஒருவரான ஸ்ரீ கால பைரவர் ஜெயந்தியாக கொண்டாடப்படுகின்றது. இதன் காரணமாக தான் கால பைரவரை வழிபட ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி மிக உகந்த நாளாக பார்க்கப்படுகின்றது.ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும்போது 48 தினங்களுக்குள் நிறைவேறுகிறது. … எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஸ்ரீ காலபைரவருக்கு காலையில் கோயில் திறந்தவுடனும், இரவு மூடும்போதும் விஷேச பூஜை செய்ய வேண்டும் என நித்யபூஜா விதி கூறுகின்றது.
பரணி நட்சத்திரத்தில்தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும்.

தேய்பிறை அஷ்டமியில் சிகப்பு நிற ஆடை அணிந்து, சிகப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, வெள்ளைப் பூசனியில் நெய் தீபம் ஏற்றி வர மிகவும் நல்ல பலன்களை பெறலாம். ராகுகாலத்தில் 11 நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும், ருத்ராபிஷேகம் செய்தல், வடைமாலை சாற்றி வழிபடுவது நல்லது.

பைரவ மூர்த்தங்களுக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்வது ரொம்பவே விசேஷமானது. பைரவருக்கு வடைமாலை சார்த்தி வேண்டிக்கொள்வதும் வழக்கு முதலான சிக்கல்களில் இருந்தும் பிரச்சினைகளில் இருந்தும் நிவர்த்தியாக்கும் என்பது ஐதீகம்

தேய்பிறை அஷ்டமி நாளில் சிறப்பு பூஜைகள், யாகங்களில் கலந்து கொள்வது என்பது சகல வித செல்வங்களையும் அள்ளித்தரும்.
இன்றைய தினம் பைரவருக்கு வில்வம் அல்லது செவ்வரளி மாலை அணிவித்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். தேங்காயில் மூன்று கண்கள் இருக்கும் தேங்காய் மூடியில் ஐந்து எண்ணெய்களை ஊற்றி விளக்கிடுவதும் விசேஷம். நெய் தீபமும், மிளகுத் திரி தீபமும் பக்தர்கள் பைரவருக்கு ஏற்றி
வழிபடலாம்.

இந்தநாளில், பைரவாஷ்டகம் பாராயணம் செய்வோம். பைரவரை தரிசிப்போம். செவ்வரளி மாலை சார்த்தி வணங்குவோம். முக்கியமாக, மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவோம். நம்மைச் சுற்றியுள்ள துர்குணங்களும் தீய சக்திகளும் விலகும். இன்னும் குறிப்பாக, தேய்பிறை அஷ்டமி நன்னாளில், தெருநாய்களுக்கு பிஸ்கட்டோ உணவோ வழங்குவோம். நம் கர்மவினைகளையெல்லாம் போக்கி அருளுவார் காலபைரவர். ஸ்ரீ குபேர குருஜியின் 🔑பணம் தரும் பைரவர் 🔑புத்தகத்தில்
இந்த சூச்சமங்களை பதிவு செய்து உள்ளார்

குபேர சம்பத்து கிடைக்க; சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரம்!

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் காயத்ரி:

ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி:
தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்!

நாள் சனிக்கிழமை 27/11/2021

வழிபட உகந்த நேரம் 9 am to 10.30 am

பைரவர் அருட்கடாட்சம் பெற

ஸ்ரீ குபேர குருஜி காலாஷ்டமி பெருவிழா யாகம் கோவையில் நடத்த இருக்கிறார் அனனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்

யாகம், வேள்வி, அபிஷேகம், அன்னதானம் நடைபெறும்.

ஸ்ரீ ஸ்ரீ ஸ்வர்ண பைரவர் யந்திரம் மற்றும் தாயத்து பூஜையில் வைத்து அனுப்பப்படும்.

Whatsapp Number: https://wa.me/919894624425

மேலும் விபரங்களுக்கு : 7868868899
9790044225 / 9894624425

Back to blog