பிரபஞ்சக் களமே பேரறிவின் நிலைக்களன்

பிரபஞ்சக் களமே பேரறிவின் நிலைக்களன்

சுய கருத்தேற்றம், தற்கருத்தேற்றம், ஆட்டோ சஜஷன் (Auto Suggestion) ஆழ்மனக் கட்டளைகள் மனச்சித்திரம் பார்த்தல், மனோசித்ரயோகா, கிரியேட்டிவ் விஷ்யுவலைசேஷன் (Creative Visualization) செல்ப்ஹிபனாசிஸ் (Self Hypnosis) ஆல்பா நிலைத் தியானம் (Alpha Meditation) பிரார்தனை இவை அனைத்தும் அறிவியல் அடிப்படையில் அமைக்கப்பட்ட பயிற்சிகள்.

எப்படி ஒரு கல்லை வானத்தில் தூக்கி எறிந்தால் அது மீண்டும் புவிஈர்ப்பு விசையினால் பூமியை நோக்கி விழுகிறதோ அதுபோல மேற்கண்ட எல்லா செயல்பாடுகளும் இயற்கை விதிகள் எப்போதும் மாறாது போல நிச்சயமாகப் பலனைத் தரும்.

இதை உணர்ந்த நம் முன்னோர், ஏன் இதற்கு இத்தனைப் பெயர்களை வைத்து அழைத்து குழப்பத்தை விளைவிக்க வேண்டும். ஒரே பெயர் அது. அனைத்துலக மக்களும் படித்தவனும், பாமரனும் புரிந்து கொள்ளும் பெயர் “பிரார்த்தனை” (Parayer) என்று வகுத்துத் தந்திருக்கிறார்கள்.

பிரார்த்தனை எப்படி விஞ்ஞானபூர்வமானது என்பதை அறிந்து கொண்டால் “Every Prayer has got an answer”, “Three is no prayer without an answer” என்பதை உணரலாம்.

எல்லா பிரார்த்தனைகளுக்கும் விடை கிடைக்கும். விடையில்லா பிரார்த்தனை இல்லை.

பிராரத்தனை எப்படி அறிவியல் பூர்வமாக செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்ள இந்த பிரபஞ்சத்தைப் பற்றிய ஒரு தெளிவு நமக்குத் தேவை.

இந்த பிரபஞ்சத்தில் அண்ட சராசரத்தில் வானவெளியில் கோள்களும், நட்சத்திரங்களும் எப்படி அந்தரத்தில் மிதந்துகொண்டு ஒவ்வொன்றும் அதனதன் வட்டப் பாதையில் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளாமல் ஒரு ஒழுங்கில், நம் கற்பனைக் கெட்டாத அதி வேகத்தில இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்தக் கோள்கள், நட்சத்திரங்களின் எடை எப்படிப்பட்டது? கற்பனைக் கெட்டாத எடையை, கணத்தைக கொண்டது அல்லவா? இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கிறபொழுது வியப்பும் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்கிற உணர்வும் உண்டாகிறதல்லவா?

எப்படி பூமிக்கு புவிஈர்ப்பு விசை இருக்கிறதோ அதனதன் தன்மைக்கேற்ப ஈர்ப்பு விசை இருக்கிறது. இந்த ஈர்ப்பு விசைகள் அதனதன் எல்லைக்குள் மட்டும் செயல்படுவது இல்லை.

உதாரணமாக பூமியின் உபகிரணமான சந்திரன் பூமியின் புவிஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கே புவிஈர்ப்பு விசை உடையதாக இருந்தாலும் பூமியின் மீது ஈர்ப்பு ஆற்றலை செலுத்துகிறது.

பௌர்ணமி முழு நிலவு நாட்களிலும், அமாவாசை நாட்களிலும் பூமியில் கடலில் அலைகளின் உயரமும் நீரின் மட்டமும் உயர்ந்து காணப்படுவதை கண்கூடாக நாம் அறிவோம். சந்திரனின் ஈர்ப்பு விசையால் பூமியின் மேற்பரப்பில் உள்ள நீர்ம நிலையில் உள்ள கடலில் உயரம் அதிகரிக்கிறது.

மிகக் குறைந்த ஈர்ப்பு விசை உள்ள சந்திரனின் ஆதிக்கம் பூமியின் மீது செயல்படுகிறபோது பூமியின் ஈர்ப்பு விசை சந்திரனின் மீதும் ஏனைய சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களின் மீதும் இருக்குமல்லவா? அதுபோலவே சூரியனின் கோள்களின் மீது மட்டுமல்லாமல் ஏனைய சூரிய குடும்பங்கள் அல்லது நட்சத்திர மண்டலங்களின் மீதும் இருக்குமல்லவா?

இப்படி வானவெளியில் உள்ள அத்தனை கோள்களும் நட்சத்திரங்களும் ஒன்றின் மீது ஒன்று ஈர்ப்பு விசையால் ஆதிக்கம் செலுத்தி இவைகள் தங்களின் இயக்கப்பாதையிலிருந்து விலகாமலும், மற்றவைகளை நெருங்காமலும் இயங்குவதும் ஒரு ஒழுங்கு உருவாவதும் வியப்பல்லவா?

இப்படி இந்த ஈர்ப்பு விசைகள் ஒரு வலைப்பின்னலைப் போல செயல்படுவதால் இவைகள் அதனதன் கதியில் பிரபஞ்ச நியதியோடு இயங்கிக் கொண்டிருக்கின்றன. பூமியில் காற்று மண்டலத்தைத் தாண்டிச் சென்றால் அது ஒன்றுமில்லாத வெட்டவெளி, சூன்யம் என்று சொல்கிறோம். ஆனால் அந்த வெட்ட வெளியில் ஒன்றுமே இல்லை என்று சொல்லப்படுகிற சூன்யப் பகுதியில் இந்த கோள்களின் நட்சத்திரங்களின் ஈர்ப்பாற்றல் காந்த ஆற்றல் நிறைந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த வான்வெளிக் காந்தம் வலிமையுடையது. அதிக எடைமிக்க அதிக வேகம் மிக்க இந்தக் கொள்களையெல்லாம் இந்த வான்காந்தம் தாங்கி தன்னகத்தே வைத்திருக்கிறக்கிறது.

இந்த சூன்யப் பிரதேசத்திலுள்ள, வெட்ட வெளியிலுள்ள வான் காந்தத்தின் ஆற்றல் அளப்பறியது. இதுவரை மனிதன் அறிந்த வலிமையான அனைத்தையும் விட வலிமையானது ALL THE MIGHTY, ALMIGHTY என்னும் இறை ஆற்றலாக விளங்குகிறது.

இந்த பிரபஞ்ச சக்தி (COSMIC ENERGY) யிலிருந்து மனிதர்கள் சக்தியைப் பெற முடியும். பயன்படுத்த முடியும்.

இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மனிதர்களின் நோய்களை மருந்தில்லா மருத்துவ முறையைக் கையாண்டு “ரெய்கி” பிராணிக் ஹீலிங்” போன்ற முறைகளால் குணப்படுத்துகிறார்கள். இந்த முறைகளில் பிரபஞ்ச சக்தியை மனிதர்கள் உள்ளங்கைகளாலும், உச்சந்தலையாலும் உடலாலும் கிரகித்து மற்றவர்கள் உடலில் நோயுற்ற பகுதிகளில் பாய்ச்சி குணப்படுத்துகிறார்கள்.

மற்றவர்களை ஆசீர்வதிக்கிறபொழுது நாம் நம் இரண்டு கைகளையும் உயர்த்தி உள்ளங்கைகள் அவர்களை நோக்கி இருக்குமாறு வைத்து உள்ளத்தில் வாழ்த்து குறித்து சங்கல்பிக்கிறபோது உணர்வோடு கூட, எண்ணங்களோடு கூட அவர்களோடு ஒன்றுவதால் நல்ல பலன்களும் பயன்களும் விளைகின்றன.

இதனால்தானே இரவிவர்மா என்கிற கேரள ஓவியன் மனித உரு கடவுட்கொள்கை கடவுளர்களையும், தேவதைகளையும் படமாக, சித்திரமாக தீட்டிய பொழுது வலக்கைகளால் ஆசீர்வதிப்பது போல வடித்து வைத்தார்.

இந்த வான்காந்தம் பற்றி மற்றுமொரு நுட்பத்தையும் நம்மால் அனுமானிக்காமல் இருக்க முடிவதில்லை. அதாவது நம்முடைய TAPE RECORDER, VIDEO RECORDER AND PLAYER கருவிகளில் ஒலிப்பேழை, ஒலிஒளிப் பேழைகளில் ஒரு காந்தத்துகள் பூசப்பட்ட காந்தநாடாவில் ஒலிகளும் பதிய வைக்கவும் பாட்டு நிலைத்து நிற்கிறது.

பல சமயங்களில் நம் சமுதாயத்தில் மனிதர்களுக்கு இடையே முரண்பாடுகள் ஏற்பட்டு மற்றவர்களிடமிருந்து தகவல்களை, உண்மைகளை, மறைத்து பொய் பேசுகிறபொழுது குற்றங்களிலிருந்து சாமர்த்தியமாக சிலர் தங்களை காத்துக் கொள்ள முயலும் பொழுது உண்மையைக் கண்டுபிடிக்க முனைந்து ஏமாந்துவிடுகிறவர்கள் “இந்த குற்றவாளிகள் சாமர்த்தியமாக நம்மை வேண்டுமானால் ஏமாற்றலாம். மேலே இருந்து ஒருவன் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். அவனக்குத் தெரியாமல் ஓர் அணுவும் அசையாது. இவர்களின் எண்ணங்களும் மறைமுகமான செயல்பாடுகளும் கடவுள் அறிவார். அந்த மகா சக்தி அறியும் என்று” பேசுகிற வழக்குப் பேச்சுகளிலிருந்து இந்த உண்மைகளை நாம் உய்த்துரணலாம்.

மண்ணுலக மனிதர்கள் ஏதோ ஒன்று குறித்து சிந்திக்கிறபொழுதோ, ஏதோ ஒன்றுக்கு தீர்வு வேண்டுமென்று யோசிக்கிறபொழுதோ, விஞ்ஞானிகளும் கூட ஏதோ ஒன்றை புதிதாக உருவாக்க வேண்டும், கண்டுபிடிக்க வேண்டும் என்று தீவிரமான சிந்தனையில் மூழ்கி இருக்கும் பொழுது மனம் ஆல்பா நிலைக்கு அதாவது மன இயக்கம் 8-13 சுற்றுகள் வரையில் ஒடுக்கப்படும் பொழுது மின்னல் கீற்றென திடீரென ஒரு புதிய சிந்தனை, யோசனை ஐடியா (IDEA) உதயமாகிறது. இது பிரபஞ்ச அறிவிலிருந்து மனித மனத்திற்குள் உள் வாங்கப்பட்ட ஒரு அறிவு அல்லது செய்தி இல்லாதவர்களுக்கும கூட இது போன்ற ஞானம் சில சமயங்களில் உண்டாவதுண்டு.

தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற அறிவியல் மேதை பள்ளி சென்ற மூன்று மாதங்களுக்கு “TOO STUPID TO LEARN” படிப்பதற்கு லாயக்கற்ற மர மண்டை என்கிற ஆசிரியரின குறிப்போடு பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட சிறுவன், உலகம் உள்ள வரை மறக்கவியலா கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியது எங்ஙனம்?

அது பிரபஞ்ச அறிவில் இருந்து பெறப்பட்ட ஞானம் தானே.

எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்தவர், பரம்பரையில் மிகச் சிறந்த தமிழறிஞர்கள் இல்லை. தொல்காப்பியமும் நன்னூலும் படிக்கவில்லை. ஆனால் கவியரசர் என்று திரைப்படத்துறையில் பாராட்டப் பெற்ற கண்ணதாசன் பெற்ற ஞானம் பிரபஞ்ச அறிவிலிருந்து செயற்கையாக தூங்காமல் தூங்கும் தியான நிலைக்கு போதையின் வழியில் போய் பாடல் இயற்றிய ஞானம் பிரபஞ்ச ஞானம்.

பிரபஞ்ச காந்தக் களத்தில் எல்லா தகவல்களும் பதிவாகி இருப்பதால் அது எல்லையில்லாத ஞானத்தை தன்னுள் வைத்திருக்கிறது. கடவுட் தன்மையை இறைவன், கடவுள் என்று பெயர். குறிப்பிட விரும்பாதவர்கள் இறைவனை இந்த ஆற்றலை “பேரறிவாளன்” என்றும் “INFINITE INTELLIGENCE என்றும் அழைக்கிறார்கள்.

திருவள்ளுவப் பெருந்தகை
கற்றதனாலாய பயனென் கொல் வாலறிவன்
நற்றாள் தொழா ரெனின்
-குறள்

என்று இறைவனுக்கு “தூய்மையான அறிவினன்” என்கிற பொருளில் “வாலறிவன்” என்று குறிப்பிடுவதை நாம் சிந்தித்துத் தேறலாம்.பிரபஞ்சக் களமே பேரறிவின் நிலைக்களன்

Back to blog