நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள்.
(1) வெட்கம் :- (Shyness )
ஒரு தொழிலை செய்யும்பொழுதோ, அல்லது ஒரு செயலை செய்யும்பொழுதோ அதனை நம்மால் செய்ய முடியுமா,
அதற்கு நமக்கு தகுதி இருக்கா, அதில் தோல்வி அடைந்தால் மற்றவர்கள் கேலி செய்வார்களே என்று வெட்கப்பட்டால்
முன்னேற முடியாது.
(2) பயம் :- (Fear)
இதனை நம்மால் செய்ய முடியுமா, அதாவது இந்த செயலை நம்மால் செய்ய முடியுமா என பயப்படுவது.
(3) தாழ்வுமனப்பான்மை :- (Poorself-image)
அவங்களுக்கு தைரியம் இருக்கு எனக்கு இல்லை, அவர்களுக்கு அதற்கான தகுதி இருக்கு நமக்கு இல்லை என நம்மை நாமே
தாழ்த்திக் கொள்ளல்.
(4) நாளையவாதி :- (Procrastination)
எந்த செயலையும் நாளை நாளை என தள்ளிப்போட்டுக்கொண்டே செல்லுதல்.
(5) சோம்பல் :- (Lazyness)
சோம்பல் பட்டுக்கொண்டு எந்த செயலையும் செய்யாமல் இருப்பது.
(6)பிற்போக்கு பழக்க வழக்கம் :- (Negative Habits)
பிற்போக்கான எண்ணங்கள் பிற்போக்கு செயல்கள் ஆகியவற்றால் பிற்போக்கு பழக்க வழக்கங்கள்.
(7) எதிர்மறை எண்ணம்:- (negative thoughts)
எதிர்மறை எண்ணம் நமது முன்னேற்றத்திற்கு மாபெரும் எதிரி என்பது தெரிந்தும், அதை களையும் வழி தெரியாமல் பலரும் திண்டாடுகிறோம்.
எதிர்மறை எண்ணம், எதிர்மறை பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை தூக்கி எறிய வேண்டும்.