திருவண்ணா மலையை கிரிவலம் வரும்போது மழை வந்தால் ஒதுங்கலாமா!!!??
மனிதனாலோ, மிருகத்தாலோ, பகலிலோ, இரவிலோ சாகாத வரம் பெற்றவன் இரணியன். மேலும் வரம்பெறும் பொருட்டு அவன் மனைவி லீலாவதிக்குத் தெரியாமல் தவம் புரியச் சென்றான். கணவனைத்தேடி ஒவ்வொரு புனிதத் தலமாகத் தேடினாள் லீலாவதி.
அப்போது அவள் மூன்று மாத கர்ப்பிணி. அவள் நிலை அறிந்து நாரதர், அம்மா! நீ..
! "திருவண்ணாமலை திருத்தலம் சென்று காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி மலையை கிரிவலம் வந்தால் உனக்கு நல்வழி கிட்டும்!' என்று கூறி, காயத்ரி மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார். "
அதன்படி திருவண்ணாமலை சென்று காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி அவள் கிரிவலம் வருகையில், திடீரென்று மழை பொழியத் தொடங்கியது!!!
அக்கினியாலானதுதிருவண்ணாமலை. அங்கே குடிகொண்ட பூமாதேவியை குளிர்வித்து சாந்தப்படுத்த சில பெளர்ணமி நாட்களில் அமுத புஷ்ப மழை பொழியுமாம். இந்த மழைப்பொழிவுஇறைத்தன்மையுடையது
ஒரு நூறுகோடி மழைத் துளிகளுக்குப்பின் ஒரேயொரு அமுதத் துளி கீழே இறங்குமாம். இந்தத் துளி எங்கு விழுகிறதோ, அங்கு மக்கள் நோய் நொடியின்றி வாழ்வர். பூமிகுளிரும், விவசாயம் செழித்து வளரும். அமைதி நிலவும். அது மட்டுமின்றி, அங்கு "அமுத புஷ்பமூலிகை"' என்கிற அரிய வகை தாவரங்கள் தோன்றும்.மழைத் துளிகள் கனமாக விழவே,கிரிவலம் வந்த லீலாவதி பாறை ஒன்றின் ஓரத்தில் ஒதுங்கினாள். எனினும், விடாமல் காயத்ரி மந்திரம் ஜெபித்தாள். அப்போது, விழுந்த அமுதத் துளி பாறையில் பட்டு வழிந்து அவள் வாயில் பட்டது. அதில் அணுவளவு அவளின் கர்ப்பப் பையையும் அடைந்தது. அதைக் கருவிலிருக்கும் பிரகலாதன் உண்டான். அந்தப் பாறையில் அமுத புஷ்ப மூலிகைகளும் தோன்றியது. அப்போது கிரிவலம் வந்த சித்தர் பெருமக்கள் இந்த அற்புதக் காட்சியைக் கண்டனர். உரிய மந்திரம் சொல்லி, அந்த மூலிகையைப் பறித்த சித்தர்கள், காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் லீலாவதியிடம் ஆசி கூறி கொடுத்தார்கள். அவள் வயிற்றில் வளரும் சிசு மூலம் மகாவிஷ்ணு புது அவதாரம் எடுக்க இருப்பதை அவர்கள் உணர்ந்தனர்!!!
அந்த மூலிகையைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டாள் லீலாவதி. அதனால் அந்த மூலிகையின் சக்தி கருவை அடைந்தது. அதுதான் பின்னாளில் ஸ்ரீநரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்கும் சக்தியை பிரகலாதனுக்கு வழங்கியது.
மழையும் வெயிலும் சேர்ந்து வரும்போது ஸ்ரீலட்சுமி நரசிம்மர் துதிகளை ஜெபித்தால் நமது வீட்டில் செல்வமழை பொழியுமாம். மழை பொழியாவிட்டாலும் மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் நற்பலன்கள் ஏற்படும் என்பது ஐதீகம்!!!
ஆம் ! நாமும் இனி திருவண்ணாமலையில் கிரிவலம் வரும்போது திடீரென்று மழை வந்தாலும் அதை பாக்கியமாகக் கருதி முடிந்தவர்கள் முடிந்தவரை மழைக்கு ஒதுங்காமல் அக்கினி ரூபமான மலையைச் சுற்றிவந்து வாழ்வில் பதினாறு பேறுகளையும் பெற்று வளமோடு வாழ்வோமாக!!!
நன்றி
ஓம் சிவாய போற்றி