திருடன் ராம மந்திரம் சொன்னால் என்னாகும்?

திருடன் ராம மந்திரம் சொன்னால் என்னாகும்?

ஒரு திருடன் ஞானி ஆக முடியுமா. நம்மளுடைய வாழ்வியலை மாற்றிக்கொள்ள முடியுமா. உண்மையான வாழ்வில் நடந்த ஒரு கதையை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அருட்பெரும் ஜோதி
ஒரு திருடர் ஞானியாக ஒரு சித்தராய் ஒரு ஞானம் அடைந்த முனிவராய் மாறிய சூட்சும ரகசியத்தை தான் இன்று இந்தப்பதிவில் உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.


அவருடைய பெயர் ரத்தனகர். ரத்தனகர் அப்படிங்கறவர் கொள்ளையடித்து அதிலிருந்து வரக்கூடிய பணத்தை தன் குடும்பத்திற்கு கொடுத்து வாழ்ந்து வந்தார். இதுவே அவர் வாழ்க்கையாக வாழ்ந்து வந்தார். ஒரு முறை அவ்வாறு கொள்ளையடிக்கும் போது நாரதர் அவரைப் பார்த்து விட்டார். நீ கொள்ளை அடித்துவிட்டு போகிறாயே அதை என்ன செய்கிறார் என்று நாரதர் கேட்டார். நான் இதை கொண்டு போய் என்னுடைய குடும்பத்திற்கு பிரித்து கொடுத்து வாழ்வதற்காக பயன்படுத்துகிறேன் என்று கூறினார்.

அப்பொழுது நாரதர் கேட்கிறார் நீ கொள்ளை அடிக்கும் போது ஒரு பாவம் வருகிறது. இந்தப் பாவத்தையும் உங்கள் குடும்பத்தார்கள் பங்கு போட்டுக் கொள்வார்களா. உடனே அந்த ரத்தனகர் அந்த நாரதரிடம் சொல்கிறார். ஆமாம் நான் கொண்டு போறதை எப்படி பங்குபோட்டு கொள்கிறாரோ அதேபோல் என் பாவத்தையும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். நாரதர் சொல்கிறார் சரி நீ போய் உன் குடும்பத்திடம் கேளு. உடனே அவரும் தனது குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் அழைத்துக் கேட்கிறார்.

நான் கொள்ளையடித்து வருவதை நான் எப்படி நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்ளோ அதேபோல் கொள்ளை அடித்து வருவதால் பாவம் ஏற்படுவது அந்த பாவத்தையும் ஏற்றுக்கொள்வீர்களா. அது எல்லாம் முடியாது என்று ஓடி விடுகிறார்கள். அப்பொழுது அவர் வாழ்க்கையை வெறுத்து காட்டுக்குள்ளே வருகிறார் அங்க நாரதரை பாக்குறாரு எல்லோரும் கைவிரித்து விட்டார்கள் இப்பொழுது நான் செய்த பாவத்திற்கு எப்படி பிராயசித்தம் தேடுவது.

அப்பொழுது நாரதர் சொல்கிறார் நீ ஒரு குறிப்பிட்ட மரத்தின் அடியில் அமர்ந்து மந்திர ஜபம் செய் என்று. ராமா ராமா ராமா என்று மந்திரத்தை சொல்லி உச்சரித்துக்கொண்டே இறை சக்தியை வேண்டு உனக்கு பாவங்கள் தோஷங்கள் போகும் அப்படின்னு நாரதர் சொல்கிறார். ஆனால் ரத்தனகர் அந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது அந்த மந்திரம் அவர் வாயிலிருந்து வரவில்லை அவருக்கு உச்சரிக்கத் தெரியவில்லை.

உடனே நாரதர் ஒரு மரத்தை காண்பித்து அந்த மரத்தின் பெயர் என்ன என்று கேட்கிறார். அப்பொழுது ரத்தனகர் அந்த மரத்தின் பெயர் மரா என்று சொல்கிறார். சரி இதையே நீ சொல்லி சொல்லி ஜெபித்துக் கொண்டே இரு என்று நாரதர் சொல்கிறார். அவரும் உச்சரிக்க தொடங்கிவிட்டார்.

மரா மரா மரா ராம ராம ராம ராம ராம என்று அவரே அறியாமல் ராமா என்ற மந்திரம் அவர் வாயிலிருந்தே வந்துவிட்டது. ராமரின் ஆசிர்வாதமும் ராமரிடம் உள்ள நேர்மையான இறை ஆற்றல்கள் எல்லாம் அவருக்கு கிடைக்கிறது. அவர் மந்திர ஜபம் செய்த இடத்திலே புற்று ஒன்று உருவாகி அவரை மூடுகிறது. அந்த மந்திர ஜபம் செய்தவர்தான் வால்மீகி ஆக அவதரிக்கிறார்.

ஆம் வால்மீகி ராமாயணம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா.

ராம ராம ராம என்கின்ற மந்திரத்தை ஒரு 108 முறை உச்சரியுங்கள் வால்மீகி அவரின் ஆசீர்வாதம் கிடைக்கும். வால்மீகி இராமாயணம் என்கின்ற கதையாக இருந்தாலும் சரி காவியமாக இருந்தாலும் சரி. ராமர் போல் ஒழுக்கமாக வாழவேண்டும் என்ற ராமரின் சரிதத்தை தந்த வால்மீகி அவர்களின் தெய்வ திருவடிகளுக்கு சரணம். இந்த அற்புதமான ரகசியத்தை வெளிப்படுத்த வாய்ப்பை கொடுத்த எனது குருமார்களுக்கும் என் குல தெய்வத்திற்கும் குபேரருக்கும்

கோடி நன்றிகள்! கோடி நன்றிகள்!

Back to blog