தினமும் பணம் வர மந்திரம் | Daily Money Attraction Mantra for Success

தினமும் பணம் வர மந்திரம் | Daily Money Attraction Mantra for Success

தினம் தினம் பணம். வருவதற்கான மந்திரம். தினம் தினம் பணம் பெறுவதற்காக நாம் பணத்தைப் பற்றிய எண்ணங்கள், சிந்தனைகள் அன்றாடம் மேற்கொள்ள வேண்டும். கண்டிப்பாக உழைத்தால் தான் பணம் வரும் ஆனால் அந்த உழைப்பு எதற்கும் நேர்மையான எண்ணங்களும் நேர்மறையான வார்த்தைகளும் நமக்கு வேண்டும். இதை செயல்படுத்தினால் பணம் உங்களைத் தேடி ஓடி நாடி வரும். நம்முடைய பணவளக்கலை பயிற்சியில் இந்த மந்திரத்தை சொல்லி பல நபர்களுக்கு மாற்றங்கள் உண்டாகியுள்ளது.

இந்த மந்திரத்தை தான் இப்போது உங்களுக்காக பகிர்ந்து கொள்ள போகிறேன். நீங்கள் தினமும் பயன்படுத்த வேண்டிய ஒரு மந்திரம்
தனம் பணம் தினம் தினம்
தனம் பணம் தினம் தினம்
தனம் பணம் தினம் தினம்
இந்த மந்திரத்தை ஒரு நாளைக்கு 108 முறை ஜெபிப்பதும் இல்லையென்றால் 108 தடவை ஒரு பேப்பரில் பச்சை நிற பேனாவில் எழுதுவது உங்களுக்கு தினம் தினம் பணம் வரக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும்.

ஆகையால் மனதில் நல்ல வார்த்தைகளையும் நல்ல செயல்களையும் யாரோ ஒருவர் சொல்கிறாரோ செய்கிறாரோ அவர்களுக்கு நிச்சயம் பலன் கிட்டும். எந்த வேர்வைக்கும் வேர் வைத்திய தீரும். நல்ல எண்ணங்களோடு நேர்மறை ஆற்றல் களோடு. உங்களை நம்பி இந்த மந்திரத்தை நம்பி செயலை செய்யுங்கள் தினம் தினமும் அனுதினமும் பணம் உங்களை நோக்கி வரும்.

பணம் என்பது ஒரு அற்புதமான சக்தி அந்த அற்புதமான சக்தியை நம்மிடம் கொண்டு வருவதற்கு நாம் அற்புதமான வார்த்தைகளை அற்புதமான செயல்களை அற்புதமான நம்பிக்கைகளை நமக்கள் விதைக்க வேண்டும் அப்படி விதைத்தால் அந்த விதை மிகப் பெரிய விருட்சமாக வரும். ஆலமரத்தின் விதை மிகச் சிறியது ஆனால் அதிலிருந்து வெளிவரும் ஆலமரமும் மிகப் பெரியது. அதுபோல்தான் நம் எண்ணங்களை சிறிதாக விதைத்தால் நமக்கு கிட்டும் பலன் பெரிதாக கிடைக்கும்.

இந்த மந்திரத்தை ஜெபிக்க வேண்டிய நேரம் காலை 6 மணியிலிருந்து 7 மணி வரை அல்லது மாலை 6 மணியிலிருந்து 7 மணி வரை இந்த நேரத்தில் சொல்லுங்கள் இல்லையென்றால் வாய்ப்பு இருக்கும் நேரத்தில் எழுதுங்கள்.

உங்கள் கடன் பிரச்சினைக்கான தீர்வு பணம் சம்பாதிப்பது தான் அந்த பணத்தை எவ்வாறு சம்பாதிக்க வேண்டும் என்பதை நான் கற்றுக் கொடுத்து விட்டேன். குடும்பத்திற்கு அச்சக்தி வரவேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். ஆவியால் நல்லதையே பாருங்கள் நல்லதையே பேசுங்கள் அல்லது கேளுங்கள் நல்லதையே யோசி யுங்கள் நல்லதே நடக்கும்.

வாழ்க பணமுடன்! நன்றிகள் கோடி!

Back to blog