தனத்திரயோதசி

தனத்திரயோதசி

தீபாவளிக்கு முந்தைய நாள் இதை செய்யுங்க செல்வம் பெருகும்
தனத்திரயோதசி நாள் நேரம் வழிபடும் முறை

அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களை

தீபாவளி என்பது நமது இந்திய திருநாட்டின் ஒரு தெய்வீகமான ஒரு நன்னாள் செல்வச் செழிப்பை உணரக்கூடிய நன்றி தெரிவிக்கக் கூடிய ஒரு அற்புதமான திருநாள்தான் தீப ஒளி திருநாளில் தீமையை அழித்து நன்மையை பெருகக் கூடிய இந்த அற்புதமான திருநாளை தமிழ்நாட்டைப் பொருத்த அளவுக்கு ஒரு நாளும் இந்தியாவைப் பொருத்த அளவுக்கு ஐந்து நாளும் கொண்டாடப்படுகின்றன இந்த ஐந்து நாள் தொடக்க நாளாக தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னாடி வரக்கூடிய நாளை தான் தன திரயோதசி என்று சொல்வார்கள் அதாவது நமக்கு பணத்தை வாரி வழங்கக்கூடிய மகாலட்சுமியையும் குபேரனை வணங்கி அந்த நாளில் எமதர்மராஜனுக்கு நன்றி தெரிவித்து எங்களையும் எங்கள் குடும்பத்தாரின் ஆரோக்கியத்தையும் நீங்கள் ஆசிர்வாதம் தந்து வழிபாடுகளுக்கு வளர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டிய ஒரு அற்புதமான நாள் இந்த நாளில் யார் ஒருவர் தனது வீட்டில் கீழ்க்கண்டவாறு வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு ஏழு தலைமுறை செல்வச் செழிப்பு பெறும் அந்த செல்வச்செழிப்பு பெறுவதற்கு கீழ்க்கண்ட
வழிமுறைகளை பயன்படுத்தி அனைவரும் வளம் பெறுங்கள் வாழ்க வளமுடன்

தனத்திரயோதசி நாளில் லட்சுமி பூஜை செய்வதால் ஏழு தலைமுறைக்கும் செல்வம் பெருகும்

தனத்திரயோதசி நாளில் இரவு முழுவதும் விளக்கு ஏற்றி வைப்பது எமபயம் தீர்ப்பதாக ஐதீகம்.எனவே அந்த விளக்கு எமதீபம் என்று அழைக்கப்படுகிறது.

தன திரயோதசி தினத்தில்தான் யமராஜன் தன் சகோதரி யமுனையின் வீட்டிற்குச் சென்று ஆசிகள் வழங்கி, பல பரிசுகள் கொடுக்க யமுனையும் மனம் மகிழ்ந்து, தனது சகோதரனுக்குப் பரிசுகளும் இனிப்புகளும் கொடுக்கிறாள்.
இத்திருநாளில் வடநாட்டுப் பெண்கள், தங்கள் சகோதரர்களைச் சந்தித்து, அவர்களின் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துகிறார்கள். சகோதர பாசத்தை வளர்க்கும் இந்த விழாவை, எமனுக்குப் பிடித்த விழா என்று புராணங்களும் போற்றுகின்றன. வெள்ளிக்கிழமை பிரதோஷ நேரத்தில் தீபம் ஏற்றி வழிபட யம பயம் போகும்.
தென்னிந்தியர்களுக்கு அட்சய திருதியை போல வட இந்தியர்களுக்கு தன திரயோதசி. அன்று தங்கம் வாங்கினால் செல்வம் கொழிக்கும் என்பது அவர்களது நம்பிக்கை. அப்படி வாங்கும் தங்கத்தை தனலட்சுமியின் முன் வைத்து பூஜை செய்வார்கள். வசதி குறைவானவர்கள் வெள்ளி, புதிய பாத்திரங்கள், பித்தளை, புடவை வாங்கலாம். தனத்திரயோதசி தினமான நவம்பர் 2 செவ்வாய்கிழமை மாலை 6.29 pm மணிமுதல் 8.10 pm மணிவரை பூஜை செய்ய நல்ல நேரமாகும். லட்சுமி குபேர பூஜை செய்ய செல்வ வளம் பெருகும்.

தனத்திரயோதசி தன்வந்திரி திரயோதசியாகவும் கொண்டாடப்படுகிறது. மருத்துவக் கடவுளான தன்வந்திரி பகவானின் கதையைப் படித்து அவரை முறைப்படி வழிபட வேண்டும். தன்வந்திரி அவதாரம் தீபாவளி அமாவாசைக்கு முன்தினம் வருகின்ற இந்த நாளில் தேவர்களும் அசுரப் படைகளும் பாற்கடலைக் கடைந்தபோது ஒரு கையில் அமிர்தகலசம் மற்றொரு கையில் மருத்துவ சாஸ்திரம் மற்றும் அதன் வழிமுறைகளோடு கூடிய ஓலைச் சுவடிகளோடு தன்வந்திரி தோன்றினார். நோய்கள் நீங்கவும், அகால மரணங்கள் ஏற்படாமல் தவிர்க்கவும் தனத்திரயோதசி நாளில் தன்வந்திரி பகவானை வணங்கலாம்.

Dhanteras, also known as Dhantrayodashi, is the first day of the five-day-long Diwali festivities. Hindus consider this an extremely auspicious day for making new purchases, especially of gold or silver articles and new utensils.

இந்த நாளில் நாம் தங்கம் வாங்குவது வெள்ளி வாங்குவது குத்துவிளக்கு வாங்குவது விளக்கு சார்ந்த ஆன்மீகம் சார்ந்த பொருட்களை நாம் வாங்குவது நம்மையே அறியாமல் நமக்கு மகாலட்சுமியையும் ஆசிர்வாதத்தை பெறக்கூடிய சூழ்நிலை நமக்கு ஏற்படுத்தித் தரும் அனைவருமே இந்த ஆண்டு தீபாவளி அன்று மேற்கண்ட வழிபாடுகள் செய்து உங்களால் முடிந்த சிறிய அளவு தங்கத்தையும் வெள்ளியையும் வாங்கி வளமும் நலமும் பெற முடியவில்லை வெள்ளி வாங்க முடியவில்லை என்று நினைப்பவர்கள் குத்துவிளக்கு காமாட்சி அம்மன் விளக்கு வாங்கலாம் அதுவும் வாய்ப்பில்லை என்று நினைப்பவர்கள் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கக்கூடிய கடையில் சிறிதளவு உப்பும் மஞ்சளும் வாங்கி அதை வைத்து விளக்கு ஏற்றுங்கள் அனைவருக்கும் வளமும் நலமும் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் அனைவருக்கும் தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் குருவருளும் திருவருளும் மகாலட்சுமி அருளும் குருவின் பார்வையும் உங்களுக்கு வரட்டும் வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி

ஓம்_நமசிவாயம்

💐💐💐💐💐💐💐💐💐

நன்றி நன்றி நன்றி 🌞
வாழ்க வெல்க வளர்க 💸

வாழ்க பணமுடன் 💸
ஸ்ரீ குபேர குருஜி
Dr.Star Anand ram
பணவளக்கலை
Akshyum Divine Center

Back to blog