தந்தை

தந்தை

பணக்கஷ்டமும், மனக்கஷ்டமும் தனக்கு இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் குடும்பத்தின் சந்தோசத்துக்காக சுகமாக சுமந்து கொண்டிருப்பார் தந்தை.

இந்த பதிவை பதிவுசெய்ய எனக்கு 10 ஆண்டு ஆனது

சாஸ்திரப்படி ஒருவனுக்கு முதல் குரு நமது தந்தையே

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை

தன்னையே அர்ப்பணித்த தந்தையை போற்றுவோம்: தந்தையர் தினம்…

தந்தையாய் மாறினால் தான் தந்தையின் அருமையும் பெருமையும் தெரியும் என் மகனையும் நாளை நல்வழிப்படுத்த முடியும்.

பெற்ற தாயின் அன்­புக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்­பது உண்­மைதான்.அதே நேரத்தில், தந்­தையின் தியா­கத்­தையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒவ்­வொரு தந்­தையும்,தனது பிள்­ளைகள் நன்­றாக இருக்க வேண்டும் என்­ப­தற்­காக கடி­ன­மாக உழைத்து பொருள் ஈட்டி, வாழ்வில் தன்­ன­ல­மற்ற பல தியா­கங்­களை செய்து பிள்­ளை­களை நல்ல நிலைக்கு கொண்டு வரு­கி­றார்கள்.

சாஸ்திரப்படி ஒருவனுக்கு முதல் குரு நமது தந்தையே. உலகத்தில் அனைத்தையும் முதன்முதலில் நமக்கு அறிமுகம் செய்துவைப்பவர் அவர்தான். அவரே நம்மை குருவிடம் அழைத்துச் செல்கிறார் என்றாலும் குருவுக்கும் முன்பாக அனைத்தையும் நமக்குக் கற்றுக்கொடுப்பவர் அவர்தான்.

திருவள்ளுவர் பிள்ளைக்கும் தந்தைக்குமான கடமைகளைச் சொல்கிறார். தந்தை பிள்ளையைக் கற்றோர் கூட்டத்தில் கொண்டு சேர்த்து அதில் முன்னிலை பெற உதவுபவர். பிள்ளையின் கடமையோ ‘இப்படி ஒரு பிள்ளையைப் பெற அந்தத் தந்தை என்ன தவம் செய்தானோ’ என்று பெருமைகொள்ளச் செய்வது.
‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே…’ என்கிறது ஒரு திரைப்படப் பாடல். நம் புராணங்களில் அவற்றுக்கு உதாரணமாத் திகழும் சில தந்தைகளை இங்கு சிந்திப்போம்.

தந்தையின் அன்பு, உழைப்பு, அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்து பாராட்டி அவர்களுக்கு அன்பு செலுத்தவே தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தந்தையர் தினத்தை நம்மில் பலரும் கொண்டாடினாலும், இந்த தினத்திற்கான பாரம்பரியம் எப்படி தொடங்கியது என பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான்.

தந்­தையின் அன்பு கிடைக்­காமல் போவது, அன்­னையின் அன்பைப் போலவே குழந்­தையின் ஆளுமை,நடத்­தையின் வளர்ச்­சியில் அதிக பங்­காற்­று­கி­றது என்­கி­றார்கள் ஆராய்ச்­சி­யா­ளர்கள்

தந்தையர் தினம் உருவாகக் காரணமாக இருந்தவர் ஒரு பெண்மணி என்றால் நம்ப முடிகிறதா. மனைவியை இழந்த தன்னுடைய தந்தையின் அரவணைப்பை போற்றும் வகையில் அந்த பெண், தந்தையர் தின கொண்டாட்டத்தை முன்மொழிந்தார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஸ்போகேனில் வசித்து வந்த அமெரிக்க உள்நாட்டுப் போர் வீரர் வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட்டின் மகள் சோனோரா என்னும் பெண்மணி தான் தந்தையர் தினம் உருவாக காரணமாக இருந்தார்.

சோனோராவின் தாய் தனது ஆறாவது குழந்தையை பெற்றெடுக்கும் போது இறந்தார், அதன் பிறகு சோனோராவை அவரது மூத்த சகோதரர்களுடன் சேர்த்து அவரது தந்தை பிரியத்துடன் வளர்த்தார்.

வளர்ந்த பின் ஒருநாள், அன்னையர் தினத்தைப் பற்றிய ஒரு பிரசங்கத்தை அவர் தேவாலயத்தில் கேட்டுக் கொண்டிருந்தபோது, தந்தையின் பாத்திரத்திற்கும் அங்கீகாரம் தேவை என்று உணர்ந்தார். தாய் இல்லாத ஆறு குழந்தைகளை வளர்த்தெடுத்த தன் தந்தைக்கு அன்பு செலுத்த வேண்டும் என்ற காரணத்தால், தந்தையர் தின கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

அவர் அரசாங்கத்திடம் தனது தந்தை ஸ்மார்ட்டின் பிறந்தநாளான ஜூன் 5ஆம் தேதியை தந்தையர் தினமாக உலகெங்கிலும் உள்ள அப்பாக்களை மதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கைக்கு முதலில் ஒப்புதல் கிடைக்கவில்லை, இருப்பினும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை தந்தையர் தினமாகக் கொண்டாட முடிவு செய்தனர்.

அதை தொடர்ந்து, 1966 ஆம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் லிண்டன் பி ஜான்சன் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.

பணக்கஷ்டமும், மனக்கஷ்டமும் தனக்கு இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் குடும்பத்தின் சந்தோசத்துக்காக சுகமாக சுமந்து கொண்டிருப்பார் தந்தை. இன்று மருத்துவம், என்ஜினீயரிங் உள்பட உயர் படிப்புகள் பல படித்துக் கொண்டிருப்பவர்களில் பலர் தனது தந்தை கூலி வேலை செய்து, வயல் காட்டில் விவசாயம் செய்து, கட்டிட வேலை செய்து, சுமை தூக்கி, ஆட்டோ ஓட்டித்தான் கஷ்டப்பட்டு படிக்க வைப்பதாக கூறுவதை கேட்க முடிகிறது.

'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்பது சான்றோர் வாக்கு. அப்படிப்பட்ட அப்பாக்களுக்கு, நாம் இன்றைய தினத்தை அவர்களுக்காக அர்ப்பணிப்போம். அனைத்து அப்பாக்களுக்கும் 'இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!'.

அன்­னையின் வயிற்றில் ஐந்­தி­ரண்டு மாதங்­களாய் நம்மை சுமந்­தாலும், ஆயுள் வரை நெஞ்சில் சுமப்­பவர் தந்தை. அம்­மாக்­களை போல, அப்­பாக்­க­ளுக்கு பாசத்தை வெளிக்­காட்டத் தெரி­யாது.

வாழ்க்கைச் சக்­க­ரத்தில் வச­தியாய் நாம் வாழ்­வ­தற்­காக, ஓயாமல் சுழலும் அன்புச் சக்­கரம் தந்தை. "நான் பட்ட கஷ்டம்', என் பிள்­ளையும் படக்­கூ­டாது என்று வாயாற பேசி, மன­மார உழைக்கும் அந்த அன்பு… "கண்­ணுக்கு தெரி­யாத கட­வுளைப் போல', நம்மை அர­வ­ணைத்து காக்கும். தந்­தையின் பெரு­மை­களை மனதால் உணரும் போதுதான், அவரது அன்பு நம் கண்ணுக்குத் தெரியும். இன்று தந்தையர் தினம். இந் நாளின் ஒவ்வொரு மணித்துளியிலும் தந்தையின் உழைப்பை நினைவு கூர்வோம், புரிந்து கொள்ள முயற்சிப்போம். "தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என்ற வாக்கை, வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வோம்.

அப்பா நான் உங்­களை அதிகம் நேசிக்­கிறேன்!" என்ற நன்றி பெருக்­கான அன்பு கலந்த வார்த்­தையை சொல்­லுங்கள்.

என் தந்தை எனக்கு காட்டிய மல்லிகா என்ற தெய்வானை அவர்களுக்கு நன்றிகள் கோடி

எனது தந்தை சின்னக்கண்ணு என்கிற பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நன்றிகள் கோடி

என்னை தந்தை ஸ்தானத்தில் அமர்த்திய என் மனைவி கார்த்திகாவுக்கு நன்றிகள் கோடி

என்னை அன்புடன் தினமும் கண்விழித்த உடன் அப்பா அப்பா என்று அழைக்கும் என் அன்பும் தெய்விக அருளும் நிறைந்த என் மகன் கந்தன் அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றிகள் கோடி

ஜெய் ஆனந்தம்.

Back to blog