சித்தர் தரிசன மந்திரங்கள்
சித்தர்களில் முதன்மையானவரும்,அதிகமான பாடல்களை இயற்றியவருமான அகஸ்தியர் பின்வரும் மந்திரங்களை சித்தர் தரிசனத்திற்காகக் கூறுகிறார்.
1.சித்தர் தரிசன மந்திரம்:-
ஓம் || கிலி ரங் அங் சிங் ||
இம்மந்திரத்தை மாலையில் 5.45 முதல் 6.15 க்குள் அல்லது இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள் துரியம் என்ற சகஸ்ரார கமலத்தில் மனம் வைத்து 90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம் உண்டாவதுடன்,அஷ்ட சித்துக்கள்,வைத்தியமுறைகள் மற்றும் யோக, ஞான ரகசியங்களையும் உபதேசித்து அருள் செய்வார்கள் என்று அகஸ்தியர் தனது பரிபூரணம் 1000 என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
2.சித்தர் தரிசன மந்திரம்:-
சிவயநம கிலி ஓம் |||
இம்மந்திரத்தை மாலையில் 5.45 முதல் 6.15 க்குள் அல்லது இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள் துரியம் என்ற சகஸ்ரார கமலத்தில் மனம் வைத்து 90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம் உண்டாவதுடன் தொழில் முறைகள் (வாதம் ,வைத்தியம்), யோக ஞான ரகசியங்களையும் உபதேசித்து அருள் செய்வார்கள் என்று அகஸ்தியர் தனது ஞான சைதன்யம் 51 என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
3.சித்தர் தரிசன மந்திரம்:-
சிவயநம ஓம் கிலீம் ||
இம்மந்திரத்தை மாலையில் 5.45 முதல் 6.15 க்குள் அல்லது இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள் துரியம் என்ற சகஸ்ரார கமலத்தில் மனம் வைத்து 90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம் உண்டாகும்.சித்தர் பெருமக்கள் யாராவது காட்சி தருவார்கள் அச்சமயம் யார் வழியைப் பின்பற்றி அல்லது யார் நூலைப் பின்பற்றி இந்த முறையை அறிந்து கொண்டாய் என்று கேட்பார்கள்.அப்பொழுது அகஸ்தியரின் நூலைப் பின்பற்றி இம்முறையை அறிந்தேன் அய்யா என்று மறுமொழி கூற வேண்டும்.
தெரிசிக்கத் தியானமொன்று சொல்லக்கேளாய்
சிவயநம ஓம் க்லீம் என்று சேவி
வரிசிக்குஞ் சித்தரெல்லாம் வெளியிற்காணு
மகத்தான சித்தரப்பா வணங்கி நில்லு
பரிசிக்கும் படியவரைக் கண்டாயானால்
பணிந்திடுவாய் பாதத்திற் சிரசு தட்ட
கிரிசிக்கும் ஆர்நூலிற் சார்ந்தாயென்று
கேட்கிலகத்தீசுரர் தன கிருபை யென்னே
- அகத்தியர் பூரண சூத்திரம் பாடல் 97
4.சித்தர் தரிசன மந்திரம்:-
ஓம்|சிங் ரங் அங் சிங்|
இம்மந்திரத்தை மாலையில் 5.45 முதல் 6.15 க்குள் அல்லது இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள் துரியம் என்ற சகஸ்ரார கமலத்தில் மனம் வைத்து 90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம் தந்து நமது ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவுவார்கள் .
மேற்கண்ட மந்திரங்களில் எது உங்களுக்கு பிரியமானதோ அதைத் தேர்ந்தெடுத்து வடக்கு திசை நோக்கி அமர்ந்து ஜெபித்து வரவும்.
ஜெப விதிமுறை :
1.ஜெபிக்கும் போது அருகில் ஒரு செம்பு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் வைத்துக் கொள்ளவும்.
2.ஜெபம் செய்யும் இடத்தில் சந்தனமும்,பன்னீரும் கலந்து தெளிப்பது நல்லது.
3.அசைவம் எப்போதும் தவிர்க்கவும்.சைவ உணவு விரைவான பலன் தரும்.
4.குடும்பஸ்தர்கள் வெள்ளை உடை அணிவது நல்லது.
5.முழு நேர ஆன்மீகவாதிகள்,பிரம்மச்சாரிகள்,போன்றோர் மட்டும் காவி அணிந்து கொள்ளலாம்.
6.உணவு,உறக்கம்,உணர்ச்சி இவற்றில் சமநிலையைப் பேணவும்.
7.தனக்கும்,பிற உயிர்களுக்கும் தீமை தரக்கூடிய செயல்களைத் தவிர்க்கவும்.
8.இரவில் ஜெபம் செய்வதாக ஜெபித்து முடித்த பின் இருந்தால் தனியாக உறங்கினால் நல்லது.
9.விரிப்பின் மேல் வெள்ளை வேஷ்டி விரித்து அதில் உறங்கவும்.
10.சந்தன அத்தர் அல்லது ஜாவ்வாது சிறிது பூசிக் கொள்ளவும்.
11.மல்லிகை,ரோஜா,முல்லை போன்ற பயன்படுத்தலாம்.
12.பழங்கள்,இனிப்பு வகைகள் படைக்கவும்.
மேலும் விபரங்களுக்குக் கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து வீடியோ பார்க்கவும்.
வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||