சித்தர்கள் அருளிய சகல ஐஸ்வர்யத்தையும் ஈர்க்கும் 27 நட்சத்திர விருச்ச தியானம் முழு பயிற்சி

சித்தர்கள் அருளிய சகல ஐஸ்வர்யத்தையும் ஈர்க்கும் 27 நட்சத்திர விருச்ச தியானம் முழு பயிற்சி

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே

எப்போதுமே ஒரு சிவன் கோயில் என்பது ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் இருந்தால் சிறப்பு விருட்சங்களோடு இருந்தால் இன்னும் சிறப்பு. அத்துடன் சுடுகாட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சிவன் கோயிலுக்கு எப்போதுமே சிறப்பு உண்டு. அந்தவகையில் எல்லாமே இருக்கக்கூடிய ஒரு இடம்தான் இந்த இடம். இந்த இடத்தின் சிறப்பு என்னவென்றால் 27 நட்சத்திரங்களுக்கான மரங்களுடன் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு மரத்திற்கும் ஒவ்வொரு நட்சத்திரத்துடன் தொடர்பு உள்ளது. பொதுவாக நட்சத்திரங்கள் விண்வெளியும் தாண்டி பால்வெளி மண்டலத்தில் அமைந்துள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கான சிறப்புகளும் சக்திகளும் அந்தந்த நட்சத்திர மரத்தில் இருக்கிறது. ஆகையால் எனது அருமை நண்பர்களே அன்பர்களே நமக்குரிய மரத்தை நாம் தினம் பூஜை செய்து மனதார வேண்டினாலே நமக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.

புத்தருக்கு ஞானோதயம் வந்தது போதி மரத்தடியில் என்று நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். உண்மையான நிகழ்வு என்னவென்றால் அவர் மிகப்பெரிய ராஜாவாக இருந்தார். அவர் ஞானத்தை அடைய வேண்டும் என்பதற்காக காட்டுக்குள் சென்றார் ஒரு சாமியாராக. ஒரு ராஜாவாக வாழ்க்கை வாழ்ந்தவர் காட்டுக்குள் ஒரு தேடுதலில் இருக்கும்போது எனக்கு தேடுதலில் ஏதும் கிடைக்கவில்லை என்றபோது அவரது நிலை உடல் சுருங்கி சுருங்கி உடலில் உயிர் மட்டுமே இருந்தது. உயிர் போகும் தருவாயில் ஒரு மரத்தடியில் கீழே விழுந்தார். ஒரு மரம் எப்படி தன்னை ஆகர்ஷன படுத்துகிறது, எப்படி தன்னை மேம்படுத்துகிறது என்று புத்தருக்கு அந்த மரம் போதித்தது. மரமே குருவாய் இருந்து அவருக்கு போதித்தது.

அதாவது ஒரு மரம் என்பது இந்த பூமியில் இருக்கக் கூடிய சக்தியையும் வானில் இருக்கக்கூடிய சக்தியையும் சுற்றுச் சூழலில் இருக்கக்கூடிய சக்தியையும் ஒன்றிணைத்து யார் ஒருவர் சரியான முறையில் அந்த மரத்தை வழிபடுகிறார்கள் அவர்களுக்கு அந்த மரம் அவரவர் வேண்டிய வரத்தை நல்குகிறது.

அரசமரம் தான் உலகிலேயே அதிக ஆக்சிஜனை தருகிறது. அந்த மரத்தின் அடியில் ஒரு சிலையை வைத்து வழிபடும் போது அந்தத் தூய்மையான காற்றை சுவாசிக்கும் போது நமது சிந்தனை மற்றும் உள்ளம் தெளிவாகும். நம்மிடமுள்ள எதிர்மறைகள் நீங்கி நேர்மறையான ஆற்றல்கள் வெளிப்படும்.

ஆகையால் ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் அதற்குரிய மரத்தை அவரவர் வீட்டில் வைத்து வளர்த்து வழிபடும்போது. அந்த மரம் எப்படி செழிப்பாக வளர்கிறது அதுபோலத்தான் அவரவர் வாழ்க்கையும் செழிப்பாக வளரும் என்பது ஐதீகம். சித்தர்கள் காலத்தில் ஒவ்வொரு மரமும் பேசிக் கொண்டிருந்தது. ஒரு சாபத்தால் அந்த மரங்கள் பேசுவதில்லை. ஒரு மரத்தை திட்டினாள் அந்த மரம் செழிப்பாக வளரும். இது நிரூபிக்கப்பட்ட உண்மை.

வேப்பமரத்தின் சூட்சும ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள். வேப்பமரத்தில் பக்கத்தில் அமர்ந்திருப்பது அல்லது வேப்ப மரத்தின் இலையை கையில் வைத்திருப்பது நமக்கு மிகப்பெரிய ஆரோக்கியத்தை ஈட்டித்தரும். நாம் வாகனங்களில் செல்லும் போதும் அல்லது வெளியில் செல்லும்போதும் சிறிது வேப்பிலையை கையில் வைத்துக் கொண்டால் நமக்கு எந்த ஒரு தீங்கும் நேராது. இதுவும் உண்மையான ஒரு விஷயம் தான். நமக்கு ஏதேனும் நோய் இருக்கின்ற மாதிரி தோன்றினாலோ அல்லது நோய் ஏதேனும் இருந்தாலும் வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு வேப்ப மரத்தை தொட்டு அல்லது அதன் அருகில் அமர்ந்து மூச்சை நன்றாக உள்ளிழுத்து வேப்பமரத்தின் அந்த பச்சை நிறம் உள்ளே போவதாக நினைத்து நான் ஆரோக்கியம் அடைகின்றேன் நான் ஆரோக்கியம் அடைகின்றேன் நான் ஆரோக்கியம் அடைகின்றேன் நன்றி நன்றி நன்றி. 2 லிருந்து 7 நிமிஷம் வரை இந்த தியானத்தை மட்டும் செய்து பாருங்கள் என்ன மாற்றங்கள் ஏற்படுவது என்று உங்கள் கண்கூடாக தெரியும். தொடக்கத்தில் தோல் வியாதி இருந்தால் சரியாகும், ஒற்றைத் தலைவலி இருந்தால் சரியாகும், மனம் பலமாகும், மனதில் ஏதேனும் வலி இருந்தாலும் விலகும். உங்களுக்கு வாய்ப்பு இருக்கும் போதெல்லாம் வேப்பமரத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு ஆழ்ந்த சுவாசத்தை உள்ளிழுத்தால் என்றால் உங்கள் உள்ளம் மற்றும் உடல் பரிசுத்தமாக்கும் இது வேப்ப மரத்திற்கும் மட்டுமே உள்ள சூட்சம ரகசியம்.

செல்வம் பெறுவதற்காக நாம் இரண்டு மரத்தை வழிபடுவோம் அதில் ஒன்று வன்னிமரம். வன்னி மரத்திற்கு அருகில் அமர்ந்துகொண்டு நீங்கள் செல்வம் வரவேண்டுமென்று தியானம் செய்தீர்கள் என்றால் நிச்சயமாக உங்கள் தொழிலில் பெரிதும் மாற்றம் ஏற்படும் செல்வம் பெருகும். இரண்டாவது மரம் நாகவல்லி மரம் இந்த மரம் இருக்கும் இடத்தை சுற்றி பெரிதும் கோடீஸ்வரர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இந்த மரம் சிங்கப்பூர் மற்றும் பெரிய பெரிய வளர்ந்த நாடுகளில் உள்ளது. நீங்கள் இந்த மரத்தின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு எனக்கு செல்வம் வந்து கொண்டே இருக்கிறது நான் செல்வந்தன் ஆகி கொண்டே இருக்கின்றேன் நான் சகல ஐஸ்வரியங்கள் உடன் இருக்கின்றேன் நன்றி நன்றி நன்றி.

27 மரங்கள் அதாவது 27 நட்சத்திரத்திற்குரிய மரங்கள் உள்ள கோயிலுக்கு நீங்கள் அடிக்கடி சென்று வந்தால் உங்கள் மனதின் சக்தி அதிகரித்துக் கொண்டே இருக்கும். பொதுவாக அத்தகைய கோயில்களில் மந்திரங்களை பல்லாயிரக்கணக்கான தடவை ஓதி ஓதி அந்த மந்திரத்தின் சக்திகள் அனைத்தும் அங்குள்ள மரத்தில் போய் சென்றடைகிறது. ஆகையால் கோயிலில் உள்ள மரத்தடியில் நாம் அமர்ந்து கொண்டு நம் தொழிலை பற்றியோ அல்லது நம் ஆரோக்கியத்தை பற்றியோ அல்லது நம் எதிர்காலத்தை பற்றி என்ன பேசுகிறோமோ என்ன நினைக்கிறோமோ அது நிச்சயம் கைகூடும்.

கடைசியாக விரிச்ச தியானம் செய்வது எப்படி என்று சொல்கிறேன். உங்கள் நட்சத்திரத்திற்கான மரத்தின் அருகில் அமர்ந்துகொண்டு. உங்கள் இடது கையின் மேல் வலது கையை இருக்கிப் பிடித்துக் கொண்டு தொப்புள் கொடியின் அருகில் வைத்து முதுகுத்தண்டை சீராக்கி தலையை உயர்த்தி உங்கள் தலையின் மேல் உங்கள் நட்சத்திரத்தின் விருட்சத்தை நினைவுபடுத்திக் கொண்டு. அதாவது உங்கள் தலையின் மேல் உங்கள் நட்சத்திர விருட்சம் இருப்பதுபோல நினைத்துக்கொண்டு நான் சொல்வதை சொல்லுங்கள்

நான் ஆரோக்கியம் அடைகின்றேன்

நான் செல்வ மிக்கவனாய் உருவாய்கின்றேன்

நான் கோடீஸ்வரன்

என் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நான் முன்னேறி கொண்டே இருக்கின்றேன்

நன்றி நன்றி நன்றி

எனது நட்சத்திர மரமானது என் வாழ்வில் தேவையானதை ஆகர்சன படுத்தி கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

நான் நட்சத்திர மரத்தை மனதார வாழ்த்துகிறேன்… மனதார போற்றுகின்றேன்…. மனதார வணங்குகின்றேன்

நன்றி நன்றி நன்றிகள் கோடி…

Back to blog