சந்திராஷ்டமம் 27நட்சத்திரக்காரர்களும் என்ன செய்ய வேண்டும்?

சந்திராஷ்டமம் 27நட்சத்திரக்காரர்களும் என்ன செய்ய வேண்டும்?

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே

சந்திராஷ்டம் என்றால் என்ன

சந்திர அஷ்டமம் சந்திரன் அவர் அன்றைய நாளில் அஷ்டமித்கிறார் அதாவது மறைகின்றார்.

நம்முடைய ராசியிலிருந்து எட்டாவது இடத்தில் இருக்கக்கூடிய சந்திரன் நம்மளுடைய நட்சத்திரத்தில் அன்றைய நாளில் சந்திரன் அவர் பார்ப்பதில்லை இதைத்தான் நான் சந்திராஷ்டமம் என்று கூறுகின்றோம்.

சந்திரன் பார்க்கவில்லை என்றால் என்னென்ன விஷயங்கள் நடக்கும்?

சந்திரனை பார்ப்பதால் சந்திரனை நாம் மனோகரன் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள் மனோகரன் என்றால் மனதை ஆள கூடியவன். மனதை ஆளக் கூடியவர் பார்க்கா விடில் நம் மனதில் சில குளறுபடிகள் ஏற்படுகின்றன. மனம் சார்ந்து தெளிவில்லாமல் அன்றைய நாளில் செயல்படுவோம். மனம் தெளிவில்லாமல் ஒரு காரியத்தை செய்கிறோம் என்றால் காரிய தடை ஏற்படும். அது ஏதாவது ஒரு பிரச்சனையில் கொண்டுபோய்விடும்.

சந்திராஷ்டமம் எப்படி தெரிந்து கொள்வது?

அன்றைய நாளில் தின காலண்டரில் நீங்கள் உங்கள் ராசிக்குரிய சந்திராஷ்டமத்தை தெரிந்துகொள்ளலாம்.

அன்றைய நாள் என்பது சொல்வதைவிட இரண்டரை நாட்கள் அந்த நட்சத்திரகாரர்களுக்கு சந்திராஷ்டமம் இருக்கும். முக்கியமாக ஒரு நாளுக்குரிய சந்திராஷ்டம் அத்தை மட்டும் தான் தின காலண்டரில் பதிவு செய்துள்ளார்கள். அன்றைய நாளில் மிக முக்கியமான விஷயங்களை செய்யாமல் முக்கியமான முடிவுகளை எடுக்காமல் எதிர்மறையாக பேசாமல் சண்டை சச்சரவுகளுக்கு செல்லாமல் இருப்பதே நன்மையை தரும்.

அன்றைய நாளில் காலையில் எழுந்து விட்டு சந்திரனின் பகவான் என்று சொல்கின்ற சந்திரமௌலீஸ்வரர். ஓம் சந்திரமௌலீஸ்வராய நம என்ற மந்திரத்தை சொல்வதும். அன்றைய தினத்தில் விநாயக பகவானை வழிபாடுகள் செய்வதும். சந்திரனுக்கு சாபத்தை கொடுத்து சாபத்தை விளக்கியவரே விநாயகர் தான்.

அன்றைய நேரத்தில் விநாயகருக்கு வெள்ளை நிறத்தில் ஏதேனும் பிரசாதத்தை செய்து வழிபடலாம். விநாயகரை வழி பட்டதுடன் அருகம்புல் எடுத்து உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அன்றைய நாளில் செயல்படுவது நல்லது தரும். பச்சரிசியை அன்றைய நாளில் தான தர்மங்கள் செய்வதும் எறும்புகளுக்கு போடுவதும் பறவைகளுக்கு போடுவதும் நல்லதை ஏற்படுத்தித் தரும்.

அன்றைய நாளில் வழிபாடுகள் செய்வதும் உங்கள் மனதை உங்கள் கட்டுக்குள் கொண்டுவர வைப்பதும் அமைதியாக இருப்பதும் நன்மையை ஏற்படுத்தி தரும். சந்திரன் வராத நாளில் நாம் சந்திரனை வழிபடுவது நம்மளுக்கு சந்திர ஆகரசனத்தை ஏற்படுத்தித் தரும். அதன்மூலமாக அடுத்தடுத்த நாட்களுக்கு நமக்கு நல்லதே நடக்கும்.

நம் முன்னோர்கள் வானியல் சாஸ்திரத்தை நம்மளுடைய வாழ்வியல் சாஸ்திரத்திற்கு உருவாக்கி வைத்துள்ளார்கள். அந்த வாழ்வியல் சாஸ்திரத்தில் வானியல் சாஸ்திரத்தை சரியான விகிதத்தில் பயன்படுத்தும் பொழுது நம் வாழ்வில் இருக்கக்கூடிய சிக்கல்கள் அனைத்தையுமே தீர்ந்துவிடும். அதன் பிரகாரம் தான் நான் உங்களுக்கு பல சூட்சுமங்களை பதிவு செய்து வருகின்றேன்.

இதை தெரிந்து அறிந்து நீங்கள் செயல்படுத்தினால் உங்களுக்கு பல பிரச்சினைகள் வரவே வராது.

தன்னை அறிந்தவனுக்கு தரணியில் வெற்றி மட்டுமே கிடைக்கும்.

ஆகையால் தன்னையறிந்து சித்தர்கள் கூறிய வழியில் நடப்போம்.

மீண்டும் ஒரு அற்புத ரகசிய தோடு உங்களை சந்திக்கின்றேன்.

வாழ்க பணமுடன்!!!

நன்றிகள் கோடி!!! ஆனந்தம்!!!!

Back to blog