கோபத்திற்கும் எனக்கும் சண்டை உலகில் எது எதுக்கோ சண்டை வருகின்றது. பொன்னுக்கும், பெண்ணுக்கும், நிலத்திற்கும், நீருக்கும், காசுக்கும், பதவிக்கும், மரியாதைக்கும், உணவுக்கும் என பல சண்டைகளில் இது அத்தனைக்கும் காரணம் அது நமக்கு இல்லையே கிடைக்கவில்லையே என்று கோபத்தில் தான் எனக்கும் சண்டை வந்தது யார் மேல் கோபத்தின் மேல் கோபத்திற்கும் எனக்கும் சண்டை வந்தது அப்போது என்னுள் நடந்த உணர்வுகளின் பிரதிபலிப்பே இந்தப் பதிவு.
கோபத்திற்கும் எனக்கு சண்டை. சில சூழ்நிலைகளால் கோபம் வருகிறது சில நபர்களால் கோபம் மேலும் பெருகுகிறது. நமக்கு தகுந்தார்போல் விஷயங்கள் நடக்காது பொழுது கோபத்தை வெளிப்படுத்துகிறோம்.
அதுவும் நம் அன்பு அதிகம் பெரும் நபர்களால் கோபம் உருவாக்கினால் தாங்கி கொள்ள முடியாத அளவில் கோபம் தலைக்கு ஏறுகிறது. தலைக்கு ஏறும் கோபம் உடலையும் மனதையும் மேலும் மேலும் பாதிப்பை ஆக்கி விடுகிறது அதனால் பல நோய் நொடிகள் தான் நம்மை நாடி வருகின்றன கோபத்தால் ஏதாவது நல்லது நடக்கின்றதா என்று யோசித்தேன் நீங்களும் யோசியுங்கள்.
கோபத்தால் ஒரு மண்ணும் நடக்கலை என்று மேலும் கோபம் தான் வந்தது எனக்கு அந்தக் கோபத்தைக் கொல்ல அல்லது வெல்ல என்ன செய்வது என என் குருநாதரிடம் அம்மாவாசையில் மௌன விரதம் இருந்து கேட்டேன் எந்த பதிலும் எனக்கு கிடைக்க வில்லையே ஏன் கிடைக்கவில்லை என்று இருள் சூழ்ந்த அம்மாவாசை அன்று இரவு வானை பார்த்தேன் நட்சத்திரமாய் என் உள் கிடைத்தது ஒரு அற்புதமான பதில்.
இருளை இருளால் அழிக்க முடியாது. சிறிய வெளிச்சத்தால் தான் முடியும். அதுபோல் கோபத்தை அழிக்க கோபத்தால் முடியாது. கோபத்தை அளிக்க கோபத்தால் முடியாது. அது அன்பால் மட்டுமே முடியும் ஆதலால் அன்பை வெளிப்படுத்தினேன் ஏன் கோபத்தின் மீது கோபம் என்ற மன இருள் அழிந்து அன்பு என்ற அருள் வெளிச்சம் என்னை ஆனந்தக் கூத்தாட வைத்தது.
அந்த அன்பே ஒற்றை சொல் அனைத்தையும் வெல்லும் அதனால்தான் சிவமே அன்பு அன்பே சிவம் என்றார் திருமூலர். அன்பு என்ற கடலில் அகப்படும் மலையே என்றால் வள்ளலார் அதையே வள்ளுவர் அன்பின் வழியது உயிர்நிலை என்கின்றார். அந்த அன்பை என்னுள் பெருக்கெடுத்து ஒவ்வொரு அனுவிடம் செலுத்தினேன். கோபம் காணாமல் போனது.
அன்பால் கோபத்தை வென்றேன் இந்த அன்பால் எதையும் அடைய முடியும் எதையும் வெல்லமுடியும் எதுவும் சாத்தியமே என்று உணர்ந்தேன். அன்பே அனைத்தும் இப் பிறவியே அன்பை உணர்ந்து வெளிப்படுத்தவே பிறந்துள்ளேன் என்பதை புரிந்து கொண்டேன்.
நீங்களும் அன்பை முன்னிறுத்தி அனைத்து செயல்களையும் செய்யுங்கள் வேண்டாம் அன்பு இருந்தால் அனைத்து செயல்களும் செயல் கூடும் என்னுள் அன்பு இருப்பதால் என்னை நான் நேசிக்கின்றேன் உன்னுள்ளும் அன்பு இருப்பதால் உன்னையும் நான் நேசிக்கின்றேன்.
அன்பே சிவம் அன்பே குரு இன்று முதல் என் குரு யார் என்றால் அது அன்புதான் என்னுள் இருக்கும் அன்பு என்ற சக்திக்கு நன்றிகள் கோடி வாருங்கள் அன்பர்களே நண்பர்களே அன்பு செய்வோம் ஆனந்தமாய்.