கொங்கணர் சித்தரின் சூட்சுமங்கள்

கொங்கணர் சித்தரின் சூட்சுமங்கள்

அருட்பெருஞ்ஜோதி!

பொன்னை ஊதி ஊதி அந்த மலையை பொன்னூதி மாமலையாய் மாறியது திருப்பதிக்கு முன் கொங்கண சித்தரை எங்கிருந்தார் எவ்வாறு இந்த பிரபஞ்சத்தில் வெளிப்பட்டார் அந்த இடம் எங்கே அந்த இடத்தில் ஒரு சூட்சம பயணத்தை நமது அக்ஷயம் டிவைன் சென்டர் சென்ற சார்பாக பல ஆண்டுகளாக செய்து வருகிறோம்.

இப்போது அந்த சூட்சமத்தை பற்றி நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் பொன்னூதி மாமலை சுந்தரபுரி பகுதியின் காங்கேயத்தில் அருகில் உள்ளது என்ற வேற்றிட இளவரசன் சிவபாலன் பேட்டை கிளம்பினான் தற்போதைய ஊதிமலை காட்டில் அந்த காலத்துல இந்த மலை பெயர் வந்த கந்த மலை.

வேட்டையை முடிந்தும் கொண்டு மலை உச்சியிலிருந்து சுனை அருகே ஓய்வு எடுத்துக்கொண்டா ன் தனது உடையில் உறைந்திருந்த ரத்தத்தை சுனை நீரில் தேய்த்துக் கழுவினால் அந்த நீரானது ஓடி கொல்லப்பட்டுக் கிடந்த விலங்குகள் மீது பட்டது அவ்வளவுதான் உயிரிழந்து கிடந்த மான்களும் விலங்குகளும் உயிர் பெற்று எழுந்து வாழ்க சிவன் வாழ்க சித்தன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே என்று வணங்கி விரைந்து ஓடினார்.

இளவரசன் விழித்தான் சிவன் சரி யார் அந்த சித்தன் என்று குழம்பினான் கூட வந்த படையினரில் நாட்டுக்கு அனுப்பி விட்டு அந்த சித்தரை கண்டறிய சிந்தனையுடன் காட்டிலேயே சுற்றிக் கொண்டிருந்தான் அன்று நள்ளிரவில் சிவபாலனுக்கு காட்சியளித்த போக மகரிஷி அவனை வாழ்த்தினார் நீயே அந்த சித்தர் போகர் கூறிய வாறு பல ஆண்டுகாலம் அந்த மலையில் ஒரு சந்திரகாந்தக்கல் தூணில் தவமிருந்த சிவபாலன் போகரின் ஆசியால் பல சித்திகளை கற்றுக்கொண்டார் போகரின் ஆலோசனைப்படி திருமாளிகை தேவரிடம் சென்று சமய தீட்சை நிர்வாண தீட்சை பல ஆன்மீக ரகசிய சூட்சமங்களை கற்று இந்தியாவெங்கும் பல ஆன்மிக ஸ்தலங்களுக்கு பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து மக்களோடு மக்களாய் கலந்து வந்திருந்தார் அப்போது பெரும்பாலான மக்கள் ஏழ்மையால் வாடுவதைக் கண்டு மனம் உருகினார் மீண்டும் ஊதிமலை சொர்ண ஆகர்ஷன பைரவரை நோக்கி தவமிருந்தார்.

ஊதி மலையில் அஷ்டமி அன்றும் மிக முக்கியமான பௌர்ணமி அன்றும் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு இன்றும் பூஜைகள் நடக்கிறது அந்த பூஜையை தொடங்கியவர் யார் தெரியுமா கொங்கனர் அந்த நினைத்தது தொட்டது யாவும் தங்கம் ஆகும் என்ற வரத்தை ஊதியூரில் பெற்றார் கொங்கணர் நாடெங்கும் சுற்றி வறியவர்களுக்கு தங்கம் வழங்கிய பெறுவதால் தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு முறை இந்த மீது ஏற்றப்பட்ட பறவையை சுட்டெரிக்கும் பார்வை பார்த்து பஸ்பம் ஆக்கினார் ஒரு கொக்கு பறக்குது அந்த கொக்கை பார்த்த உடனேயே அந்தக் கொக்கு அப்படியே எரிந்து சாம்பலாக போகிறது. கடும் பசியுடன் ஒவ்வொரு வீடா போலாம் அப்படின்னு பிச்சை எடுக்கப் போறாங்கன்னு அந்த காலத்துல சன்னியாசி என்றால் பிச்சை எடுத்து தான் உண்ணுவார்கள். தங்கத்தையே கொடுத்தவர் பிச்சை எடுக்க கிளம்பினார்.

அப்ப வள்ளுவ நாயனார் வீட்டுக்குச் சென்ற சிவபாலன் பிச்சை கேட்டு குரல் எழுப்ப வள்ளுவரின் தர்மபத்தினி வாசுகி அம்மையும் தன் கணவருக்கு பணிகளை முடித்துக் கொண்டு வெகுநேரம் கழித்து வந்தார். சிரத்தால் தம்மைச் சுட்டெரிக்குமாறு பார்த்து சிவபாலன் ஐ நோக்கி கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா என்று கேள்விகளை எழுப்பினார் ஒரு கணம் ஆடிப் போனார் கொங்கணர். கொங்கதேசத்தின் நிலவான சிவபாலன் கொங்கணர் ஆனார்.

போக மகரிஷி கூறியபடி வாசுகி அம்மையார் மூலம் அந்த சிவபாலன் கொங்கணவர் என்ற பெயர் பெற்றார் தனது பிழையை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டும் வாசுகி அம்மையார் பிச்சையிட்ட மண் பாத்திரத்தை பொன்னாக்கி அளித்தார். அந்த பாத்திரத்தை வாசுகி அம்மையார் வள்ளுவரிடம் காண்பிக்க அவர் சிரித்தபடி தான் குடித்துவிட்டு வைத்திருந்த நீரை வெளியே இருந்த பாறை மீது ஊற்றினார். பாறை சொக்க தங்கமாக மின்னியது இது கண்ட வியந்த கொங்கணவரை வள்ளுவர் கடிந்துகொண்டு உழைப்பால் வரும் செல்வம் நிலைக்கும் தான் நினைத்தால் ஜெகத்தையே தங்கமாக்க முடியும் என்று புத்தி சொல்லி அனுப்பினார்.

மந்திரங்கள் தந்திரங்கள் நிலையானது அல்ல சிவனை உழுவதே முக்கியம் இனி தங்கம் வரவழைத்து மந்திரத்தையும் உபயோகிக்க போவதில்லை என்று முடிவெடுத்து மீண்டும் ஊதிமலை சென்று கடும் தவம் இருந்தார் 800 ஆண்டுகள் தொடர்ந்து கொங்கணவர் ஊதியூர் மா மலையிலே கடும் தவம் இருந்தார். அதற்குப் பிறகு நாடெங்கும் செய்த பாவங்களால் பஞ்சமும் பசியும் வந்து கொண்டே இருந்தது அந்த பஞ்சத்தையும் பசியைப் போக்குவதற்காக மீண்டும் தங்கத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார்.

இம்முறை அபூர்வ மூலிகைகளை கொண்ட சாதாரண உலோகங்களை இரசவாத முறையில் தங்கம் ஆக்கினார். அப்போது அவருக்கு முன்பாக தோன்றிய போகர் தங்கத்தை உருவாக்கும் முயற்சியை கைவிட சொன்னார் எனினும் கொங்கணவர் தங்கத்தை உருவாக்கி மக்களுக்கு விநியோகித்தார். மண் குழாய்களைக் கொண்டு பொன்னை ஊதி ஊதி உருவாக்கியதால் அந்த மலை இப்போது பொன்னூதி மாமலை என்றும் சித்தர்களால் வணங்கியதால் இதை ஊதியூர் என்றும் கூறப்படுகிறது.

சித்தரால் தங்கம் கிடைக்கிறது என்பதால் எங்கும் குழப்பம் உண்டானது. கொலையும் கொள்ளையும் பெருகினர். கொங்கண சித்தரை சுற்றி மக்கள் கூட்டம் இருந்தனர் அப்போதுதான் கொங்கண சித்தர் தான் இழைத்த தவறை உணர்ந்தார். ஊதி மலையை விட்டு விலகினார் கர்நாடகாவில் உள்ள கொள்ளேகால் பகுதிக்கு சென்று தங்கினார் மக்கள் கூட்டம் தொடர்ந்து வந்தது குடைய மலைக்கு ஆகாய மார்க்கமாக பறந்தார். அங்கு சென்றபின் தங்கத்தை உருவாக்கும் ஓலைச்சுவடியை எரித்து பஸ்பம் ஆக்கினார். மக்களின் அறியாமையை அறிந்த சித்தர் தஞ்சைக்கு சென்று நந்திக்கு நடுவே நின்று சிவனை தரிசித்தார் அப்போது தனக்கு இடையூறாக வந்த சித்தரை கோபத்தோடு நோக்கியது நந்தி பாரெங்கும் 9 பல் கொண்ட நந்தி இங்கு 11 பல் கொண்ட கோலத்தால் அல்லவா கோபிக்கிறது என்ற கொங்கணர். அப்போது தோன்றிய ஜோதியை என்னவென்று அறியாமல் அதை சதா முடிக்குள் அடைத்து விடுகிறார்.

ஜோதியாக எழுந்தது சிவன் என்று உணர்ந்த இந்திரன் புலி வேடத்தில் கொங்கணர் இடம் சண்டைக்கு வர அவரையும் அடக்கி தன் காலுக்கு கீழ் வைத்துக் கொள்கிறார் கொங்கணர். இறுதியில் சிவனே காட்சி தந்ததும் பணிந்து அமைதியா கிறார். இதனால் தஞ்சை மேலவீதியில் இருக்கும் ஈசன் கொங்கணேஸ்வரன் என்ற நாமத்தால் அழைக்கப்படுகிறார். அங்கு கொங்கனவர் இந்திரனை அடக்கிய கோலத்தில் மதிய மரத்தடியில் இன்றும் இருக்கிறார். போதும் இந்த பிறவி என்று எண்ணிய கொங்கனவர் மீண்டும் ஊதி மலைக்கே சென்று தவம் இருந்தார்.

போகர் பழனியில் பிரதிஷ்டை செய்த நவபாஷண சிலையை போல் தானும் மூலிகையால் உருவாக்கிய உத்தண்ட வேலாயுத சுவாமி மலைக்கு இடையே நிறுவி வழிபட்டார் பல ஆண்டுகள் தொடர்ந்து வழிபாட்டின் பலனாக சிவன் தோன்றி புன்னை உருவாக்கிய புகழ் கொண்ட சித்தனே திருமலைக்கு சென்று சமாதி நிலை கொள் என்றார். அவ்வாறு வெங்கடவனின் காலின் கீழே ஐக்கியமாகி இன்றும் திருமாலின் ஆணைப்படி செல்வ வளத்தையும் வருபவருக்கு வாரி வாரி வழங்குகிறார் கொங்கனவர்.

பொண்ணுருக்கி சித்துகளை செய்த கொங்கணவர் தவமிற்றிய சந்திரகாந்த கல்லில் தாமே சுயமாக இன்றும் ஊதி மலையில் காட்சி அளிக்கிறார் கொங்கணவர். அவர் தவமிருந்த கொங்கணர் குகை அபூர்வமானது பிறப்பை அருக்க கூடிய வல்லமை கொண்டது உள்ளே நுழைந்தால் அற்புதங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த இருக்கும் பழனி அமராவதி ஆற்றங்கரைகளில் இங்கிருந்து சுரங்கப் பாதைகளும் இருப்பதாக கூறுகின்றனர் பல அற்புதங்கள் நிறைந்த இந்த மாமலைக்கு நமது அக்ஷயம் டிவைன் சென்டர் சார்பாக கடந்த 10 ஆண்டுகளாக சென்று வருகிறோம்.

ஒவ்வொரு முறையும் அந்த கோயிலுக்கு சென்று வரும்போது வளர்ச்சி பெற்றுக் கொண்டே இருக்கிறது ஒவ்வொரு பௌர்ணமிக்கும் இரவு 12 மணிக்கு கொங்கன் அவருக்கு சிறப்பு ஆராதனைகளும் சிறப்பு மூலிகை சாருகளும் மூலிகைகளும் சந்துகளும் தந்து வருகின்றனர். அந்த மலையே சந்திரகாந்த கல் என்பதால் மனோ ரீதியான பிரச்சினைகள் இருப்பவர்கள் உடல் ரீதியான பிரச்சினைகள் இருப்பவர்கள் அம் மலையை ஏறி இறங்கினாலே போதும் வாழ்வு வளம் பெறும் நான் என் வாழ்வை தனிப்பட்ட முறையில் பல நபர்களை அங்கு அழைத்துச் சென்று இருக்கின்றேன் சென்றவர்கள் வாழ்வில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று கொண்டே இருக்கின்றன கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.

மலையில் இருக்கக்கூடிய முக்கியமான காரியாசிரியர்கள் சிவனின் அடியார்களாக கொண்டவர்களாக மிக அன்பாக ஆனந்தமாகவே வழிநடத்துகிறார்கள் அப்பேர்ப்பட்ட கொங்கண சித்தர் இன்றும் இருக்கக்கூடிய இடத்தில் கொங்கணரின் அடியாரான நேரடியாக தம்புரான் சித்தரின் ஜீவசமாதி உள்ளது சமாதிக்கு யாரொருவர் செய்கிறார்களோ அவர்கள் வாழ்வில் திருப்புமுனையை நிச்சயமாக இருக்கும் அவர் களுக்கு இருக்கக்கூடிய மனபயம் பில்லி சூனியம் போன்ற தடைகள் இருந்து வெளிவருவதற்கு தம்புரான் சித்தர் வழி நடத்துவாராக.

அந்த தம்புரான் சித்தரின் முக்கியமான ஆசீர்வாதமே தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பது தான் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய தம்புரான் சித்தரின் ஆசிர்வாதமும் கொங்கண சித்தரின் ஆசிர்வாதமும் நவபாசன சூட்சும உருவத்துடன் கூடிய முருகனின் ஆசிர்வாதம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் பவுர்ணமியன்று காங்கேயத்தில் இருந்து தாராபுரம் ரோட்டில் இருக்கக்கூடிய ஊழியர் என்று சொல்ல கூடிய பொன்னூர் என்ற மாமலைக்கு வாருங்கள் சிறிய மலை தான் ஆனால் சீறிய மலை தங்க மலையாக இருந்து நம் வாழ்வில் எல்லா வளத்தையும் நலத்தையும் தரக்கூடிய அற்புதம மலை எனக்கு பல நேரங்களில் இந்த மலையில ஒளி வடிவத்தில் கொங்கணவர் காட்சி தந்திருக்கிறார் அந்தப் படத்தையும் நாங்கள் இதில் பதிவு செய்கிறோம் வாருங்கள் ஊதியூர் மாமலை பொன்னுருக்கு வந்தாள் வாழ்வே பொன்னாகும் வரும் வளங்களும் கிடைத்துக்கொண்டே இருக்கும்

Back to blog