குழந்தைகள் நம் சொல் பேச்சு கேட்க என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகள் நம் சொல் பேச்சு கேட்க என்ன செய்ய வேண்டும்?

எப்பொழுதுமே என் பையன் என் சொல் பேச்சு கேட்பது இல்லை. அவன் ஜாதகத்தை நீங்கள் பார்க்கவேண்டும் என்று கேட்டிருந்தார்கள். அதற்கு நான் கேட்டேன் அந்த குழந்தைக்கு எவ்வளவு வயதாகிறது என்று அவர்கள் நான்கு வயது ஆகியது என்று கூறினார்கள். ஒரு நாலு வயது குழந்தைக்கு ஜாதகம் பார்த்து ஜோதிடம் சொல்லுங்கள் என்று ஒரு பெற்றோர்கள் கேட்டிருந்தது எனக்கு ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஒரு நாலு வயதுக் குழந்தை என்பது விளையாட்டுத்தனமாக குழந்தைத்தனமாக தெய்வத்தன்மை அதிகமாக இருக்கக்கூடிய ஒரு வயது. அந்தக் குழந்தை சொல்பேச்சு கேட்க வில்லை என்றால் அந்த குழந்தையை நீங்கள் சரியாக கவனிக்கவில்லை என்று அர்த்தம். சரியாக வளர்க்கவில்லை என்று தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தையின் மீது தவறில்லை முற்றிலும் பெற்றோர்கள் மீதுதான் தவறு.

எடுத்துக்காட்டாக நான் பேசும் தமிழ் உங்களுக்குப் புரிகிறது என்றால் நான் எனது பெற்றோர்கள் சிறுவயதில் இருந்து அவர்கள் பேசிய தமிழை நான் கேட்டதால் தான் நான் உணர்ந்ததால் தான் நான் புரிந்து கொண்டதால்தான். அதுபோல எங்கேயோ மூலையில் இருக்கும் நீங்களும் தமிழில் பேசுகிறீர்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் நீங்க வளர்ந்த சுற்றுச்சூழல் தான் அது போல தான் ஒரு குழந்தையும் சுற்றுச் சூழல் எவ்வாறு அமைகிறது அது போல தான் அந்த குழந்தையும் வளர்கிறது அதன் குழந்தையின் செயல்களும் அதுபோலவே வளர்கிறது.

நீங்கள் என்ன பழக்கவழக்கங்களை வைத்து இருக்கிறீர்களோ அது போலத்தான் உங்கள் குழந்தையும் வளரும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த குழந்தைகளுக்கு மாற்றம் வரவேண்டும் என்றால் மாறவேண்டியது குழந்தைகள் அல்ல நீங்கள் தான் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு சிறுவயதிலேயே அந்த குழந்தையை பூஜை யாகம் என்று இறக்கி விட்டால் அந்த குழந்தையின் நிலைமையை சற்று யோசித்து பாருங்கள்.

என்னுடைய அலுவலகத்தில் வரக்கூடிய அனைவருக்கும் நான் சொல்வது என்னவென்றால் பத்து வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு நான் ஜாதகமே பார்ப்பதில்லை. நான் சொல்வது என்னவென்றால் இந்தக் குழந்தைகளுக்கு நல்ல அறிவை தாருங்கள் பக்தி சம்பந்தமான விஷயங்களை கற்றுத் தாருங்கள் அந்தக் குழந்தைகளுக்கு இறைவழிபாட்டை சொல்லித் தாருங்கள் ஒழுக்கத்தைப் பற்றி சொல்லித் தாருங்கள். எப்படி ஒருத்தரிடம் அன்பு செலுத்துவது எப்படி ஒருவருக்கு உதவி செய்வது என்று இந்த மாதிரியான விஷயங்களை நீங்கள் சொல்லித் தருவது அந்த குழந்தையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

குழந்தையின் மீது நல்ல சொற்களே விதைப்பது அந்த குழந்தையின் ஜாதகத்தில் உள்ள தடைகள் கூட நீக்கும். ஆகவே குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்று சொல்லாதீர்கள் குழந்தையின் பேச்சை நீங்கள் கேளுங்கள் ஏனென்றால் நீங்கள் என்ன பேசுகிறீர்களோ அதைத்தான் குழந்தையும் பேசும்.

இன்னொரு நபர் என்னிடம் கேட்டிருந்தார்கள் எங்கள் பையன் கெட்ட வார்த்தை அதிகமாக பேசுகிறான் என்று அதற்கு நான் கூறியது உங்கள் பையன் கெட்ட வார்த்தை பேசவில்லை கேட்ட வார்த்தையை பேசுகிறான். அதற்கு முற்றிலும் காரணம் அவன் சுற்றுச்சூழலை என்று சொன்னேன். அவனை சுற்றி கெட்ட வார்த்தை பேசும் நபர்கள் அதிகமாக உள்ளார்கள் அதனால் தான் அவனும் அந்த வார்த்தையை பேசுகிறான்.

ஆகவே எனது அருமை நண்பர்களே அன்பர்களே இனி உங்கள் குழந்தையை மாற்றுவதை விட்டுவிட்டு நீங்கள் மாறுங்கள் நீங்கள் ஏதோ ஒரு சொற்களை வெளிப்படுத்த வேண்டும் என்றால் உங்கள் சுற்றுச்சூழலில் உள்ளவரை பாதிக்காதபடி வெளிப்படுத்துங்கள். மற்றவரை மாற்றுவதை விட்டு விட்டு நீங்கள் மாறுங்கள் அதுவே ஒரு பெரிய பரிகாரம். ஆகையால் வாழ்க்கையை ஆனந்தமாக வாழுங்கள் ஆனந்தமான சொற்களை வெளிப்படுத்துங்கள் அதுவே உங்கள் வாழ்வில் வெற்றியை ஈட்டித் தரும். இதை பின்பற்றி பயனடையுங்கள்…..!

வாழ்க பணமுடன் நன்றிகள் கோடி….!

Back to blog