குபேர கிரிவலம் 2020 | Gubra Girivalam 2020

குபேர கிரிவலம் 2020 | Gubra Girivalam 2020

ஓம் குபேரயா நமஹ

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

நேர்மையாளராக வாழ்ந்து வருவதாலேயே நிறைய பணம் சம்பாதிக்க முடியாமல் தவிப்பவர்கள் கோடிக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்:

அவர்களுக்கு அண்ணாமலையின் ஆசி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கட்டுரையை வெளியிடப்படுகிறது. .

அண்ணாமலைக்கு ஆண்டுக்கு ஒருமுறை செல்வத்தின் அதிபதியான குபேரன் (சூட்சுமமாக) வருவது வழக்கம்;அப்படி அவர் வரும் நேரத்தில் அவரது தலைமையில் நாமும் அண்ணாமலை கிரிவலம் வந்தால்,அண்ணாமலையாரின் அருளும்,சித்தர்களின் ஆசியும்,குபேர சம்பத்தும் ஒன்றாகக் கிடைக்கும்….

கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி தான் குபேர கிரிவலம் ஆகும்;

இந்த முறை ஞாயிறுக்கிழமை குபேர கிரிவலம் வருவதால், பச்சை நிற ஆடை அணிந்து கிரிவலம் செல்ல வேண்டும்;

13/12/2020 ஞாயிறுக்கிழமை காலை 8 முதல் 9 மணி வரை குபேர லிங்கம் இருக்கும் இடத்தில் இருந்து 3 சதுர கி மீக்குள் இருந்து வேண்டிக் கொள்ள வேண்டும்; காலை 9 மணிக்கு அங்கிருந்து கிரிவலம் புறப்பட வேண்டும்;கிரிவலத்தை அங்கேயே நிறைவு செய்ய வேண்டும்;

(காலையில் வர இயலாதவர்கள் மதியம் 3 முதல் 4 மணிவரை குபேர லிங்கம் இருக்கும் இடத்தில் வேண்டிக் கொள்ளலாம்;அதன் பிறகு,மாலை 4 மணிக்கு அங்கிருந்து கிரிவலம் புறப்பட வேண்டும்;இரவு 12.31க்குள் கிரிவலத்தை குபேர லிங்கத்தில் நிறைவு செய்திருக்க வேண்டும்;அதன் பிறகு அமாவாசை ஆரம்பமாக இருக்கிறது)

கிரிவலம் முடித்த பிறகு,அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்யலாம்;

அந்த ஒரு மணி நேரம் வரை குபேரலிங்கம் இருக்கும் பகுதியில் இருந்து நமது கோரிக்கைகளை நினைத்து குபேரலிங்கத்திடம் வேண்டிக்கொள்ள வேண்டும்;மாலை அங்கிருந்து கிரிவலம் புறப்பட வேண்டும்;

கிரிவலத்தை குபேரலிங்கத்திலேயே நிறைவு செய்ய வேண்டும்;பிறகு, அங்கிருந்து ஆட்டோ பிடித்து நமது தங்கும் விடுதிக்குச் செல்ல வேண்டும்;குபேரலிங்கத்தில் நிறைவு செய்யும் போது,இரவு 11 முதல் 12 மணி ஆகியிருக்கும்;

விடிந்ததும்,வேறு எங்கும் (உறவினர் வீடு,வேறு ஆலயங்கள்) செல்லாமல் நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்;அப்படி சென்றால் மட்டுமே குபேர கிரிவலம் சென்றமைக்கான முழுப்பலனும் நமக்குக் கிட்டும்;

கடந்த 8 ஆண்டுகளில் ஒரே ஒருமுறை இந்த கிரிவலத்தில் கலந்து கொண்டவர்களுக்குக்கூட பலவிதமான நன்மைகள் கிடைத்திருக்கின்றன;

மழை மற்றும் புயல் காலமாக இருப்பதால்,தகுந்த முன் ஏற்பாடுகளுடன் வருவது நன்று;

வாழ்க்கையில் சாதாரண நிலையில் இருந்தவர்களுக்கு ஒரு நிரந்தரவேலை அல்லது தொழில் அமைந்திருக்கிறது;

பலருக்கு தொழிலில் அமோக வளர்ச்சி கிடைத்திருக்கிறது;

பலர் தமது சக்திக்கு மீறிய கடன் வாங்கி பல ஆண்டுகளாக திண்டாடியிருப்பர்;அவர்களுக்கு அடுத்த ஒரு வருடத்திற்குள் அத்தனை கடனும் தீருமளவுக்கு வருமானம் கிடைத்திருக்கிறது;

பூர்வ புண்ணியம் மிகுந்த ஆத்மாக்கள் வெகு சிலருக்கு குபேரனின் தரிசனமும் கிடைத்திருக்கிறது;அதனாலேயே.அவர்கள் கோடீஸ்வரர்கள் ஆகியிருக்கின்றனர்;

இன்றைய கால கட்டத்தில் நாம் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் பணம் நமக்கு அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது;கொஞ்சம் அதிகமாகவே பணம் தேவைப்படுகிறது;

நேர்மையாளராக வாழ்ந்து வருவதாலேயே நிறைய பணம் சம்பாதிக்க முடியாமல் தவிப்பவர்கள் கோடிக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்:

அவர்களுக்கு அண்ணாமலையின் ஆசி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கட்டுரையை வெளியிடப்படுகிறது. …

சித்தர்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த தெய்வீக ரகசியத்தை பொது மக்களின் நன்மைக்காக 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட ஜோதிடப் பேராசிரியர்(சிவத்திரு) பி எஸ் பி ஐயா அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்!!!

ஓம் அகத்தீசாய நமஹ!
ஓம் அருணாச்சலாய நமஹ!
ஓம் குபேரயா நமஹ

இறைபணியில்
அக்ஷ்யம் டிவைன் சென்டர்
ஸ்ரீ குபேர குருஜி
ஸ்டார் ஆனந்த் ராம்
98946 24425 & +91 99769 24786
www.drstaranandram.com

Back to blog