கிருஷ்ண ஜெயந்தி 2021

கிருஷ்ண ஜெயந்தி 2021

கோகுலாஷ்டமி_முன்விபரங்கள்….

ஸ்ரீ கிருஷ்ணரின் #5248 வது பிறந்த தினத்தை கொண்டாடவிருக்கிறோம்.அதன்படி சில முக்கிய விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை கொள்கின்றேன்.

சரியான பூஜை நேரம் மற்றும் விதிமுறைகள் என்பன பற்றியும் கூறுவதற்கான சிறப்பு பதிவு இது.

கண்ணா, கிருஷ்ணா என்றாலே நம் மனது ஆனந்தத்தில் ஆழ்ந்திடும். அப்படிப்பட்ட கிருஷ்ண பரமாத்மா அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி தினத்தை கொண்டாடா தயாராவோம்.

கிருஷ்ணஜெயந்தி_2021எப்போது?

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்ததாகக் ஜென்மாஷடமி கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கடைப்பிடிக்கப்படுகிறது.

, கிருஷ்ணர் இரவில் தான் பிறந்தார் என்பதால் வட இந்தியர்கள் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்ற பெயரில் இரவில் பூஜை புனஸ்காரம் செய்யப்படுவது வழக்கம்.

கிருஷ்ணருக்குபூஜைகள்செய்யசரியானநேரம்

அஷ்டமி திதி ஆகஸ்ட் 30ம் தேதி காலை 1.57 மணிக்கு தொடங்குவதால் அதன் பின்னர் எமகண்டம், குளிகை, ராகு காலம் தவிர்த்து எப்போது வேண்டுமானாலும் அபிஷேகம், பூஜை புனஸ்காரம் செய்ய உகந்த நேரமே.

குறிப்பாக அந்த நாளில் வரக்கூடிய நல்ல நேரம், கெளரி நல்ல நேரம் மிகவும் உகந்ததாக பார்க்கப்படுகிறது.

நல்ல_நேரம்

காலை 6.00 முதல் 7:30 மணி வரை

மாலை 4:45 மணி முதல் 5.45 மணி வரை

இந்த நேரங்கள் பூஜை செய்ய மிகவும் உகந்தது.

வட இந்தியர்கள் பெரும்பாலும் இரவு 12 மணிக்கு மேல் கிருஷ்ண சிலைக்கு அபிஷேகம், பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.

கிருஷ்ணவழிபாட்டில்இடம்பெற_வேண்டியது

கிருஷ்ணருக்கு வெண்ணெய் உட்பட இனிப்பு பலகாரங்கள் பிடிக்கும். அதனால் நம்மால் முடிந்த அளவு இனிப்புகளை செய்து வழிபடுவதோடு, பூஜையில் வெண்ணெய் இடம்பெறுவது அவசியம்.

அதே போல் குசேலனின் அன்பை அவர் கொண்டு வந்த அவல் மூலம் வெளிப்படுத்தினார். அதனால் எந்த ஒரு பலகாரத்தையும் செய்ய முடியவில்லை என்ற நிலை இருப்பவர்கள் கலங்காமல் பூஜையில் அவல், வெண்ணெய் வைத்தாலே கிருஷ்ண பரமாத்மா மனதார ஏற்றுக் கொள்வார்.

கிருஷ்ணதினத்தில்செய்ய_வேண்டியது என்ன?

இந்த அற்புத தினத்தில் கிருஷ்ணரையே நினைத்து உண்ணா விரதமிருந்து அவரது நாமங்களை சொல்லுவதும், கிருஷ்ணர் குறித்த பாடல்கள் பஜனையாகப் பாடி வழிபடுவது வழக்கம்.

கிருஷ்ணர் அருளிய கீதை உபதேசத்தை பாராயணம் செய்யலாம்.

பொதுவாக ஏகாதசி விரதமுறைகளையும் கடைப்பிடிக்கலாம்.எமது ஏற்றம் தரும் ஏகாதசி ஆல்பமில் உள்ள பதிவுகளை இதற்காக நீங்கள் வாசிக்கலாம்.

கிருஷ்ண அன்பர்கள் அனைவருக்கும் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி முன்கூட்டிய வாழ்த்துக்கள்…..

ஸ்ரீ கிருஷ்ண கோவிந்த ஹரே முராரி
ஹே நாத் நாராயண வாசுதேவா…..

Back to blog