காயத்திரி ஜெபம் சூச்சம ரகசியம்

காயத்திரி ஜெபம் சூச்சம ரகசியம்

காயத்ரி மந்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது. காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். காயத்ரி மந்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.

பிரம்மதேவன் புஷ்கரம் என்ற புண்ணிய பூமியில் ஒரு பெரிய யாகத்தை தொடங்கினார். அந்த யாகத்தின் போது தன்னுடைய சக்தியினால் ஸ்ரீ காயத்ரி தேவியை சிருஷ்டித்தார். காயத்ரி சிகப்பு நிறமாகத் தோற்றம் கொண்டவள், 5 திருமுகங்களையும், 10 திருக்கைகளையும் கொண்டவள்.

மந்திரம்:

ஓம் பூர்புவஸ் ஸுவ
தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோதேவஸ்ய தீமஹி
தியோயோன் ப்ரசோதயாத்

இதை சொல்வதால் கொடிய வினைகள் அகலும், உடல் பலம், மனோபலம் கூடும். 24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு.

இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது. காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம்.

காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது. மனம் ஒரு புறம் எதையோ நினைத்துக் கொண்டிருக்க வாய் மட்டும் இந்த மந்திரத்தை 1008 அல்லது 108 தடவை உச்சரித்தால் பலன் கிடையாது.

முறையாக 27 தடவை முழு மன ஒருமைப்பாட்டுடன் கூறினால் மட்டுமே பலன் கிடைக்கும். காலையில் கிழக்கு முகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு இரு கைகளையும் முகத்திற்கு எதிராகக் கூப்பிக் கொண்டும், மதியம் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு கைகளை மார்புக்கு எதிரே கூப்பிக் கொண்டும்,

மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு சமமாக கூப்பிக் கொண்டும் ஜபம் செய்ய வேண்டும். தினமும் குறைந்தது 108 முறை ஜபிக்கவும். ஆபத்துக் காலத்தில் 28 அல்லது 10 தடவை ஜபிக்கவும்.

வேதத்தின் மூலாதாரமாக காயத்ரி மந்திரம் திகழ்கிறது. விஸ்வாமித்திரரின் தவத்தால் மகிழ்ந்த காயத்ரிதேவி மந்திரத்தை அவருக்கு உபதேசித்தாள். உலக நன்மையைக் கருத்தில் கொண்டு அவர் அதை நமக்கு வழங்கினார். விஸ்வாமித்திரரிடம் காயத்ரி மந்திர உபதேசம் பெற்றதாகேயே ஸ்ரீராமபிரான் இராவணனை வென்றதாகவும் செல்லப்படுகிறது.


கய்த்ரி மந்திரத்தை தாளம் தப்பாமல் கூறி தியானித்தால் பெரும் பலன் உண்டு. காப்பார்றும் எனப் பொருள்படும் அன்னை கயத்ரி தனது அபய கரங்கலால் நமது பயத்தைப் போக்கியருளவாள். நாடு சுபிட்சமடையவும் கொடிய நோய்கள் அகலவும் காயத்ரி மந்திரம் உதவும்.

நன்றி நன்றி நன்றி 🌞
வாழ்க வெல்க வளர்க 💸

வாழ்க பணமுடன் 💸
ஸ்ரீ குபேர குருஜி
Dr.Star Anand ram
பணவளக்கலை
Akshyum Divine Center
www.drstaranandram.com
🕉🕉
https://www.youtube.com/user/MrStaranand

Back to blog