காகத்திற்கு உணவு அளிப்பதால் ஏற்படும் நன்மை என்ன செல்வ ரகசியம்

காகத்திற்கு உணவு அளிப்பதால் ஏற்படும் நன்மை என்ன செல்வ ரகசியம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

முன்னோர்களின் வழிபாடு என்றால் என்ன. அந்த முன்னோர்களை வழிபடுவது இருக்கு சூட்சமமான நாட்கள் எது. நம் முன்னோர்கள் என்றாலே நம் பித்ருக்கள் என்று சொல்கின்றோம். அந்த முன்னோர்களை நாம் காகம் வடிவில் பார்ப்பதுதான் நம்முடைய வழிமுறையே.

ஏன் நாம் காகத்தை சொல்கிறோம் என்று தெரியுமா ஏனென்றால் காகம் இயற்கை மரணம் அடையாது. அதுமட்டுமல்லாமல் காகம் கூட்டத்தோடு தான் அமர்ந்து உணவு உண்ணும் மனிதன் என்பவனும் அவ்வாறுதான் தான் மட்டும் உண்ணாமல் தன்னை சுற்றியுள்ளவர்கள் அனைவரையும் உணவளித்து உணவு உன் பவன் தான் மனிதன்.

அதனால் தான் மனிதனின் அடுத்த பிறவி காகம் என்று நம் காகத்திற்கு உணவு அளித்து வணங்குகின்றோம்.

காகத்திற்கு உணவளிப்பதன் ஏற்படும் சூட்சமத்தை பற்றி நான் சொல்கின்றேன்.

பித்ருக்களின் ஆசீர்வாதத்திற்கு வாய்ப்பிருக்கிறது

உங்கள் வாழ்வில் நடக்கும் திடீரென அசம்பாவிதங்களும் விபத்துக்களும் வீண் பழி போன்றவை ஏற்படாமல் இருக்க காகத்திற்கு உணவளிப்பதன் நல் மாற்றத்தை ஏற்படுத்தி தரும்.

செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப் பக்கமே வராது.

தீராத கடன் பிரச்சினைகள்

புத்திர போன்ற வகையான பாக்கிய போன்ற வகையான முக்கிய சம்பந்தங்கள் ஆகிய பலன்களையும் நியாயமான தேவைகளையும் இந்த காக வழிபாடு அதாவது பித்ருக்கள் வழிபாடு சரி செய்து தரும்.

உங்கள் முன்னோர்களுக்கே நீங்கள் உணவிடும் புண்ணியம் போன்ற அபரிவிதமான சக்தியை உங்களுக்கு அளிக்கும். இந்த ஜீவ ராசியான காக இனம்.

குடும்ப ஒற்றுமை வேண்டும் என நினைக்கும் சுமங்கலிப் பெண்கள் காக்கை வழிபடுவது வழக்கம்.

தன் உடன்பிறந்த வர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க. அவர்களிடமிருந்து பாசம் வெளிப்பட ஒரு திறந்த வெளி யான இடத்தில் நன்றாக சுத்தம் செய்து அதில் கோலம் போட்டு ஐந்து வகையான அல்லது ஏழு வகையான அல்லது ஒன்பது வகையான உணவுகளை படைத்துவிட்டு கா கா என்று அழைத்தால். அங்கு நிறைய காகங்களை அழைத்துக் கொண்டு காகங்கள் வந்து உணவு உண்ணும் உணவு உண்டுவிட்டு உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தும் இது தான் ஐதீகம்.

அதற்கப்புறம் வாழை இலையில் பொரி பொட்டுக்கடலை வாழைப் பழங்கள் வெற்றிலை பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள் இதனால் உடன்பிறந்த சகோதரர்கள் ஒற்றுமை வெளிப்படும் என்பது பெண்களின் நம்பிக்கை.

மேலும் காக்கை வழிபடுவதன் மூலம் சனி பகவானையும் எமனையும் வழிபட்ட மாதிரி காகம் சனி பகவானின் வாகனம் காக்கை உணவளிப்பது சனி பகவானுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

காக்கைகள் நூல் புறமும் பரிமளம் மாணிக் காக்கையும் அண்டங்காக்கை என சில வகைகள் உண்டு. காக்கைகள் இடம் உள்ள தந்திரம் வேறு எந்த பறவைகளிடம் காணமுடியாது. எமதர்மன் காக்கை உருவம் எடுத்து மனிதர்களிடம் சென்று அவர்களின் நிலையை அறிவார்.

அதனால்தான் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வார் என்று ஐதீகம். காலையில் நாம் எழுவதற்கு முன் காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலைப் பார்த்து காகம் கரைந்தால் நமக்கு நல்ல பலன் உண்டு.

வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவு நிச்சயமாக இட வேண்டும்.

எனவே காக்கை வழிபாடு சனி பகவானின் வழிபாடு எமன் வழிபாடு முன்னோர்களின் வழிபாடு.

ஏதாவது ஒரு உயிரினத்திற்கு உணவளிக்கும் போது அது மனதார வாழ்த்துக்களை தெரிவிக்கும். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்று சொல்வார்கள் அது போல அந்த உண்டி என்கின்ற உணவை நாம் காகங்களுக்கு கொடுக்கின்ற அதன் மூலமாக நம் முன்னோர்கள் மற்றும் எமன் சனிபகவான் ஆகியோர்கள் மனமகிழ்ந்து நமக்கு இந்த பிரபஞ்சத்திடம் இணைந்து நம் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளும் தடைகளையும் நீக்கி நம் தேவைகளை நமக்கு தருவார்கள்.

காகத்தை நாம் வணங்குவோம் பிரார்த்திப்போம் உணவளிப்போம் நிச்சயம் நம் வாழ்வில் நல்லது ஏற்படும்.

நல்லதை செயல்படுத்த நாம் காக வழிபாட்டை ஒவ்வொரு இல்லங்களிலும் செய்வோம் சகல ஐஸ்வரியங்களையும் பெருக்குவோம்.

வாழ்க பணமுடன்!

நன்றிகள் கோடி!

Back to blog