அனைத்து சக்தி தெய்வத்துக்கும் நன்றி நன்றி நன்றி நன்றிகள் கோடி. ஆம் நான் சக்தி தெய்வம் என்று சொல்லக் கூடியவர்கள் பெண்கள். பெண்கள் தான் நம் கண்கள், பெண்கள் தான் நம் சக்தி பெண்கள்தான் பஞ்சபூதம் பெண்கள்தான் அனைத்தும். எனது பயிற்சி வகுப்பில் நான் அடிக்கடி சொல்லக் கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் யாரொருவர் நம் வீட்டில் உள்ள பெண்களை மதிக்கிறார்களா அவர்கள் வீட்டில் செல்வம் பெருகும் அது தாயாக இருந்தாலும் சரி தாரமாக இருந்தாலும் சரி சகோதரியாக இருந்தாலும் சரி வணங்க வேண்டிய ஒரு தெய்வம் பெண்கள்.
ஏனென்றால் இந்த உலகில் உருவாக்கக்கூடிய சக்தி படைத்த ஒரே ஒரு தெய்வம் என்றால் பெண்கள்தான் அந்தப் பெண்ணை மதிக்கக்கூடிய சமூகமும் அந்தப் பெண்ணை போற்றக்கூடிய நாடும் தான் வளர்ச்சி அடையும். அதனால்தான் நம் பாரத நாட்டை நம் பாரதத் தாய் என்று சொல்கிறோம்.
நம் ஊரில் உள்ள மலைகளையும், நதிகளையும் ஏன் பெண்கள் பெயர் வைத்திருக்கிறோம் என்றால் உருவாக்கக் கூடிய சக்தி அவளிடமே இருக்கிறது. ஒரு பெரிய பாரத்தை நாம் தூக்கும்போது ஒரு பெண்ணாக இருந்தாலும் சரி ஆணாக இருந்தாலும் சரி நமக்கு சக்தி இல்லை என்றுதான் குறிப்பிடுவோம். அது ஆணாக இருந்தாலும் சரி நாம் சக்தி இல்லை என்றுதான் குறிப்பிடுவோம்.
ஒரு ஆணுக்கு உள்ளே பொதுவாக 49 சதவீதம் சக்தி இருக்கிறது. ஒரு ஆண் 51% ஆண்கள் 49% பெண்ணாக இருக்கின்றான். ஒரு பெண் 51% பெண் 49 சதவீதம் ஆணாக இருக்கிறாள். அதனால் தான் நம்மை அர்த்தநாரீஸ்வரர் என்று அழைக்கின்றனர். உங்கள் வாழ்வில் நல்லது நடக்க வேண்டும் என்றால் உங்களை பெற்ற தாயை வணங்குதல், உங்களுடன் வாழக்கூடிய பெண்ணை வழங்குங்கள்.
அவர்களை நாம் போற்றவில்லை என்றாலும் பரவாயில்லை அவர்களை நாம் வாழவில்லை என்றாலும் பரவாயில்லை அவர்களை நாம் வழிபடாமல் இருந்தாலும் பரவாயில்லை. அவர்களிடம் எதிர்மறை வெளிப்படுத்த வேண்டாம். ஆகையால் பெண்களிடம் எதிர்மறையான செயல்களை சொற்களை பயன்படுத்த வேண்டாம். என்னை மதியுங்கள் உங்கள் வாழ்வு அற்புதமாகும்.
நான் என் வாழ்வில் பெண்களுக்கு மரியாதை கொடுத்து வருகிறேன். நான் என் வாழ்வில் பெரிதும் மதிக்கக்கூடிய பெண் எனது தாய். அவர்களுக்கு இந்த பெண்கள் தினத்தன்று நான் என் மனதளவில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் ஆசீர்வாதத்தை நான் வேண்டிக்கொள்கிறேன். அதன்பின் என் வாழ்வில் சரிபாதியாக இருந்து என் முன்னேற்றத்திற்கு உதவிய எனது மனைவிக்கு நன்றிகள் கோடி. எனது அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கும், எனது பயிற்சி வகுப்பில் வரும் பெண்களுக்கும், சமூக வலைதளங்களில் என்னைப் பின்பற்றும் பெண்களுக்கும் எனது மனமார்ந்த பெண்கள் தின நல்வாழ்த்துக்கள். அத்துடன் எனது கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கு அஷ்டலட்சுமிகளின் ஆசிர்வாதம் கிட்ட வேண்டும் என்றால் உங்களுடன் உள்ள பெண்களை மதியுங்கள். நன்றிகள் கோடி !