எதிரியை திட்டாதீர்கள்! ஏன்?

எதிரியை திட்டாதீர்கள்! ஏன்?

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே

தயவு செய்து உங்களது எதிரியை திட்டாதீர்கள்! என்ன ஒரு வித்தியாசமான செயலா இருக்கு என்று பார்க்கிறீர்களா.

தெரிந்தோ தெரியாமலோ நம்மைப் பற்றி தெரிந்தவர்கள், நன்கு அறிந்தவர்கள், நம் உறவினர்கள் என்று ஏதாவது ஒரு காரணத்திற்காக இதில் முறைகளை வெளிப்படுத்திக் கொண்டே தான் இருப்பார்கள். அவர்களைத்தான் நம் எதிரி என்று சொல்கிறோம்.

எதிரியை பார்த்து நீங்கள் தவறான வார்த்தைகளுமே எதிர்மறையான செயல்களும் அவர்களை பாதிக்கிறதோ இல்லையோ நம்மை நிச்சயமாக பாதிக்கின்றது. இந்த வார்த்தையை நாம் அதிகமாக உச்சரித்துக் கொண்டே இருக்கிறோம் அந்த வாழ்க்கையே நமக்கு அமையும். அது நல்ல வார்த்தைகளாக இருந்தாலும் தீய வார்த்தைகள் ஆக இருந்தாலும் சரி.

எதிரியை பார்த்து நீ நல்லாவே இருக்க மாட்ட, அழிந்து போய் விடுவ அப்படின்னு நம்ம திட்டும்போது அது அப்படியே நமக்கு நடக்கும்.

நாம் இன்னொருவர்காக வெளிப்படுத்தும் வார்த்தைகள் நம் ஆழ்மனத்திற்கு தெரியாது. நம் ஆழ்மனது அதை எப்படி எடுத்துக் கொள்ளும் என்றால் இந்த வார்த்தை இவருக்காக இவரே சொல்லிக் கொள்கிறார் என்று எடுத்துக் கொள்ளும்.

ஆகையால் எனது அருமை நண்பர்களே காரணமே இல்லாமல் அவர்கள் உங்களை எதிர்க்கலாம். நீங்கள் அவர்களை சரியாக புரிந்து கொள்ளாதது அவர்கள் உங்களைப் சரியாகப் புரிந்து கொள்ளாத காரணத்தினால் தேவையில்லாத மன சங்கடங்கள் ஆல் இருவரும் ஒருவருக்கொருவர் எதிரி ஆக்கியுள்ளோம்.

அவர்கள் உங்களைப் பற்றி எதிர்மறையான செயல்களை வெளிப்படுத்துவதும் நீங்கள் அவர்களைப் பற்றி எதிர்மறையான செயல்களை வெளிப்படுத்துவதால் உங்கள் இருவருக்கும் சண்டை நடப்பதாக இல்லை. உங்களது நல்ல மனதுக்கு கெட்ட மனதுக்கும் சண்டை நடப்பது தான் உண்மை. எவன் ஒருவனுக்கும் நல்லவன் யாருமில்லை எவன் ஒருவனுக்கு தீயவன் யாருமில்லை. எவன் ஒருவன் தன்னை எவ்வாறு நினைத்துக் கொள்கிறான் என்பதைப் பொருத்துத்தான் நம் எதிரில் இருப்பவர்கள்.

ஆகையால் எனது அருமை நண்பர்களே அன்பர்களே உங்கள் எதிரிகள் நேர்மறையான வார்த்தைகளை கொண்டு வாழ்த்துங்கள். அவர்களுக்கு அழைக்கிறது இல்லையே உங்களுக்கு கண்டிப்பாக நடந்தே தீரும்.

என்னை ஏமாற்றி அவனை நான் எப்படி வாழ்த்துவது என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்? கவலை வேண்டாம் எனத் அருமை அன்பர்களே நமக்கு மேலே ஒரு சக்தி இருப்பதை மறவாதீர்கள். எதை அவன் உங்களுக்கு விதைதானோ அவனுக்கு அது கண்டிப்பாக நடந்தே தீரும்.

யார் ஒருவருக்கு தீமைகள் தொடர்ந்து வருகிறதோ அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ தீமையை வெளிப்படுத்துகிறார்கள். யார் ஒருவருக்கு நன்மைகள் நடந்து கொண்டே இருக்கிறது அவர்கள் எப்போதும் நன்மையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு தீமை வேண்டுமா நன்மை வேண்டுமா நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

நமக்கு நாமே நண்பர் நமக்கு நாமே எதிரி என்பதை மறவாதீர்கள் இனிமேல் நம் எதிரியை திட்டாதீர்கள்.

உங்கள் வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்து இருக்கட்டும் நிலைத்திருக்கட்டும் வாழ்க பணமுடன்

நன்றிகள் கோடி

Back to blog