உங்கள் வீட்டில் POSITIVE ENERGY அதிகரிக்க

உங்கள் வீட்டில் POSITIVE ENERGY அதிகரிக்க

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே

நமது வீட்டில் எந்த இடத்திலிருந்து நேர்மறையான சக்திகள்(Positive Energy) வருகின்றது என்று பார்த்தால். இந்த உலகத்தில் காந்தசக்தி எதுவென்று பார்த்தால் இந்த நேர்மறையான சக்திகள் எந்த இடத்தில் இருந்து வருகின்றது என்று பார்த்தால் வடக்கு மற்றும் வடகிழக்கு.

இந்த வடக்கையும் வடகிழக்கை யும் நம் வீட்டில் சுத்தமாக வைத்திருந்தால் செல்வ விருத்தியடையும். குருபகவான் வடகிழக்கு நோக்கி இருந்தால் பல்வேறு நல் மாற்றங்கள் நடக்கும் என்று ஜோதிட ரீதியாக சொல்கின்றார்கள்.

ஒரு மனிதனுக்கு இயல்பாக பிராண சக்தியும் காந்த சக்தியும் வடகிழக்கு நோக்கி தான் கிடைக்கின்றது என்பது அனுபவரீதியாக குறிப்பிடப்பட்டது வீட்டில் வடகிழக்கு திசையை குரு மூலை என்றும் ஈசானிய மூலை என்றும் அழைக்கிறார்கள்.

மூக்கு அடைத்து விட்டால் மனிதன் சுவாசிக்க முடியாமல் போகும் அதுபோலவே நீங்கள் வீட்டில் வடகிழக்கு பகுதியை அடைத்து விட்டீர்கள் என்றால் உங்கள் வீட்டில் சுப நிகழ்வுகள் நடப்பது தடையாகும், எதிர்பாராத இழப்புகளும் இறப்புகளும் கூட ஏற்படலாம்.

உங்களது அலுவலகமாக இருந்தாலும் சரி உங்களது இல்லமாக இருந்தாலும் சரி வடகிழக்கை அடைத்து வைக்காதீர்கள். வடகிழக்கில் நேர்மறையான விஷயங்களை வைப்பதும் தெய்வீக படங்களை வைப்பதும், குபேர மகாலட்சுமி படங்களை வைப்பதும் செல்வத்தையும் மற்றும் நன்மையை ஏற்படுத்தி தரும்.

இவ்வாறு வைப்பதன் மூலம் வடகிழக்கில் இருந்து வரக்கூடிய பிரபஞ்ச சக்தி காந்த சக்தி அனைத்துமே நம் வாழ்வில் செல்வம் மாற்றத்தையும் நல்ல மன மாற்றத்தையும் கொடுக்கும்.

ஆகையால் அன்பு அன்பர்களே வடகிழக்கை அடைத்து வைக்காதீர்கள் அது உங்களுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

இதை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள்

நன்றிகள் கோடி

வாழ்க பணமுடன்

Back to blog