இந்து மதத்தை பொல்லுங்கு பேசுபவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். மிக முக்கியமாக
நம் மதத்தில் இருந்து நம்மையே குறைகூறுபவர்களுக்கு
எங்களை பெருமை படுத்த இந்த பதிவு இல்லை
எங்களை சிறுமை படுத்தியதால் எங்கள் கடலில் இருந்து சில துளிகளை மட்டுமே பகிர்ந்து உள்ளேன்
எந்த மாற்று மதத்தில் உள்ளவறுகளும் தன் மத கருத்துக்களை விமர்ச்சிப்பது இல்லை அப்பிடியே அவர்கள் விமர்ச்சித்தாள் அவர்களே இல்லாமல் போவதும் உண்டு.
விமர்ச்சித்தாலும், கிண்டல் செய்தாலும் , கேவலப்படுத்தியும்
அமைதியை இருப்பதிலேயே புரிந்து கொள்ள வேண்டும் என் மதத்தின் சிறப்பு , அழகும் , பெருமையும் , பெரும் தன்மையும்.
அன்பே சிவம் என்றும் வாழ்பவர்கள் நாம்
கடவுளை நம்பு / நம்பாதே
வழிபாடு / வழிபடாதே
கோவிலுக்கு வா / வராமுலும் இரு
முதலில் மத , பிதா , குரு , வணங்கு பிறகு குருவின் வழிகாட்டலில் தெய்வத்தை வணக்கும்
அதற்கு பிறகு ,
தாயை வணங்கு தாரத்தையும் வணங்கு
முன்னோர்களையும் வணங்கு பெரியோர்களையும் வணங்கு
குழந்தையையும் வணங்கு
தாய் மொழியை தமிழை வணங்கு
மெய்யையும் உணர்ந்து மெய் எழுத்தை
உயிரையும் உணர்ந்து உயிர் எழுத்தை வணங்கு வாழ் என்று வாழும் மதம் என் மதம்
புறம் + நான்கு + நூறு = புறநானூறு
அகம் + நான்கு + நூறு = அகநானூறு
என்று கற்றலை தருவது என் மதம்
காலத்தை வணங்கு , செய்யும் காரியத்தை வணங்கு உண்ணும் உணவையும் வணங்கு
செய்யும் தொழிலையும் வணங்கு
வசிக்கும் வீட்டையும் வணங்கு
வளர்த்தும் ஐந்து அறிவு நாயையும் , பசுவையும் ,
குதிரையையும் , மயிலையும் முன்னர் வாழந்தவர்கள் என்று கருதும் காக்கையும் வணங்கு
அன்னதானம் செய்து அன்பு செய்து
வானையும் மண்ணையும் பொன்னையும்
வருவதையும் வரப்போவதையும் அன்னதானம் செய்து அன்பு செய்து
ஆடி , பாடி , நடந்து
மலையேறி , மலையை சுற்றி , வனத்தை , மரத்தை ஆனந்தமாய்
கணீர்மல்கி மனம் உருகி வணங்கும் மதம் என் மதம்.
புறத்தில் உள்ள சூரியனை வணங்கு , சந்திரனையும் வணங்கு நவக்கிரகம் , 27 நட்சத்திரங்கள் அண்ட , பேரண்ட , பகிர் அண்டம் என்று பறந்து விரிந்த பிரபஞ்சத்தை
அகத்தில் உணர்ந்து மெய் ஞானியை
மாறவும் வழியிருக்கும் மதம் என் மதம்
இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறார்
கண்களுக்கு அகப்படாது அந்த துகள்கள் அகத்தில் மட்டுமே உணர முடியும்
உருவ கற்சிலைகள் அனைத்தும் அருவமாய் தன்னை உணர்வே.
வணங்குவது மட்டும் என்மதமே அல்ல
தன் உள் உணர்ந்து தானே கடவுளை மாறவும் வழிமுறை இருக்கும் மதம் என் மதம்
கட + உள் = கடவுள் என்பார்கள்
என் அய்யன் திருவள்ளவர் என் கடவுளை பற்றி வெளிப்படுத்தியது
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
விளக்கம் 1:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
விளக்கம் 1:
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
விளக்கம் 1:
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
விளக்கம் 1:
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.
நம்பிக்கை என் கடவுள்
பல அரசுகள் போர் நடத்தியும் பல விஷயங்களை அளித்தும் மாற்றியும் இன்னும்
அழியாமல் இருக்கும் மதம் என் மதம்
எல்லா உயிரும் இன்புற்று வாழ்க
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று என்கிறது
என் மதம்
எதிலும் குறை சொல்லி வாழ்வதை தவிர்த்து வாழவும்.
எங்களுக்கு எல்லா மதமும் சம்மதம் தான்
ஆனால்
ஆனால் என் மதத்தை குறை கூறினால்
என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆழ்ந்த பசியில் அடிவயிற்றில் எரியும் அக்னியின் மீது சத்தியமிட்டு சொல்கிறேன்.
பகுத்தறிவு என்பது எதிர்ப்பதோ, மறுப்பதோ அல்ல.
அன்பின் வழி தன் வாழ்வை உத்தமமாக வாழ்ந்து காட்டுதலில் உள்ளது பகுத்தறிவு.
எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே
நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே
மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே
அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாக விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை, அவரது தனிப் பெருங்கருணையை வணங்குவது என் வாழ் நாள் பாக்கியும்
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என் இறைவா
பகைவருக்கும் அருளும் உன் அருளை
இவன் இறையை உணர துடிக்கும் இன்னோரு இறை
அருட்பெருஞ்ஜோதி Dr.ஸ்டார் ஆனந்த் ராம்
நம்பிக்கை என் கடவுள்
ஆனந்தம் பொங்கட்டும் அன்பு வளரட்டும்
இந்த பதிவு 2018ல் நான் பதிவு செய்தது
மீண்டும் இப்போது
வாழ்க பணமுடன்
நன்றிகள் கோடி.
தயவு செய்து இந்த தகவலை பகிரவும்.