அழகு அளவு ஆழம்

அழகு அளவு ஆழம்

அழகு அளவு ஆழம் -
அது தான் வாழ்வின் பரிபூரண வெற்றி

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே

அழகு அளவு ஆழம் இதை ஒவ்வொரு செயலையும் நாம் செய்யவேண்டும் அவ்வாறு செய்யும் பொழுது நம்மை அறியாமல் அந்த செயல் தெய்வீகத் தன்மையுடன் வெற்றிகரமாக அமையும். அதென்ன தெய்வீக தன்மை?

இந்தப் பதிவு என்ன கடவுள் நம்பிக்கை பற்றிய. இல்லை. நம்மை விடவும் பெரிய சக்தி உள்ளது என்று நாம் அனைவரும் நம்புகிறோம். அதான் நம்ம தெய்வம் என்று சொல்கிறோம். இதை தனிப்பட்ட முறையில் அவர் அவர்கள் பெயரை வைத்துக் கொள்கிறார்கள் அது தெய்வமாக இருக்கலாம் நம்பிக்கையாக இருக்கலாம் அசுரனாக இருக்கலாம் சாத்தானாக இருக்கலாம் அதற்குப் பெயர் என்ன வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்.

செய்யும் செயல் அழகு ஆழம் ஆனந்தம் இதை யார் ஒருவர் தெளிவாக செய்கிறார்களோ அவர்கள் வெற்றிகரமாக அமைய வாய்ப்பு இருக்கிறது

உங்களுக்கு கொய்யாபழம் பிடிக்கும் என்று வைத்துக்கொள்வோம். அந்த கொய்யாப் பழங்களை தினமும் உணவாக கொடுத்தால் என்ன ஆகும் அதை வெறுத்து ஒதுக்கி விடுவீர்கள்

இதுவே உங்களுக்கு பிடித்த கொய்யாப்பழம் ஒரு நாளைக்கு ஒரே ஒரு முறை ஒன்று மட்டும் தந்தால் அதை எவ்வளவு ரசிச்சு ருசிச்சு உண்பீர்கள்.
ஒரு ஆனந்தம் கிடைக்கும்!

அது போல ஒவ்வொரு செயலையும் நிறைய செய்யணும் அப்படின்னு யோசிக்கிறது விட்டுட்டு ஒரு செயலை நன்கு செய்யணும் அப்படின்னு சொல்லி இருக்காங்க பெரியவங்க.

அதாவது ஒரு செயலை எடுத்தீங்களா அந்த செயலை எவ்வளவு அழகாக செய்ய முடியும் எவ்வளவு பியூட்டிஃபுல் செய்ய முடியுமோ அவ்வாறு செய்யுங்கள். அழகாக செய்வது என்றால் நாம் அதை செய்ததற்குப் பிறகு மீண்டும் ஒருவர் அந்த விஷயத்தை விட ஒரு படி மேல செய்யவே கூடாது அத மனசுல வெச்சுட்டு செய்ய வேண்டும்.

இதற்குப் பிறகு எவராலும் இந்த செயலை மேம்படுத்த முடியாது என்றவாறு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது கடவுளே வந்து செய்தாலும் இதைவிட சிறப்பாக செய்ய முடியாது என்ற நம்பிக்கையுடன் செய்ய வேண்டும். அதற்கப்புறம் அதில் உங்களுக்கு வெற்றி கிடைக்குதோ தோல்வி கிடைக்குதோ பணம் வருதோ இல்லையோ இதெல்லாம் பொருட்படுத்தாமல் ஆனந்தமாக செய்யுங்கள்.

ஏனென்றால் ஆனந்தமாக ஒரு செயலை செய்யும் பொழுது அதுவே உங்களுக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தரும். இன்று முதல் இந்த ரகசியத்தை மனதில் வையுங்கள் அது சாப்பிடுவதாக இருந்தாலும் சரி மூச்சு விடுவதாக இருந்தாலும் சரி விளையாடுவதாக இருந்தாலும் சரி தொழில் செய்வதாக இருந்தாலும் சரி இச்செயலை செய்யும் பொழுது அச்செயலாய் நீங்கள் கரைந்து விடுங்கள்.

அவ்வாறு கரையும் பொழுது அழகாய் செய்யுங்கள் ஆழமாய் செய்யுங்கள் ஆனந்தமாய் செய்யுங்கள் இவ்வாறு செய்யும்பொழுது மாபெரும் வெற்றி உங்களுக்கு காத்துக்கொண்டிருக்கிறது. இதை மனதில் வைத்துக் கொண்டு இன்று முதல் இதை அனைவரும் கடைபிடிப்போம். தெய்வத்தை வணங்குகிறோமோ இல்லையோ ஆனால் தெய்வமாக மாறிவிட முடியும் அதுதான் நம்பிக்கை என்ற தெய்வமாய் மாறலாம். கருமமே கண்ணாய் இரு

நம் பாட்டன் கூறிய அற்புத குறள்

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
பால்: பொருட்பால் / குறள் 666
அதிகாரம் வினைத்திட்பம்

எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்
உங்கள் எண்ணங்கள் அனைத்தும் இனிமேல் வள்ளுவர் கூறிய மேற்கண்ட குறள் போல் செய்யும் செயல் அழகு ஆழம் ஆனந்தம் என அனைத்திலும் உங்கள் எண்ணத்தை குவித்து செயல்படுங்கள் வெற்றி நிச்சயம்

வளம் பெறுங்கள். வாழ்க பணமுடன்
நன்றிகள் கோடி

விஸ்வயோக ஸ்ரீ குபேர குருஜி
ஸ்டார் ஆனந்த் ராம்

Back to blog